பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/749

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்செருகல்‌ (குடல்‌) 729

நிலத்துண்டின். நடுவில் சால் எடுக்கப்படுகிறது. பிறகு இடக்கைப் பக்கமாக இரும்புக்கலப்பையைத் திருப்பி, சால்சாலாக எடுக்க உழவு நடுவிலிருந்து வெளியே கடைசி வரை நிலத்துண்டின் இரு பக்கங் களிலும் போய் முடிகிறது. நடுவிலிருந்து வெளிப் பக்கமாக உழவு செய்வதால், இது வெளிப்பக்க உழவுமுறை அல்லது சேர்த்து உழுதல் எனப்படும். வலப்பக்கம் இறக்கையுள்ள தால். இம்முறையில், சால் பாளங்கள் வலப்பக்கத்தில் தள்ளப்பட்டு, அடுத் துள்ள மண் சால் பாளத்துள் சேரும். சேர்த்து உழப் பட்ட துண்டு நிலத்தின் பக்கத்துண்டுகளில் வெளிப் பக்கமாக உழவு ஆரம்பமாகி, ஒருசால் எடுத்ததும், கலப்பையை நடுப்பக்கமாகத் திருப்பி, முதல் சாலின் உட்புறத்தில் அடுத்த சால் எடுக்கப்படும். நிலத் துண்டின் நடுவில் உழவு முடியும். வெளியே இருந்து உட்புறமாக உழவு செய்வதால் இது உள்பக்க உழவு அல்லது பிளந்து உழுதல் எனப்படும். கடைசிச் சால் இருக்கும் இடத்தில் ஒரு வாய்க்கால் அமையும். மழை பெய்யும்போது வாய்க்கால் பக்கமாக நீர் வடிந்து, அதன் வழியாக வெளியேறுவதற்கு வாய்ப்பு உண்டு. உழவு வகைகள். பயிருக்கேற்பவும், நிலத்திற் கேற்பவும் உழவு செய்யும் முறை வேறுபடுகிறது. உழவு வகைகளில் பல முறைகள் முறைகள் இருக்கின்றன. இவற்றை பண்டைய உழவுமுறை, குறைந்த உழவு முறை, விதைப்புடன் கூடிய உழவு முறை, வரிசை விதைப்பு உழவுமுறை, உழவே இடாதமுறை என்று வகைப்படுத்தலாம். பண்டைய உழவு வகை. மாடுகளின் உதவியுடன் மரக் கலப்பைகளைக் கொண்டு உழுவது தொன்று தொட்டுச் செய்து வரும் முறை. சில இடங்களில், எருமைகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலை நாடுகளில் குதிரைகள் பூட்டி உழவு செய்யப்படு கின்றது. இம்முறையில், பல முறை உழுது, கட்டி களை உடைத்து, நன்கு புழுதிப்படச் செய்து, மண் மிருதுவாகவும் மென்மையாகவும் செய்யப்படுகிறது. இப்பண்டைய முறையில் அதிகமாக உழவு செய்வ தால் மண்ணரிப்பு ஏற்படுகிறது. களைகள் எளிதில் முளைக்கின்றன. எனவே, உழவு செய்யும் எண்ணிக் கையைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டுப் பற்பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் விளை வுகளே பின்வரும் முறைகளாகும். குறைந்த உழவுவகை, பண்டைய உழவு முறையை விடக் குறைந்த அளவு பல்வேறு செய்நேர்த்திகளைச் முறையே செய்து, மண்ணைப் பண்படுத்தும் குறைந்த உழவு முறையாகும். விதைப்புடன் கூடிய உழவு வகை. இம்முறையில் நிலம் முன்னரே உழப்படுகிறது. பின்னர், விதைக் கும்போது மட்டும் கூடுதலாக ஒருமுறை உழப்படு கிறது. இந்த முறையில் களைகள் நன்கு கட்டுப் உள்செருகல(குடல்) 729 படுத்தப்படுகின்றன. இது பெரிய பண்ணை களுக்கு ஏற்ற முறையாகும். கள் வரிசை விதைப்பு உழவுவகை. பருத்தி, மக்காச் சோளம் போன்ற வரிசைப் பயிர்களுக்கு இது ஏற் றது. இம்முறையில் விதைகள் ஊன்றப்படும் வரிசை மட்டும் உழுதுவிடப்படுகின்றன. இரண்டு விதைப்பு வரிசைகளுக்கும் இடையே உள்ள நிலம் உழாமலே விடப்படுகிறது. இதனால், உழவின் எண்ணிக்கையும் உழைப்பும், நேரமும், செலவும் மீதமாகும். களால் உழவே இடாத வகை. உழவு முறைகளில் இதுவே மிகவும் நவீன உத்தியாகும். உழுவதற்குப் பதிலாக நிலத்தில் ஆங்காங்கு சிறு சிறு துளைகள் போட்டு விதைகள் ஊன்றப்படுகின்றன. களைக் கொல்லி களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. விதைத்த வரிசைகள் மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுகின்றன. விதைக்கும் போது, மண்ணின் தரம் சரியான பக்குவத்தில் இருந்தால் மட்டுமே இம்முறையில் வெற்றி காண முடியும். இது குறித்து இன்னும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. கே.பி. இராமசாமி உள்செருகல் (குடல்) குடல் குழந்தைப் பருவத்தில் குடல் அடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் குடல் உள்செருகல் ஆகும். சாதா ரணமாக, குடல் ஒழுங்காகச் சுருங்கியும் விரிந்தும் பொருள்கள் பின்நோக்கி நகர்த்தப்படுகின்றன. இச் செயலில்மாற்றம் ஏற்படாமல் முன்னாலிருக்கும் குடற் பகுதி, பின்னால் இருக்கும் குடற்பகுதியினுள் செருகி விடும். சில சமயம் பின்னாலிருக்கும் குடற்பகுதி, முன் னால் இருக்கும் குடற்பகுதிக்குள்ளும் செருகிவிட லாம். இதற்குப் பின்போக்கு உள்செருகல் (retrograde intussusception) என்று பெயர். இது ஒழுங்கற்ற அலைவியக்கத்திலும், இரைப்பைக் குடல் இணைப்பு அறுவை மருத்துவத்திற்குப் பின்பும் ஏற் படலாம். உள்செருகிய குடற்பகுதிக்கு ஏறுகுடல் (intussuscept) என்று பெயர். இதில் உட்செல்லும், வெளிவரும் இரண்டு அடுக்குகள் இருக்கும். அவற்றைச் சுற்றியிருக்கும் பகுதிக்கு ஏற்புக்குடல் (intussucipiens) என்று பெயர். ஏறுகுடலும், ஏற்புக் குடலும் இணையும் உள்செருகலின் இடத்தை கழுத்துப்பகுதி எனலாம். உள்செருகலைக் குடல் வெளியேற்ற முற்படும்போது உள்செருகல் பெரிதாக வீக்கமடையும். சில சமயம் திடீரென ஏற்படும் உள் செருகல் தானே சரியாகி விடும். நோய்க் காரணம். இந் நோய் பல காரணங் களால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. குழந்தைப்