பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 உலோகக்‌ கார்போனைல்‌

680 உலோகக் கார்போனைல் 1.14 A இலிருந்து 1.16 A வரை உள்ளது. கார்பன் மோனாக்சைடில் C-O நீளம் 1.13A ஆகும். பிணைப்பு நீளங்கள் ஒத்திருப்பதால் கார்போனைல்களில் கார்பன் மேனாக்சைடின் பிணைப்புத் தன்மை மாறு வதில்லை. மேலும் இராமன் நிரல் மூலமாகக் கரி யணுவுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையில் முப்பிணைப்பு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிகர அணு எண் விதி (effective atomic number rule). ஒவ்வோர் உலோகமும் அதற்கு அடுத்தாற்போல் உள்ள பூஜ்யத் தொகுதித் தனிமத்தின் அணு எண்ணை அடைவதற்கு எத்தனை கார்பன் மோனாக்சைடுகளுடன் சேர முடியுமோ, அவற்றுடன் சேர்ந்து நிகர (முடிவான) அணு எண்ணைப் பெற முயல்கிறது. நிக்கல் கார்போனைலில் Ni(CO), நிக்கலின் நிகர அணு எண் கீழ்வருமாறு கணக்கிடப் படுகிறது. நிக்கல் அணு எண் = 28 நான்கு கார்பன் மோனாக்சைடு வழங்கும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை 4×2 =8 நிகர அணு எண் = 28+8 36, இது; கிரிப்டானின் (krypton) அணு எண் ஆகும். ஓர் உலோக அணு உள்ள எளிய கார்போளைல். இவற்றில் M-C-0 பிணைப்பு நேர்கோட்டில் அமைந் துள்ளது என்பதைக் கார்போனைல்களின் இருமுனை திருப்புதிறன் (dipole moment) அளந்தறிதல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Ni(CO),, Fe(CO), Cr (CO) போன்ற கார்போனைல்களின் அமைப்பு. முறையே நான்முகி (tetrabedral), முக்கோண இரு பக்க பிரமிடு trigonal bipyramid), எண்முகி (octahedral) அமைப்பைக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை X - கதிர், எலெக்ட்ரான் விளிம்பு வளைவு ஆய்வுகள் புலப்படுகின்றன. இக்கார் போனைல்களில் காணப்படும் ஆர்பிட்டால் இனக் கலப்பு முறையே sp dsp, ds'sp3 ஆகும். 3d, 4s உட்பிரிவு ஆற்றல் மட்டங்களின் வேறுபாடு மிகச் சிறிதளவாக இருப்பதால் 4s எலெக்ட்ரான்கள் 3d ஆர்பிட்டாலை நிரப்பச் சென்றுவிடுவதால் 4s ஆர்பிட்டால் வெற்றிடமாகிவிடுகிறது. எனவே sp இனக்கலப்படைந்து, நிக்கல் நான்கு CO மூலக் கூறுகளுடன் சேர்ந்து Ni(CO), என்ற அணைவுச் சேர்மத்தை உண்டாக்குகிறது. பல்கரு கொண்ட கார்போளைல். மாங்கனீஸ் Mn(CO) என்ற மூலக்கூறு வாய்பாடுடைய கார் போனைலைத் தருகிறது. கார்பன் மோனாக்சைடு எண்முகி வடிவில் ஈதல் பிணைப்புகளை உண்டாக்கு கிறது. ஒவ்வோர் உலோக அணுவும் ஐந்து கார்போனைல் தொகுதிகளுடனும், மேலும் அடுத்த உலோக அணுவுடனும் நேரிடையாக இணைந் துள்ளது. OC-Mn-Mn-Co -என்ற சங்கிலி ஒரு நேர்கோட்டில் இருக்கிறது. கார்போனைல் தொகுதி களைக் கொண்ட இரு சதுர சமதளங்கள் ஒன்றுக் கொன்று விலகி (staggered) அமைந்துள்ளன. மாங்கனீசில் d'sp' இனக்கலப்பு அடைந்துள்ளது. இதில் ஐந்து ஆர்பிட்டால்கள் ஐந்து கார்போனைல் தொகுதிகளை இணைத்துக் கொள்கின்றன. ஆறாம் இனக்கலப்பு ஆர்பிட்டாலில் ஓர் இணையாத தனி எலெக்ட்ரான் உள்ளது. இவை ஒன்றின் மேல் ஒன்று பொருந்தி Mn-Mn என்ற பிணைப்பை ஏற்படுத்து கின்றன. இதன் நிகர அணு எண்ணைக் (effective atomic number) கீழ்வருமாறு கணக்கிடலாம். Mn இன் நிகர = அணு எண் = மாங்கனீசின் அணு எண் + ஐந்து கார்போனைல் தொகுதி வழங்கிய எலெக்ட்ரான்கள் + மாங்கனீஸ் அணுவில் உள்ள ணையாத தனி எலெக்ட்ரான் 25 +5 X 2 + 1 36 (கிரிப்ட்டான், Kr OC CO OC. 1.BA Ni(CO), CO CO CO CQ CO CO OC' CO Fe(CO), CO Cr{CO)&