பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/726

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 உலோகம்‌ வடித்தல்‌

706 உலோகம் வடித்தல் முற்றிலும் இழக்க இறுதியாக அவற்றைச் சுண்ணாம்புக் கரைசலில் அமிழ்த்தி எடுக்கின்றனர். பழையவிட்டம் எ குறைக்கப்பட்ட ட நீட்டுவிப்பு படம் 1. அச்சு நீட்டுவிப்புத் தொடங்கும்போது தண்டின் முனை, சுத்தியால் அடிக்கப்பட்டு விட்டம் குறைக்கப் பட்டு, அச்சுத் துளையுள் நுழைக்கப்படுகிறது. அந்த முனை விசை நீட்டுவிப்புப் பிடிப்பானில் இறுகப் பொருத்தப்பட்டு அச்சின் வழியே இழுக்கப் படுகிறது. அதனால் அச்சின் துளை அளவிற்கு விட்டம் குறைந்து நீளம் அதிகரிக்கிறது. இம்முறை வட்டம், சதுரம், அறுகோணம் எனப் பல வடிவத் தண்டுகளுக்கும் பொருந்தும். கம்பி நீட்டுவிப்பு. கம்பிகளை நீட்டுவிப்பு முறை யில் சிக்கனமாகத் தயாரிக்க, நீளமான கம்பியை ஒருமுறை இழுக்கும்போதே கூடுதல் வேகத்தில் குறைந்த சேதத்துடன் முடிந்தவரை இழுக்கவேண்டும். இதற்கு மிகத் தரமான மூலப்பொருளும், திறம் மிகு எந்திரங்களும் அச்சுகளும் தேவைப்படும். முன்பு திட்டமிட்டஅளவுடைய கம்பியாக மாறும் வரையில், தண்டை வரிசையாக உள்ள சிறு சிறு அளவுடைய அச்சுகளின் மூலம் அடுத்தடுத்து இழுக்க வேண்டும். நீட்டுவிப்பின் போது ஏற்படும் நெகிழி உருமாற்றத் தால் (plastic deformation) மூலப்பொருள் திண்மை யாகிறது. எனவே அடுத்த கட்ட நீட்டுவிப்பிற்கு முன்னர் அதை பதப்படுத்த வேண்டும். செயல் முறைத் தத்துவம். ஏறத்தாழ 1.5 மி.மீ. அதிகமாக உள்ள வெப்ப உருட்டு எஃகுத் தண்டு அல்லது சுருள் கம்பி, நீட்டுவிப்பதற்கு மூலப் பொருளாகப் பயன்படுகிறது. முன்பு கூறியவாறு ஆக்சிஜன் படிவம் நீக்கப்பட்டு, எஃகு தூய்மை செய்யப்படுகிறது. பிறகு சுருளின் முனை நசுக்கப் பட்டு டங்ஸ்டன் கார்பைடு அச்சு வழியாகச் செலுத்தப்பட்டு நீட்டுவிப்பு வண்டியிலுள்ள பிடிப் பானில் பொருத்தப்படுகிறது. நீட்டுவிப்பு வண்டி முடிவற்ற சங்கிலித் தொடர் அல்லது நீரியல் நீட்டுவிப்புப் பலகை உதவியால் நகர்கிறது. நகரும்போது தண்டை அச்சு மூலமாக இழுக்கிறது. மேலும் அளவைக் குறைக்கவேண்டுமாயின், குறைந்த அளவு துளையுடைய அச்சுகளுடன் கூடிய இதைப் போன்ற அமைப்புகள் வேண்டும். டங்ஸ்ட்டன் கார்பைடு மூலம் அச்சுகள் செய்யப் பட்டவை. அவை குறைவுத் தேய்மானத் தன்மை உடையவை. கம்பி நீட்டுவிப்பின்போது பொருத்த மான மசகுப் பொருளைப் பயன்படுத்த வேண்டும். மசகின் பயன்கள். உலோகத்தை எளிதாக அச்சின் வழியே செலுத்த முடிகிறது. அச்சு அதிக வெப்ப நிலை அடைவதைத் தடுக்கிறது. உலோகமும் அச்சும் ஒன்றையொன்று பற்றிக் கொள்ளாமல் தடுக்கிறது. கம்பியை வழவழப்பாக, வேகமாக உற்பத்தி செய்ய முடிகிறது. மசகின் தன்மைகள். நீட்டுவிப்பு முறையில் ஏற் படும் மிகை வெப்ப நிலையிலும், மிகை அழுத்தத் திலும் நிலையாக இருக்கவேண்டும். உலோகத்திற் கும், அச்சிற்கும் இடையே ஏற்படும் உராய்வைக் குறைத்து வெப்பம் உண்டாவதைக் குறைக்க வேண் டும். நகரும் உலோகத் தளத்துடன் ஒட்டிக்கொண்டு அதன் மேல் சமமாகப் பரவவேண்டும். அரிப்பைத் தடுக்கும் தன்மை வேண்டும். சாதாரணமாக மசகு எண்ணெய், சோப்பு, சிறப்புப் பொருள் சேர்க்கப் பட்ட தாது எண்ணெய் ஆகியவை மசகாகப் பயன் படுகின்றன. குழாய் நீட்டுவிப்பு, பொதுவாக உருட்டு அல்லது பிதுக்க (extrusion) முறைகளில் குழாய்கள் உருவா கின்றன. பின்னர் சிலசமயங்களில் நுட்பமான அளவு களைப் பெறவும் தளத்தைப் பளபளப்பாக்கவும் குழாயின் வடிவை மாற்றவும் (எடுத்துக்காட்டு; வட்டத்திலிருந்து சதுரத்திற்குக் குழாயின் விட்டத் தைக் குறைத்தல்) குளிர்நிலை நீட்டுவிப்பு முறை பயன்படுகிறது. முன்பு கூறியவாறு முதலில் குழாய்களைத் தூய் மைப்படுத்த வேண்டும். பின் மசகைத் தடவி அச்சு வழியாக நுழைத்து விசையால் இழுக்க வேண்டும். குழாயின் சரியான அளவில் அமைய துளை ஒரு நீண்ட நடுத்தண்டு (mandrel) அச்சோடு பொருத்தப் பட்டிருக்கும். இம்முறையால் 35 விழுக்காடு வரை எஃகுக் குழாய்களின் அளவைக் குறைக்கலாம். உலோகம் வடித்தல் எ. இளங்கோ வடித்தல் என்பது உலோக உருவாக்க முறைகளுள் ஒன்றாகும். அச்சு, அதற்கேற்ற அமுக்கியுளி (punch)