பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/695

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலோகக்‌ கலவை (வேதியியல்‌) 675

அடித்து உருவாக்க முடியாது. செர்மெட் என்ற பீங்கான் உலோகக் கலவைகள் மேலும் மிக அதிக வெப்பந்தாங்கும் குணமுடையவை. சிறு விரிவுக் கலவை. இவ்வகையைச் சேர்ந்த இன்வார் என்ற உலோகக் கலவை காற்றுமண்டல வெப்பமாற்றத்தினால் சிறிதளவே விரிவடையும். எனவே கடிகாரங்களிலும், அளவீடு நாடாக்களிலும் இது பயன்படுகிறது. இதில் 64 விழுக்காடு இரும்பு, நிக்கல் உள்ளன. கோவார் என்ற பிறிதொரு கலவை யில் 54 விழுக்காடு இரும்பு, 23-30 விழுக்காடு நிக்கல், 0.6 -0.8 விழுக்காடு மாங்கனீஸ் அடங்கி உள்ளன. இதுவும் கண்ணாடியும், குறிப்பிட்ட வெப்ப அளவு வரை, ஒரே அளவு விரிவடையும் தன்மை கொண்டமையால், கசிவு இல்லாத கண் ணாடி உலோக இணைப்புச் செய்ய உதவு புகின் றன. எடுத்துக்காட்டாக, வானொலியில் பயன்படும் மின் அணுக்குழாய்களின் இணைப்புக்கால்கள் இவ்வுலோ கக் கலவையால் செய்யப்பட்டிருக்கும். காந்த உலோகக் கலவை. இதை மின்காந்தக் கலவை, நிலை காந்தக் கலவை என்று பிரிக்கலாம். மின்காந்தக் கலவைகள் மின்சாரம் பாயும்பொழுது மட்டுமே காந்தசக்தி பெறும். நிலை காந்தக் கலவை களை ஒரு முறை மின்சாரம் செலுத்திக் காந்த மாக்கினால் அது நிலையான காந்தச் சக்தியைப் பெறும். முன்வகைக் கலவைகள் மின் விசைப் பொறி யிலும் மின் விசை மாற்றிகளிலும் பயன்படுகின்றன. 5 விழுக்காடு சிலிக்கான் கொண்ட இரும்புக் கலவை இவ்வாறு மின் காந்தக்கலவையாகப் பயன்படு கின்றது. நிலை காந்தம் செய்வதற்கு 0.7 விழுக்காடு கரி, 7 விழுக்காடு மின் இழைமம் கொண்ட இரும்புக் கலவை பயன்படுகிறது. இதைவிடச் சிறந்த ஆனால் அதே சமயம் விலை அதிசமான, நிலை காந்தக் கலவையில் 35 விழுக்காடு கோபால்ட் சிறிதளவு குரோமியம் மற்றும் மின் இழைமம் அடங்கியிருக்கும். அல்நிக்கோ என்ற இன்னுமொரு நிலை காந்தக் கலவையில் 28 விழுக்காடு நிக்கல், 12 விழுக்காடு அலு மினியம், 5 விழுக்காடு கோபால்ட்டுடன் எஞ்சிய அளவு இரும்பும் அடங்கியிருக்கும். இதைக் கொல் லுவையில் அடித்து உருவாக்க முடியாது. உருக்கி வார்க்கத்தான் முடியும். று வெப்ப இணை உலோகக் கல்வை. வெவ்வேறு உலோகக் கலவைகளாலான இரு கம்பிகளின் முனை களை ஒன்றோடு ஒன்று சேர்த்து முறுக்கி, முறுக்கிய இரு முனைகளில் ஒன்றைச் சூடுபடுத்தினால், வெப்ப அளவுக்கு ஏற்ப, இரு கம்பிகளுக்கிடையே மின் அழுத்தவிசை (e .m. f) உண்டாகிறது. இக்கம்பி களுக்கு வெப்ப இணைக் கம்பிகள் (thermocouple) என்று பெயர். குரோமல் அலுமெல் என்ற இரு சுலவைகளின் கம்பிகள் 1100C வரை வெப்பத்தை அளக்கப் பயன்படும். குரோமல் என்ற கலவை அ.க.5-43அ உலோகக் கலவை (வேதியியல்) 675 90 விழுக்காடு நிக்கல் 10 விழுக்காடு குரோமியம் கொண்டது. அலுமெல் (alumel) கலவையில் 94 விழுக்காடு நிக்கல் 2 விழுக்காடு 2 அலுமினியம் உள்ளன. கான்ஸ்டண்டன் என்ற கலவையில் 45 விழுக்காடு நிக்கல் 55 விழுக்காடு செம்பு உள்ளன. இரும்பு - கான்ஸ்டண்டன், செம்பு - கான்ஸ்டண்டன் போன்ற வெப்ப இணைக் கம்பிகள் குறைந்த வெப்ப நிலையை அளக்க உதவும். 1650°C வரை வெப் பத்தை அளக்க வேண்டுமென்றால் பிளாட்டினம் கொண்ட 13 விழுக்காடு ரோடியம் (rhodium) பிளாட்டினம் வெப்ப இணைக் கம்பிகள் பயன்படு கின்றன. உலை உலோகக் அணு உலை உலோகக் கல்வை. அலுமினியம் - யுரேனியம் ஆய்வுக்கு கலவை பயன்படுகிறது. இது அலுமினியம்-யுரேனியம் இவற்றின் ஆக்சைடுகளை உருக்கியோ அவற்றின் பொடிகளை அழுத்திப் பின்னர் உருட்டாலையில் சூடான நிலையில் உருட்டியோ தயாரிக்கப்படு கின்றது. சர்க்கோனியம் வெண்மம், நீரகம் கொண்ட கலவையும் அவ்வாறே பயன்படுகிறது. இவையன்றியும் அணு உலை பயனுக்கென மேலும் பல உலோகக் கலவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. செ.லை.சாம்பசிவம் உலோகக் கலவை (வேதியியல்) ஒன்றுக்கு மேற்பட்ட உ உலோகங்கள் ஒன்று சேர்வ தால் கிடைப்பதே உலோகக் கலவை ஆகும். இவை திண்மக் கரைசலாகாவோ, உலோக இடைச்சேர்ம மாகவோ கலவையாகவோ அமைவது வழக்கம். இவ்வுலோசுக் அவற்றின் பயன் அடிப்படையிலும், இயைபின் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம். கவலைகளை, உலோகங்கள். தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் தவிர, ஏனைய உலோகக் கலவை களின் தயாரிப்புகளில் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை யாகக் சுருதப்படுகின்றன. தாமிரமும், வெள்ளீயமும் கலந்த வெண்கலம் என்னும் உலோகக் கலவை, தூய தாமிரத்தை விட வலிமைமிக்கது. இவ்வுலோகக் கலவை உலக வரலாற்றில் பெரும் பங்கு வகிக் கின்றது. நாகரிக உலகம், இவ்வுலோகக் கலவை யைப் பெரிதும் பயன்படுத்தியதால்தான், வரலாற்றில் வெண்கலக்காலம் குறிக்கப்பட்டுள்ளது. இன்று தனிம வரிசை அட்டவணையில் அனைத்துத் தனிமங்களும், மாறி மாறி இணைந்து உலோகக் கலவைகளை ஏற்படுத்துவதன் மூலமாக, பல்லாயிரக் கணக்கான உலோகக் கலவைகளைப் பெற முடிகிறது.