பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 உலோக இடைச்‌ சேர்மம்‌

660 உலோக இடைச் சேர்மம் இச்சுவர்கள் சூடாகவே இருக்கவேண்டும். ஆனால் சுவரின் கூட்டமைப்பில் வலிமையும், குறைந்த அளவு பராமரிப்பும் இருக்க வேண்டுமானால், சுவர்கள் குளிர்ந்து இருக்க வேண்டும். இதற்கெனத் தனிப் பட்ட வடிவமைப்பில் வெப்பந்தாங்கித் தீச்செங்கற் களைப் பொருத்தி, நீர்த்தாரைகளும் அமைப்ப துண்டு. உலைச்சுவர்களை ஒட்டியும் கொதிகலன்கள் வகைப்படுத்தப்படும். திண்மக் கட்டுமானச் சுவர். ஒரே மாதிரியாக உள்ளீடு எதுவுமில்லாமல், சாதாரண வீட்டுச் சுவர் போல் இருக்கும். சில சமயம் உள்ளீடற்ற வெப்பத் தடுப்பு அமைப்பும் பொருத்தப்படுவதுண்டு. காற்றுக்குளிர்விப்புச் சுவர். குளிர்காற்றுச் செலுத் தப்படும் வகையில் சுவருக்கும் கொதிகலனின் கட்டிற் கும் (casing ) இடையே உள்ளக அமைப்பு ஏற்படுத் தப்பட்டிருக்கும். இக்குளிர்காற்று, குளிர்விக்கப் பயன்படுவதால் வெப்பமடையக்கூடும். அதையும் உலையினுள் செலுத்திக் கனற்சிக்குப் பயன்படுத் தலாம். நீர் குளிர்விப்புச் சுவர். இது திண்மச் சுவருடையது. ஆனால் சுவர்கள் நீர்க்குழாய்களைக்கொண்டு முழுது மாகப் படரவிடப்பட்டிருக்கும். எரிபொருள் முழு அளவும் எரிக்கப்பட அதிகப்படியான காற்று தேவைப்படாது. உலையின் வெப்ப நிலை, சாம்பல் சிதைந்து உருகும் வெப்ப நிலைக்குக் கீழ்ப்பட்டே இருக்கும்.இம்முறையில் மிகு அளவு குளிர்வித்தலும் தடுக்கப்படும். நீர் உள்ளக - அறைச்சுவர். இவ்வமைப்பில் சுவர் களில் உள்ளக அறைகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றில் குளிர்விக்கும் நீர் செலுத்தப்படும். உரு வெப்பந்தாங்கித் தீச்செங்கல். மிகு வெப்ப நிலை யில் தனது உருவம், எடை, இயற்பியல் இயல்புகள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் நிகழாவண்ணம் தாங்கிக் கொள்ளக்கூடிய உலோகக் கலவை அல்லது மண்பொருள்களைக் கொண்டு தீச்செங்கல் வாக்கப்படுகின்றது. இதற்குப் பெரும்பாலும் எரிகளிமண் (fireclay), பளிங்கு மணற்கல் (silica). பீங்கான் களிமண் kaolin) அலுமினியத் தூள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. அதிவெப்பம் தாங்கும் குணம் இருப்பதால் அப்பொருள்கள் குறைந்த அளவு வெப்பங்கடத்தும் தன்மை பெற் றிருக்கும். அதனால் வெப்பங்கடத்தப்பட வேண்டிய பகுதிகளில் உலையின் சுவர்கள் இச்செங்கல் தவிர வேறு பொருள்களைக் கொண்டும் உருவாக்கப்படும். எளிதாகவும் விலை குறைவாகவும் இருப்பதால், எரி களிமண் வகையே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலையில் அடிக்கடி வேறுபாடு இருக்கக்கூடு மாதலாலும், சுவர்கள் வெவ்வேறு பொருள்களைக் கொண்டு எழுப்பப்பட்டிருப்பதாலும் வெப்பத்தால் ஏற்படும் விரிவாக்கம் வேறுபடக்கூடும். இதனால் சுவர்களில் வெடிப்பு ஏற்படலாம். அதைக் கூடிய விரைவில் தடுக்க, உலையைக் கட்டும் போதே ஆங்காங்கே குறைந்த அளவேனும் காற்றுச் சுழல் உண்டாக வாய்ப்பு ஏற்படுத்தி உலைச்சுவர்கள் கட்டப்படும். மின்னாற்றலை உருவாக்க, மூல ஆதாரமான நீராவியை உற்பத்தி செய்யத் திட்டமிடப்படும் கட்டிட அமைப்பே உலை ஆகும். முடிவாக வெளிப் படும் மின்னாற்றலின் பயன்தரு அளவு, சுழலியின் சுழல்வேகத்தினைப் பொறுத்து, இச்சுழலிக்குக் கிடைக்கப் பெறும் சுழல் ஆற்றல் அல்லது எந்திர வியல் ஆற்றல், நீராவியின் வெப்ப ஆற்றலிலிருந்து கிடைக்கிறது. இதற்கான நீராவி முழுமையான அளவில் சரியான அழுத்தநிலை மற்றும் வெப்ப நிலையில் உருவானால்தான் சிறந்த பயனைத் தரும். கே.ஆர்.கோவிந்தன் உலோக இடைச் சேர்மம் நூற்றுக்கணக்கான, உலோக அணுக்களை மட்டுமே கொண்ட இடைப்பட்ட உலோகச் சேர்மங்கள் இஉசே' (intermetallic compounds) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் இயைபு, பண்பு, வடிவமைப்பு, அணு அமைப்பு போன்ற பண்புகள் ஆராயப்பட்டுள்ளன. ஆய்வுகள் இந்த உலோகக் கலவைகளையும் அவற்றின் பற்பல பயன்களையும் நன்கு அறிய உதவுகின்றன. சேர்மங்களை வகைப்படுத்துதல். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் வேதிவினையால் இணையும்போது சேர்மங்கள் உருவாகின்றன. பொது வாகத் தனிமங்களை உலோகம், அலோகம் இருவகையாகப் பிரிக்கலாம். அவை இணைந்து மூவகைச் சேர்மங்களைத் தருகின்றன. என 1. அலோகச் சேர்மங்கள். H,O (நீர்) ஹைட் ரஜன் - ஆக்சிஜன் இணைப்பு 2. உலோக - அலோகச் சேர்மங்கள். N,CI (உணவு உப்பு ) சோடியம் - குளோரின் இணைப்பு 3. உலோகச் சேர்மங்கள். CuZn (பீட்டா பித் தளை) செம்பு - துத்தநாகம் இணைப்பு உலோகச் சேர்மங்கள், உலோக அணுக்களுக்கு இடையே நிகழும் வேதிவினையால் உருவாவதால் லோகச் இடைப்பட்ட சேர்மங்கள் (இ.உ.சே) என்றும் அழைக்கப்படுகின்றன. அவை