பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/748

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 உழவு முறை

728 உழவு முறை விக்க முயல்கின்றனர். வேளாண்மைப் பண்ணை, விதைப் பண்ணை இவற்றில் தொடர்புடைய குழு மங்களின் பார்வையாளராகவும், நிர்வாகப் பணியா ளராகவும், வேளாண்மை ஆய்வு நிலையங்கள், பண்ணைக் கருவி தயாரிக்கும் குழுமங்கள், உரம், பூச்சி, பூசணக் கொல்லிகளைத் தயாரிக்கும் குழுமங் கள் போன்றவற்றின் ஆய்வாளராகவும், விரிவாக்கப் பணியாளராகவும். மாநிலக் களை, உரம் விதை பூச்சிக் கொல்லித் தடுப்பு விதித் துறைகளில் பணியா ளராகவும், வங்கிகளில் கிராம மேம்பாட்டு அலுவல ராகவும்பணிபுரிய இவ்வுழவியல் உதவுகிறது. கே.பி. இராமசாமி உழவு முறை பயிர் விளைச்சலின் முதல் படி உழவு ஆகும். விதை முளைப்பதற்காக விளை நிலத்தைப் பக்குவப் படுத்து வதற்கு உழவு என்று பெயர். உழவு செய்யாமல் விதைப்பதில்லை. கலப்பை கொண்டு உழுத பிறகு தான் எந்த மண்ணும் கருக்கொள்கிறது. விதைகள் முளைவிட்டுக் கிளைக்க வேண்டுமானால், ஏற்ற நிலையை மண் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் விதை முளைத்துச் செடியாகி நல்ல பலனைத் தரும். மண்ணின் தன்மையைப் பொறுத்தும், விதைக் கும் பயிர்களைப் பொறுத்தும் உழவு முறை படுகிறது. மாறு நிலத்தை உழுவதால் பயிருக்குப் பல்வேறு நன் மைகள் ஏற்படுகின்றன. மண் தனது கடினத் தன்மையை இழந்து, இலகுவாகி மென்மையடைகிறது. வேர்களுக்குத் தேவையான காற்று எளிதில் கிடைக் கிறது. மண்ணைப் புரட்டிக் கொடுப்பதால் வேர் களுக்கு எட்டாத இடத்தில் இருக்கும் சத்துக்கள் எல்லாம் அண்மையில் சேர்கின்றன. மட்கிய தழை களும், சில கரிமப் பொருள்களும் மண்ணில் புதை யுண்டு பயிருக்கு உணவாகின்றன. மேலும், பயி ரோடு போட்டியிடும் களைகள் கட்டுப்படுத்தப்படு கின்றன. இந்தக் களைச் செடிகளில் பல, பயிரைத் தாக்கும் பூச்சிகளுக்கும். நோய்களுக்கும் தங்குமிட மாக இருப்பதால், உழவின் மூலம் களைகள் யப்பட பூச்சிகளும், நோய்களும் ஓரளவு கின்றன. மண்ணில் நீர் நன்கு இறங்கி ஈரம் தங்கு வதிலும் உழவு பெரும்பங்காற்றுகிறது. மண்ணரிப் பைத் தடுத்து, மண்ணின் வளத்தைப் பாதுகாக்கிறது. மண்ணில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரினங் கள் வாழ்கின்றன. இவற்றில் பல களை குறை பயிர்களுக்கு நன்மை செய்பவை. அத்தகைய உயிரினங்கள் வாழத் தேவையான சத்துகளை இடம் பெயர்த்துத் தரவும் உழவு உதவுகிறது. மண்ணுக்குள் வேர்களும், இவ் வுயிரினங்களும் ஆக்சிஜனை உட்கொண்டு, வெளி விடும் கார்பன் டைஆக்சைடை அவ்வப்போது வெளி யேற்ற வேண்டும். இல்லாவிடில் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். குவிந்த கார்பன் டைஆக்சைடு வெளி யேறவும், புதிய ஆக்சிஜன் உட் செல்லவும் உழவு உதவுகிறது. இதன் விளைவால் மண்ணின் வெப்ப மும் சீரடைகிறது. இவ்வாறு, உழவினால் பல்வேறு நன்மைகள் உண்டாக, விதை முளைப்புக்கேற்ற பக்கு வமும், சூழ்நிலையும் மண்ணில் அமைகின்றன. உழவுக்கருவிகள். தொன்றுதொட்டு உழவுக்குப் பயன்படுவது மரக்கலப்பையே. கலப்பையில் உழுது நிலத்தைச் சமன்படுத்தப் பரம்பு என்னும் கருவி பயன்படுகின்றது. இப்போது இரும்புக் கலப்பை, புரள்கலப்பை, அடிமண்கலப்பை, சட்டிக்கலப்பை, திசைப்புரள் கலப்பை, இழுவை வண்டி கொண்டு உழும் இறக்கை இரும்புக் கலப்பை போன்ற எந்திரக் கலப்பைகள், நவீன வேளாண் அறிவியலின் கண்டு பிடிப்புகளாக உள்ளன. நன்செய், புன்செய் உழவு. ஆழ உழுவதால், மண் அதிக ஆழத்திற்குப் பொலபொலப்பாகி ஈரப்பிடிப்பு அதிகரிக்கிறது. வேர்களும் வேண்டிய அளவு ஆழ மாய் இறங்க முடியும். நிலத்தை உழும்போது கலப் பையை முதலில் தென்வடலாக ஓட்டினால் இரண் டாவது முறை கிழக்கு மேற்காக ஓட்டவேண்டும். கடைசி உழவு நிலச்சரிவுக்குக் குறுக்காக அமைய வேண்டும். மரக்கலப்பை ஆங்கில எழுத்தான V வடிவத்தில் நிலத்தை வெட்டிச் செல்வதால் நிலத்திலுள்ள மண் முழுதும் ஒரே உழவில் கலக்கப் படுவதில்லை. அதனால்தான், குறுக்கும் நெடுக்கு மாகப் பலமுறை மரக்கலப்பையை ஓட்டி, மண்ணைப் பக்குவப்படுத்த வேண்டியுள்ளது. நன்செய் நில மானால் (நெல் பயிரிட) இரண்டு அல்லது மூன்று முறை இரும்புக் கலப்பையால் உழுது, பின்பு தண் ணீர் விட்டு நன்றாகச் சேறாகும் வரை மரக்கலப்பை அல்லது இழுவை வண்டியின் உதவியால் குறுக்கும் நெடுக்குமாக ஒட்டிப் பரம்பு கொண்டு சமன் செய்து, நெல் நாற்றுகள் நடப்படுகின்றன. புன்செய் நிலங்களை, நீர்ப்பாசன வசதியுள்ள நிலங்கள், மானாவாரி நிலங்கள் என்று இருவகைப் படுத்தலாம். நீர்ப்பாசன வசதியுள்ள புன்செய் நிலங்களானால், நீர் பாய்ச்சியோ மழைக்குப் பின் னரோ ஈரப்பதம் நிலத்தில் இருக்கும்போதே உழவு செய்ய வேண்டும். பாசன வசதியற்ற மானாவாரி நிலங்களில் மழை பெய்த பிறகு சரியான ஈரப்பதத் தில் உழவு செய்து பண்படுத்த வேண்டும். பயன்படுத்தப்படும் கலப்பையைப் பொறுத்து உழவின் தன்மை மாறுபடும். வயலின் நீள வாட் டத்தில் ஓட்டும்போது கலப்பையைத் திருப்புவதில் நேரம் மீதமாகும். சால்களின் எண்ணிக்கையும் குறையும். உழும்போது நிலத்தை 20 மீட்டர் அகல முள்ள துண்டுகளாக உழுவது வழக்கம். முதலில்