பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இறால்‌

48 இறால் இந்தியாவில் இம்முறை இறால் வளர்ப்பு கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் வழக்கிலுள்ளது. கேரளாவில் கடற்கரையோர வயல்களில் மேற் கொள்ளப்படும் பாரம்பரிய விரிவு முறை வளர்ப்பு, தனித்தன்மையுடையது. பொக்கலை என்னும் ஒரு பயிர் உவர் நீரைத் தாங்கி வளரும். ஒரு பயிராக நெல்லும், மறுபயிராக வளர்க்கக் கூடிய இறாலும் கொண்ட வயல்களின் பரப்பு, ஏறத்தாழ 4,500 ஹெக்டேர்களாகும். இவை, கடல்நீர் ஏறிப்பாயும் வேம்பநாடு ஆற்றுடன் இணைந்தவை. இத்தகைய வயல்கள், உவர் நீர் பாயும் காலமான அக்டோபர்- மே வரை குத்தகைக்கு எடுக்கப்படுகின்றன. கடல் நீர் கலந்த உவர் நீர் இவ்வயல்களுள் ஏறிப்பாயும் போது அத்துடன் வளர்ப்புக்கான இறால் குஞ்சு களும் வயல்களுள் வந்து சேர்கின்றன. ஒவ்வொரு முறையும் கடல் நீர் ஆற்றில் பாயும் போது, இறால் குஞ்சுகள் வயல்களுக்குள் வந்து சேரும். இவை வெளியில் தப்பிச் செல்லாதவாறு கண்மாய்கள், மூங்கில் வலைகளால் அடைக்கப்பட்டு விடும். வயல்களில் இறால்கள் நன்கு வளரவேண்டும் என்று உணவோ உரமோ இடப்படுவதில்லை. முத லில் வயலில் பயிராகிய நெல்லின் அறுவடைக்குப் பின்னர் விடப்பட்டுள்ள நெல்தாள் ஓரளவு மட்க, அதுவே உரமாகவும், உணவாகவும் ஒட்டி வாழும் உணவு உயிரினங்களின் வளரிடமாகவும் பயன்படு கின்றது. இறால்கள், வயலிலுள்ள இயற்கை உணவை உண்டு வளர்ந்த பின்னர், டிசம்பர், மே வரை தொடர்ந்து பிடிக்கப்படுகின்றன. அமாவாசை, பௌர்ணமி காலங்களின் அதிகாலைப் பொழுதும், இரவுப் பொழுதும் இறால் அறுவடைக்கு ஏற்ற காலங்களாகும். வரை இத்தகைய இறால் வளர்ப்பால் ஆறு மாதத்துக்கு ஒரு ஹெக்டேர் பரப்பில் 500- 1,200 கிலோ இறால் உற்பத்தி செய்ய முடிகின்றது. இந்த வளர்ப்பு முறை இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடு களிலும் கையாளப்படுகிறது. ஆயினும் உற்பத்தித் திறன் இந்தியாவில்தான் மிகுதி. இம்முறை வளர்ப் பால், கேரளாவில் உற்பத்தியாகும் மொத்த இறால் களின் எடை ஓர் ஆண்டுக்கு ஏறத்தாழ நாலாயிரம் டன்னாகும். இவ்வாறு கடலோரப்பகுதி வயல்களை நெற் பயிரிடவும், உவர் நீர் புகும் காலங்களில் இறால் வளர்க்கவும் பயன்படுத்துவது பொருளாதாரத்தை மேம்படச் செய்யும் சிறப்பான வழியாகும். மிதத் தீவிர வளர்ப்பு, இறால்களின் இயற்கையான வாழிடத்திலுள்ள பகை மீன்களை நீக்கி, இறால் குஞ்சுகளுக்கு மேலுணவும் தந்து இறால் வளர்ப்பது மிதக் கடும் வளர்ப்பு முறையாகும். இம்முறை வளர்ப்பில் செய்து தரப்படும் வசதிகளும், உற்பத் திக்கான வாய்ப்பும் பாரம்பரிய முறையைவிட மிகுதி யாகவும் கடும் முறையைவிடக் குறைவாகவும் இல்லா மல் இடைப்பட்ட ஒன்றாக இருக்கும். இம்முறை வளர்ப்பு, பிலிப்பைன்ஸிலும், ஜப்பானிலும் நடை முறையில் உள்ளது. இந்தியாவில் மணக்குடியிலும், காக்கி நாடாவிலும் பின்பற்றப்படுகின்றது. கொரியா விலும், தைவானிலும் தற்போது தொடங்கப் பட்டுள்ளது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஆய்வுநிலை யில் உள்ளது. இம்முறை இறால் வளர்ப்பில் இந்தியா வின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு, ஹெக்டேருக்கு 1134 கிலோவாகும். தைவானிலும், ஜப்பானிலும் உற்பத்தித்திறன் இதைவிட கூடுதலாகும். உற்பத்தியில் காணப்படும் வேற்றுமைக்கு, வந்து சேரும் வளர்ப் பினங்களும்,அவற்றின் மொத்த எண்ணிக்கையும், பகையினக் குறைவும், வளமுமே காரணங்களாகும். தீவிர வளர்ப்பு முறை. இறால் வளர்ப்புக் குளத்தை பகையினங்களை நன்கு தயார் செய்து, நீக்கி, உரமிட்டு, மேலுணவுமிட்டு, குறிப்பிட்ட வளர்ப் பினங்களைச் சரியான அடர்த்தியில் இருப்புச் செய்து, நீரின் தரக்கட்டுப்பாட்டையும் மேற்கொண்டு, இறால் வளர்ப்பது கடும் வளர்ப்பு முறையாகும். இம்முறை வளர்ப்பு தமிழகத்தில் புலிக்காட் ஏரி, வாணியஞ்சாவடி, பரங்கிப்பேட்டை, தொண்டியக் காடு, ஏரிப்புறக்கரை, கட்டுமாவாடி, காரங்காடு, கண்ணமுனை, கீழவைப்பார், புண்ணைக்காயல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இறால் வளர்ப்பு விளக்கப் பண்ணைகளில் மேற்கொள்ளப்படுகிறது. அடைப்புகளில் இறால் வளர்த்தல். இந்தியாவில் உப்பாறுகளில் ஓத அளவு குறைவாக உள்ளதால், தானாக ஓத நீர் ஏறிப்பாயும் நிலையின்மையால் பெரும்பாலான இடங்களில், குளங்களில் இவற்றை வளர்க்க மிகுதியான வாய்ப்பில்லை. எனவே அவ் வப்போது எக்கி எந்திரங்கள் மூலம் நீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க உப்பாறுகளி லேயே, ஒரு மீட்டர் ஆழம் நீர் நிற்கும் தரமான பட்டிகளாலோ, பரப்புகளில் மூங்கில் வலைக ளாலோ, குறிப்பிட்ட பரப்பை வாத்துப் பட்டி போல் வளைத்து, அதில் இறால் வளர்க்கும் முறை தொடங் கப்பட்டுள்ளது. இதனைப் பட்டி வளர்ப்பு முறை என்பர். இதுவும் ஒரு கடும் வளர்ப்பு முறையாகும். வளர்ப்புக்காக அடைக்கப்பட்டுள்ள பரப்பினுள் நீர் எப்போதும் போல் ஓட்டமுடன் வந்து போய்க் கொண்டிருக்கும். இதனால், அடைப்பினுள் மிகுந்த அடர்த்தியில் விட்டு வைக்கப்பட்டிருக்கும் இறால் களுக்குத் தேவையான உணவும், ஆக்சிஜனும் குளங் களில் உள்ளதைவிட மிகுதியாகக் கிடைக்கும் வாய்ப் புண்டு. மேலும் கழிவுப் பொருள்களும் அடித்துச்