பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சி இனங்கள்‌ 53

மிகுதியாக இருக்க வேண்டும். வைட்டமின் A,B,D, E.K. பாண்டோ தெனிக் அமிலம், கோலின் முதலியவை இன்றியமையாதன. இவை தீவனத்தில் கலக்கப்படும் வைட்டமின் கலவைகளில் உள்ளன. தற்காலத்தில் கோழித் தீவனங்கள் எந்திரங்கள் மூலம் சிறு துண்டுகள் வடிவத்தில் வழங்கப்படு கின்றன. பிரிடாக்சின் என்ற வைட்டமின் வெப்பத் தினாலும் ஈரப் பசையினாலும் பாதிக்கப்படுகின்றது. எனவே துண்டு உணவுகளில் இதன் அளவு குறைந்து காணப்படலாம். வைட்டமின்களைத் தவிர மங்கனீஸ் துத்தநாகம் போன்ற தாது உப்புகள் இன்றியமையா தவை. சில சமயங்களில் கனிய சல்ஃபேட், மித்து ரானின் போன்றவை தேவையைப் பூர்த்தி செய்வதற் காகத் தீவனத்தில் கலப்பதுண்டு. கோழிகள் கனிம சல்ஃபேட்டிலிருந்து மித்துரான்களை உடலில் உற் பத்தி செய்து கொள்ளும். ஆனால் சிறு கோழிக் குஞ்சுகளில் இத்திறன் குறைந்து காணப்படுகின்றது. உணவில் சேர்த்துக் கொள்ளும் சாதாரண உப்பு கோழித் தீவனங்களில் குளிர் காலத்தில் 0.37% கோடை டையில் 0.5% அல்லது 0.6% கலந்திருக்க வேண்டும். தீவளக் கட்டுப்பாட்டு முறையில் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல். தீவனங்களின் விலை மிகுதியாகிக் கொண்டு வருவதால் இறைச்சி இனக் கோழி உற் பத்தியின் செலவும் பெருகி வருகிறது. இச்செலவைக் குறைப்பதற்குப் பல மாறுபட்ட முறைகள் கையாளப் பட்டன. அவற்றில் ஒன்று தீவனக் கட்டுப்பாட்டு முறையாகும். குறைந்த செலவில் மிகுந்த பயன் அடைவதே இதன் குறிக்கோளாகும். முழு நேரம் தீவனமளித்தால், கோழிகள் தம் தேவைக்கு மேலான உணவை உட்கொண்டு, உண்ட உணவு திறம்படச் செரிக்காமையால் வெளியேற்றப்படுகிறது. கோழி களின் பழக்கத்தைக் காணும் போது ஒரு கோழி தீவனமுண்டால். அதைப் பார்த்துப் பசியில்லாத மற்ற கோழிகளும் தீவனம் உட்கொள்வதை அறிய லாம். அளவான உணவளித்தால் தீவன அழிவு குறைந்து தீவனத் திறன் பெருகி கோழிகளின் தேவை யில்லாத அலைச்சலும் குறைந்துவிடும். இதற்குக் கீழ்க்காணும் பலவகையான தீவனக் கட்டுப்பாடுகள் கையாளப்பட்டுள்ளன. ஆபர்ன் பல்கலைக் கழகத்தில் நடத்திய ஓர் ஆய்வில் ஒரு மணியில் பதினைந்து நிமிடமே கோழிகளுக்குத் தீவனம் கொடுக்கப்பட்டன. இந்த ஏற்பாடு, சூழ்நிலைக் கோழி வீடுகளில் விளக் கணைப்பு மூலம் செய்யப்பட்டது. அதாவது ஒரு மணியில் பதினைந்து நிமிடத்திற்கு விளக்கு போடப்பட்டு மற்ற நேரங்களில் அணைக்கப் பட்டது. வீடுகளின் சூழ்நிலை எப்போதும் இருட்டாக இருக்கும். ஒளி, விளக்குகள் மூலமே அளிக்கப்படு கின்றது. எனவே, விளக்குகளில்லாதபோது, இருட்டில் இறைச்சி இனங்கள் 53 கோழிகள் தீனி ஏற்கா; மேலும் அவை சலனமின்றி இருக்கும். தேவையற்ற அலைச்சலினால் கோழிகள் உட்கொண்ட சக்தி வீணாகிறது. இருட்டினால் அலைச்சல் குறைந்து ஆற்றல் உடலில் சேகரிக்கப் படுகிறது. இதனால் உண்ட உணவு கூடுதலாகப் பயன் அளித்தது. இதே முறை எந்திரம் மூலம் தீவனத் தொட்டி களைத் தூக்கிக் கோழிகளுக்குத் தீவனம் கிடைக்காத படி செய்யப்பட்டது. தீவனமில்லாத சமயங்களில் கூளத்தில் சிதறியிருக்கும் தீவனத்தைக் கோழிகள் பொறுக்கி உண்டன. எனவே, கூளங்களில் சாதாரண மாக அழிவடைந்திருக்கும் தீவனத்தை உட்கொண்டு பயனளிக்க முடிந்தது. இவ்விரு முறைகளிலும் கணிசமான தீவனச் சேமிப்பும் கூடுதலான வளர்ச்சி யும் காணப்பட்டன. மற்றோர் ஆராய்ச்சியில் மூன்று வாரத்திற்குப் பிறகு இரண்டு மணி நேரத்திற்குக் குறைவான தீவனமளித்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்களில் இடைவெளி அளிக்கப்பட்டது. வேறோர் ஆராய்ச்சியில் 1479 கலோரி/பவுண்டுக்குக் குறைவான சத்துள்ள தீவனம் அளித்தபோது இம் முறையில் பயன் தெரியவில்லை. இறைச்சி இனங்கள் வ.உலகநாதன் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளைச் சாப்பிட்டு வந்த மனிதர்களின் உணவுத் தேவை மிகுந்தவுடன் உயிருள்ள - உடல் நலமுள்ள மாடுகளும் இறைச்சிக் - காக வெட்டப்பட்டன. நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இறைச்சித்தன்மையைச் சிறக்கச் செய்யும் உணவுகளை விலங்குகளுக்கு அளித்து இறைச்சி மிகுந்த உயர் இனவிலங்கினங்களையும் இனச்சேர்க்கையின் மூலம் இறைச்சி விலங்கினங்க ளையும் உருவாக்க முடிந்தது. ன மாடு. இறைச்சி மாட்டினங்களில் அபர்டீன் ஆங்கஸ், பீஃப் ஷார்ட் ஹார்ன், தேவான், ஹியர்ஃ போர்டு ஆகிய இனங்கள் குறிப்பிடத்தக்கவை. சிறந்த இறைச்சி இன மாடுகள் தலை சிறுத்தும், கால்கள் உறுதியாகவும் குட்டையாகவும், இரைப்பை, குடல் ஆகிய உறுப்பின் எடை குறைந்தும் இறைச்சி எடை மிகுந்தும் இருக்க வேண்டும். எலும்பின் எடையைவிடத் தசைப்பற்றுப் பெறுகியும் சீரான முறையில் கொழுப்பு இறைச்சிப் படிந்தும் இருத்தல் வேண்டும். மாட்டினத்தில் கன்றுகளின் இறைச்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கன்றுகள் பிறந்ததிலிருந்து