பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/760

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 உள்ளடக்கு வினை

740 உள்ளடக்கு வினை மதிப்பு கூடக் குறைய சுழி அல்லது அசைவற்ற நிலை). இதை மையப்பகுதி என்பர். Xஇன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, குறைந்த அளவுத் துகள்களே தோற்றுவிக்கப்படுகின்றன. அதாவது, அதிக ஆற்றல் பெற்ற துகள்கள் மிகவும் குறைந்த அளவில் உண்டாகின்றன. இதைத் துண்டாடும் பகுதி -என்பர். மாறி Xக்கும், நிகழ் திறனுக்கும் இடையே உள்ள இத்தகைய தொடர்பு ஆற்றலுடன் சார் பற்றுக் காணப்படுகின்றது. படம் 4 மோதும் வினையின் நிகழ் திறன், உள் வரும் துகள்களின் ஆற்றல் அல்லது உந்தத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகின்றது. PLAB என்பது ஆய்வுக் கூடத்தில் அளக்கப்படும் உந்தம் குறுக்குவெட்டு, 0.0.{mb) 200 100% 1 10 102 203 PLAB (GeV/c) படம் 4 உள்வரும் ஹாட்ரான்களின் உந்தத்துக்கும், குறுக்கு வெட்டுக்கும் உள்ள தொடர்பு (மாதிரிப்படம்). PLAB ஆய்வுக் கூடத்தில் அளக்கப்பட்ட உந்தம் 5 ஆகும். மோதும் துகள்களின் ஆற்றல் GeVக்கும் குறைவாக இருக்கும்போது, நிகழ் திறனின் மதிப்பில் மாறுதல்கள் தோன்றுகின்றன. ஆனால் ஆற்றல் அதிகரிக்கும்போது நிகழ்திறன் மதிப்பு ஏறக்குறைய மாறாமல் உள்ளது. இத்தோற்றப் பாடு ஈற்றணுகி ஒழுக்கம் (asymptotic behaviour) எனப்படும். ஃபோன்மான் இதை அளவாதல் (scaling) என்று குறிப்பிட்டார். அதாவது, மொத்த நிகழ்திறன் ஆற்றல் அளவுடன் சார்பற்று இருக்கிறது. ஆற்றல் அளவு 20-30 Gev ஆக இருக்கும்போது ஈற்றணுகி ஒழுக்கம் தோன்றுகிறது. இப்படம் நிகழ் திறனுக்கும், மாறி y க்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. படத்தில் காணப்படும் சமதளம் மையப் பகுதியைக் குறிக்கிறது. இறக்கம் உள்ள பகுதி துண்டாகும் பகுதியைக் குறிக்கிறது. சமதளத்தின் அளவு, ஆற்றல் அதிகரிக்கும்போது அதிகம் மாறுபடுவது இல்லை. இது ஈற்றணுகி ஒழுக்கத்தைக் காட்டுகிறது. ஈற்றணுகி ஒழுக்கத்தின் சிறப்புக் கூறு நிகழ் குறுக்கு வெட்டு -5 PL = 15 GeV/c\ y PL = 26 GeV/c படம் 5. நிகழ் திறனுக்கு மாறி y க்கும் உள்ள தொடர் பைக் காட்டும் மாதிரிப் படம். திறன் மாறி X, மற்றும் குறுக்கு உந்தம் (Pr) ஆகிய வற்றின் மீது சார்பு கொண்டுள்ளது (படம்-3). ஆற்றல் $ உடன் சார்பற்றுக் காணப்படுகிறது. இவ்வொழுக்கத்தை விளக்குவதற்குப் பல கோள்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. கருது யங் குழு இவ்வொழுக்கத்தைத் துண்டமாதல் என்ற கருதுகோள் கொண்டு விளக்கியது. அக்கருத்து, படம் - 6 இல் அமைப்புப்படத்தின் மூலம் விளக்கப்பட் டுள்ளது. நிலையாக இருக்கும் துகள் B துளி போல் (drop) உருவகப்படுத்தப்படுகிறது. துகள் A தாக்கும்போது இது கிளர்ச்சியூட்டப்பட்டுத் துண்டமாகிறது. ஆற்றல் A lo B படம்.6. துண்டமாதல் வரம்பு வரம்பு கருதுகோளை விளக்கும் அமைப்புப்படம். அதிக ஆற்றலுடன் வரும் துகன் A துகள் B உடன் மோதும்போது துகள் B துண்டமாவதை அசைவற்று இருக்கும் துகள் B இன் கண்ணோட்டத்தில் காட்டும் அதிவேகமாக வரும் துகள் A இல் ஏற்படும் சுருக்கத்தையும் இப்படம் காட்டுகிறது (I<1,)