பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலோகம்‌ 695

களை உருவமைக்க உதவுகிறது. அழுத்தி எந்திரங் களின் பயனுடன் ஒப்பிடும்போது சிக்கலற்ற வடி வமைப்புகளைக் குறைந்த செலவில் உருவாக்க இம் முறை மிகவும் ஏற்றதாகும். உலோகமிழைத்தல் ஒரு சாதாரண கடைசல் ந்திரத்தில் (lathe) செய்யப் படுகின்றது. உலோகம் இழைத்தல் முறை. முதலில் உருவாக்க வேண்டிய பொருளின் உள் அமைப்புக்கு ஏற்றவாறு ஒரு வடிவமைப்புக் கட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். விரும்பிய பொருளுக்குத் தேவையான பரப்புடைய உலோகத்தகட்டை, வடிவமைப்புக் கட்டைக்கும் வால் கூட்டுத் (tail stock) தண்டிற்கும் இடையே, வால் கூட்டின் கைப்பிடியில் சுழற்சி அழுத்தம் கொடுத்து நிறுத்த லேண்டும். உலோகத் தகட்டின் அளவிற்கு ஏற்ற சுழல் வேகத்தை முடிவு செய்து சுழலச் செய்ய வேண்டும். அவ்வாறு உலோ கத்தகடு சுழலும்போது பொருத்தமான கைக்கருவி யால் தகட்டை வடிவமைப்புக் கட்டையின் மேல் அழுத்தி விரும்பிய பொருளை உருவாக்கலாம். கைக் கருவியைப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு சுருவி தாங்கி உள்ளது. கருவி தாங்கியில் பல துளைகள் உள்ளன. செய்யும் வேலைக்குத் தக்கவாறு துளையில் வழிகாட்டி முளையைப் (guide peg) பொருத்திக் கைக்கருவியைச் சரியான வகையில் பயன்படுத்தலாம். வடிவமைப்புக்கட்டை தலைக்கூடு உலோகத் தகடு கைக்கருவி இழைத்தல் முறை வால் கூ வழிகாட்டி முளை கருவிதாங்கி இம்முறையில் உற்பத்தி செய்ய அலுமினியத் தகடுகளே மிகவும் ஏற்றவை. அவை நிமிடத்திற்கு ஏறக்குறைய ஆயிரம்/மீட்டர் சுற்றளவு வேகத்துடன் சுழற்றப்படவேண்டும். 16 SWG அளவுக்கும் அதிக மான தடிமனுடைய தகடுகளைக் கையாள்வதற்கு நீரியக்க அழுத்தத்தைப் பயன்படுத்த வேண்டும். உலோகம் இழைத்தல் 695 தகட்டினை அதிகமாக வளைக்க வேண்டுமாயின் அதை இரண்டு அல்லது மூன்றுகட்டங்களில் சிறிது சிறிதாக வளைக்க வேண்டும். இரு கட்டங்களுக் கிடையேதகடு சுற்றும்போது, அதை ஒரு வளிம பந்தத்தின்மூலம் வெப்பப்படுத்தி நீட்சித் தன்மையை மிகைப்படுத்திய பின் அழுத்தம் கொடுக்க வேண்டும். தகட்டை வளைக்கும்போது வெப்பம் அளவுக்கு அதிகமாவதால் தகடு சேதமடையலாம். இதைத் தடுக்கத் தகட்டைத் தேன்மெழுகு அல்லது பெட் ரோலிய ஜெல்லியுடன் கலந்த எண்ணெய் கொண்டு பூசிப் பயன்படுத்தலாம். இப்பொருள் தகட்டிற்கும் கைக் கருவிக்கும் இடையே ஏற்படும் உராய்வைக் குறைக்கவும் உயவிடவும் வழி செய்கிறது. அலுமினியம் தவிர எஃகு, தாமிரம், தாமிரக் கலப்பு உலோகம் ஆகிய உலோகத் தகடுகளையும் சுழல் முறையில் பொருள்களை உருவாக்கப் பயன் படுத்தலாம். 12 மி.மீ. தடிமன் வரை எஃகுக் குழாய் களை உருவாக்க உருளை வடிவக் கருவிகளைப் பயன படுத்தலாம். இரண்டு மீட்டர் உயரமுள்ள துருப் பிடிக்காத எஃகுத் தொட்டிகளை இம்முறையில் உரு வாக்கலாம். உலோகச் சுழல் உருவாக்க முறைக்குப் பயன் படும் கருவிகள் மூன்று வகைப்படும். மழமழப்புக் கருவிகள் வட்டம் முதலாகப் பல வடிவங்களில் உள்ளன. தோராய வடிவமைப்பை முதல் கட்டமாக ஏற்படுத்த இலை உதவுகின்றன. மடிக்கும் கருவிகள் உருளைப் பிடிப்பானையும் பல அளவுகளில் உருளைகளையும் கொண்டுள்ளன. ஓரங்களை மடித்து விட உதவுகின்றன. வெட்டு முனைக் கருவிகள், ஓரங்களை வெட்டிச் சீராக்கக் கூரான வைரப்புள்ளி களைக் கொண்டுள்ளன. வெப்பநிலை உருவாக்க முறையிலும் குளிர்நிலை உருவா க்க முறையிலும் சுழல் உருவாக்கம் நடைபெற லாம். தடிமனான தகடுகளை வளைக்க அதிக ஆற்றல் தேவைப்படும். அதேசமயம் வெப்பநிலை முறையை யும் மெல்லிய தகடுகளை வளைத்து உருவாக்கும் குளிர்நிலை முறையையும் பயன்படுத்த வேண்டும். வெப்பநிலை உருவாக்க முறையில் அழுத்தம் தாங்கும் பண்டங்கள் எண்ணெய் தூய்மைப்படுத்தும் கருவிகள் பலவகைக் கனரகத் தொட்டிகள் முதலியவற்றைத் தயாரிக்கலாம். குளிர் நிலை உருவாக்க முறையில் பெரிய எதிர்பலிப்பி வீட்டுக்குத் தேவைப்படும் பண்டங்கள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். ஒரு பொருளை எந்திர அழுத்தி மூவம் செய் வதும் சூழல் உருவாக்க முறையில் செய்வதும் தேவைப்படும் பொருள்களின் மொத்த எண்ணிக்கை யைப் பொறுத்தது. எந்திர அழுத்தியில் கருவியின் விலை அதிகம்; ஆனால் சுழல் உருவாக்கத்தில் கருவி யின் விலை மிகக்குறைவு. பொதுவாக, தேவையான