பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/719

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலோகம்‌ சார்‌ எரிபொருள்‌ 699

உலோகம் சார் எரிபொருள் 699 உருகிய ஆக்சைடுப் ஆக்சைடு படலம் உருகிய உவோகம் படலம் உலோகத்துகள் உருகுதல் (660.25) O நிலையான கனற்சி எரிதல் தீப்பற்றுதல் (1500-2800°) படம் 3. உலோகக்களற்சி நிலைகள் இதுவே, உலோகக் கனற்சி ஆகும். உலோகக் கனற்சி நிலைகளை படம் 3 இல் காணலாம். எரிபொருண்மை மிகு உந்து எரிபொருள். போர்க் கருவிகளாகப் பயன்படும் ஏவுகணைகளில் 40000 அடி முதல்1,00,000 அடி உயரத்திலும் ஒலிவேகத்தை விட 2-5 மடங்கு வரை மிகு வேகத்தில் காற்று மண்டலத்திலேயே சீறிப்பாய்ந்து செல்லும். இத் தகைய ஏவுகணைகளில் நிறைக்கப்படும் உந்து எரி பொருள்களில் ஆக்சிஜனேற்றி சாதாரண ஏவூர்தி களில் உள்ளதைவிடக் குறைந்த அளவே போதும். ஏனெனில் இவை காற்று வெளியில் பயணம் செய்கை யில் வெளிக்காற்றையே உள்ளிழுத்து முழுதுமாக எரிகின்றன. இத்தகைய ஏவூர்திகளைக் காற்றுட் கொள்ளும் ஏவூர்திகள் (air breathing rockets) எனலாம் (படம் 4). இவற்றில் பயன்படத்தகும் உந்து எரிபொருள் களில் எரிபொருண்மை மிகுதியாக இருக்கும். ஆத லின் இவற்றின் எரிவினைப் பொருள்களும் மீண்டும் காற்றில் எரியப் போதுமான பொருண்மையுடைய தாயிருக்கும். இதற்காகவே இத்தகைய எரிபொருள் களில் உலோக எரிபொருள் அதிக அளவில் சேர்க்கப் ஆ கட்டுப்பாட்டமைப்புகள் (அ) ராம்ஜெட் எரிபொருள் உந்தும ஊக்கி எரிபொருள் (இ) இருநோக்கக் கனற்சி அறை (ஈ) முதலில் உந்தும் ஊக்கி எரிந்து மாக் எண் 2க்கு மேல் ண்டாக்கவும், அதன்பின் முழுவதும் எரியாத ராம்ஜெட் எரி பொருள் காற்றை உட்கொண்டு எரியவும் உதவும் அறை). படம் 4. ராம்ஜெட் ஏவூர்தி படும். மக்னீசியம் பெரும்பாலும் 50-65 விழுக் காடும், அலுமினியம் ஏறத்தாழ 30 விழுக்காடுமாக அமையும். இந்த வகை எரிபொருள்களில் அலுமினி யம் ஒரு குறித்த அளவுக்கு மேம்பட்டால் எரிவினைப் பொருள்களில் சராசரி 1 மில்லிமீட்டர் குறுக்களவுள்ள கனத்த தூள் உருண்டைகள் படியும். ஆதலால் மக்னீ சியமே இந்த எரிபொருண்மை மிகு உந்து எரி பொருள்களில் பெரிதும் பயன்படும். அலுமினியம் மக்னீசியத்தின் சமவிகித உலோகக்கலவையும் 38 விழுக்காடு வரை பயன்படுத்தப்படலாம். இத்தகைய எரிபொருள்கள் சிலவற்றை அட்டவணை 3 இல் காணலாம். இந்த உலோக எரிபொருள் கூடுதலான உந்து எரிபொருள்களின் எரிவிரைவு (burning rate) குறை வாகும். மேலும், சாதாரண ஏவூர்திகளில் நிறைக்கப் படும் உந்து எரிபொருள் அளவைவிடக் காற்றுட் கொள்ளும் ஏவூர்திகளில் பயன்படுத்தப்படும் உலோகம் மிகுந்த உந்து எரிபொருள் அளவு ஏறத் தாழ 3-5 மடங்கு குறைவாயிருக்கும். ஆயினும் இதன் வரை ஒப்பு அழுத்தவிசை எண் 700-800 நொடி உயர்ந்திருக்கும். உலோக அடி நீர்ம உந்து எரிபொருள். ஏறத்தாழ 1933ஆம் ஆண்டிலேயே இயூசின் சாங்கர் என்னும் ஆஸ்திரிய அறிஞர் டீசல் எண்ணெயில் அலுமினியத் தூள் கலந்த குழம்புநிலை நீர்ம உந்துபொருள் பற்றிய கருத்தினை வெளியிட்டார். 1947 முதல் 1957 வரை போரான், மக்னீசியம் போன்ற உலோகம் கலந்த நீர்ம ஹைடிரோகார்பன் குழம்பினை ராம்ஜெட் எனப்படும் காற்றுட்கொள் ளும் ஏவூர்திப் பொறிகளில் பயன்படுத்த விரிவான ஆய்வுகள் நிகழ்ந்தன. இத்தகைய உந்து எரிபொருள் களுள் மக்னீசியம் கலந்தவையே சிறிய ராம்ஜெட் களில் ஆய்வுக்காகப் பறக்கவிடப்பட்டன.