பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/690

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 உலோகக்‌ கண்ணாடி

670 உலோகக் கண்ணாடி (tape recorder) தலைமை உறுப்புகளிலும், காந்தப் புலக் காப்பீட்டுக் கருவிகளிலும் (magnetic shields) அணு உலைகளிலும் இது பயன்படுகின்றது. இந்த உலோகக் சுண்ணாடி இன்றைய நவீன தொழில் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய ஒரு புதிய நெம்புகோல் என்று உலோகவியல் அறிஞர்கள் கூறு கின்றனர். இதன் பயன் மேலும் விரிவடையலாம் என்றும். அதனால் பல்வேறு துறைகள் வியத்தகு பரிமாணங்களைப் பெறலாம் என்றும் எதிர்பார்க் கின்றனர். இதனால் உலோகக் கண்ணாடி பற்றிய ஆய்வுகள் முக்கியமடைந்து வருகின்றன. கண்ணாடியைச் சிலிகாவுடன் சோடா அல்லது சுண்ணாம்பு இவற்றைக் கலந்து உருக்கிப் பின்னர் குளிரச் செய்து ஒளி உட்புகக் கூடியதும் எளிதில் உடைந்து போசுக் கூடியதுமாக உருவாக்கப்பட்ட ஒரு திண்பொருள் எனலாம். இவ்விளக்கம் உலோகக் கண்ணாடிக்குப் பொருந்துவதில்லை. உலோகக் கண்ணாடி நடைமுறையில் பயன்படும் கண்ணாடியி லிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஓர் உலோகமும் சிலிகா கண்ணாடியும் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு திண்பொருளும் அன்று. கண்ணாடி செய்யப் படுவதைப் போன்ற வழிமுறையில் செய்யப்படுவதா லும், உலோகங்களின் ஒரு சில பண்புகளைப் பெற்றி ருப்பதாலும், இதற்கு உலோகக் கண்ணாடி என்று பெயர் சூட்டப்பட்டது. உலோகங்களும், உலோகக் கலவைகளும் பொதுவாகப் படிகப் பண்புகளைப் பெற்றிருக்கின்றன. உலோகக் கண்ணாடி அவ் வாறில்லை என்றாலும், அது உலோகங்களைப் போல வலிவானது; இழையாக நீளக்கூடியது. உருகிய ஒரு பொருள் குளிர்விக்கப்படும்போது திண்பொருளாக உறைகின்றது. சீராகக் குளிர்விக்கப் படும்போது அணுக்கள் அணி அணியாக அடுக்கப் பெற்றுப் படிகப்பொருள் ஏற்படும். ஆனால் உருக்கப் பட்ட உலோகக் கலவைப் பொருளைத் திடீரென வும், மிக விரைவாகவும் குளிரச் செய்யும்போது, இவ்வாறு திண்ம நிலையை அடைவதில்லை. மிகவும் குளிர்விக்கப்பட்ட நீர்ம நிலையைப் பெறுகின்றது. பாகுநிலைமிக்க இந்நீர்மம் மிக விரைவாகக் குளிர் விக்கப்படும்போது. அதில் உள்ள அணுக்கள் அணி அணியாக அடுக்கப்படுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் நீர்மத்தில் அணுக்கள் எவ்வாறு தாறுமாறாக உள்ளனவோ அவ்வாறே அணுக்களும் சிதறியவாறு உறைகின்றன. இவ்வாறு உறைந்தாலும் கெட்டிப்படுத்தப்பட்ட பொருள் மிகவும் வலிமையுடன் அமைகின்றது. திண்மப் பொருளின் இந்நிலையே கண்ணாடி நிலை எனப் படுகிறது. உலோகக் கண்ணாடிகளை உருவாக்கும்போது குளிர்விக்கப்படும் வீதம் ஒரு நொடிக்குக் குறைந்தது 104 பாகை கெல்வின் ஆக இருக்கவேண்டும். புதிய பல வழிமுறைகளைக் கொண்டு குளிர்விக்கப்படும் வீதத்தை இன்று நொடிக்குப் பல மில்லியன் கெல் வினாக உயர்த்தியுள்ளனர். இவ்வாறு குளிர்விக்கப் படும் வீதத்தை விரைவுபடுத்துவதால், உலோகக் கண்ணாடியின் அமைகின்றது. கட்டமைப்பு மிகவும் சிறப்பாக விரைவாகக் குளிரச் செய்து உலோகக் கண் ணாடிகளை இவ்வாறு வார்த்து எடுக்கப் பல சிறப்பு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். பொதுவாக, இன்றைக்கு ஈருருளை அமைப்பு பிழம்புச் சுழற்சி அமைப்பு பிழம்பு வடிவத்திறக்கும் அமைப்பு போன்ற முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வழிமுறைகளில் பயன்படும் உருளைகள் பொதுவாகச் செம்பால் ஆனவையாக உள்ளன. இதனால் அவை மிக விரைந்து வெப்பத்தைக் கடத்தி. பீச்சப்படும் உலோகப் பிழம்பை விரைவில் குளிர்விக் கின்றன. வழிமுறைக்கு ஏற்ப உருளையின் சுழல் வேகம் மாறுபட்டாலும், பொதுவாக உருளைகள் நொடிக்கு ஏறக்குறைய ஆயிரம் சுற்றுகள் என்ற விகிதத்தில் சுழலுமாறு அமைக்கப்படுகின்றன. இம் முறைகளால் உலோகக் கண்ணாடிப் பொருளை நாடா வடிவில் உருவாக்கிக்கொள்ள முடியும். இந் நாடாக்களின் தடிமன் பொதுவாக மேற்கொள்ளப் படும் வழிமுறை உருளையின் சுழல் வேகம் இவற் றிற்கு ஏற்ப அமையும். ஈருருளை அமைப்பில் குளிர்விப்பு வீதம் ஏறக்குறைய நொடிக்கு ஒரு மில்லி யன் பாகை கெல்வின் ஆகவும், உருவாக்கப்படும் உலோகக் கண்ணாடி நாடாவின் தடிமன் 0.1-0.01 மி.மீ ஆகவும் அமையும். பிழம்புச் சுழற்சி அமைப்பில் ஓரளவு அகலமான மேலும் தடிமன் குறைவான நாடாக்களைப் பெற முடியும். பிழம்பு வழித்திறக்கும் முறை பொதுவாக உயர்ந்த அளவு உருகு நிலை உடைய உலோகக் கலவைகளுக்கு மட்டுமே ஏற்ற வாறு இருக்கின்றது. பொதுவாக இம்முறைகளில் குளிர்விப்பு குறையும்போது, உலோகக் கண்ணாடி நாடாக்களின் தடிமன் அதிகரிக்கின்றது. அப்போது அவற்றின் உலோகக் கண்ணாடி நிலை தாக்கத்திற்கு உள்ளாகின்றது. உலோகக் கலவைகளை மட்டும் இன்று உலோகக் கண்ணாடியாக்கி உள்ளனர். தூய உலோகங்களை யும் கண்ணாடி நிலைக்கு உள்ளாக்கலாம் என்றாலும் குளிர்விப்பு வீதம் மிகவும் அதிகமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இன்றைய தொழில் நுட்பத்தின் உதவியால் இவற்றைப் பெறுவது அவ்வளவு எளிதான நடைமுறையன்று. உலோகக் கலவைகள், அவை எவ்வுலோகங் களால் ஆக்கப்பட்டிருக்கின்றனவோ, அவற்றி லிருந்து மாறுபட்ட இயற்பியல் பண்புகளைப் பெற்