பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சி இன முயல்‌ வளர்ப்பு 57

வேண்டியதில்லை. ஏறத்தாழ 120 கி. எடையுள்ள கலப்புத் தீவனக் கட்டிகள் ஒரு முயலுக்கு ஒரு நாளைக்குப் போதுமானவை. தற்பொழுது சென்னை மருத்துவக் கல்லூரியில் கொடுக்கும் கலப்புத் தீவனத் தில் மஞ்சள் மக்காச் சோளம் நாற்பது பங்கு, கடலைப்பிண்ணாக்கு நாற்பது பங்கு, கோதுமைத் தவிடு பத்துப் பங்கு, மீன் தூள் எட்டுப் பங்கு, ஈஸ்ட் ஒரு பங்கு,தாதுக்கலவை ஒரு பங்கு, ரோவிமிக்ஸ் பத்துக் கிராமுக்கு நூறு கிலோ எடை என்ற விகிதத் தில் கலந்து கொடுக்கப்படுகிறது. மேற்கூறிய கலப்புத் தீவனத்தில் நாற்பது கிராம், இருநூற்று நாற்பது கிராம் லூசர்ன்புல்லும், சிறிதளவு காய்ந்த ஹே புல்லும் ஒரு நாளைக்கு ஒரு முயலுக்குப் போது மானது. எப்பொழுதும் குடிக்கத் தூய்மையான நீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும். னச்சேர்க்கை. முயல்கள் பருவம் அடைவது அவற்றின் இனம், உணவின் தன்மை, தட்பவெப்பச் சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்துள்ளது. நடுத்தர உருவமுள்ள ஆண் முயல்கள் எட்டு மாதங்களிலும், பெரிய உருவமுள்ள ஆண் முயல்கள் பத்து மாதங் களிலும், நடுத்தர உருவமுள்ள பெண் முயல்கள் ஆறு மாதங்களிலும், பெரிய உருவமுள்ள பெண் முயல்கள் பத்து மாதங்களிலும் பருவம் அடை கின்றன. முயல்கள் பதினெட்டு முதல் இருபது வாரம் வயதடைந்தவுடன் அவற்றை இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தலாம். ஆண் முயல் இருக்கும் இடத் திற்குப் பெண் முயல்களை இனச் சேர்க்கைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஓர் ஆண் முயலுக்குப் பத்துப் பதினைந்து பெண் முயல்களை இனச் சேர்க்கைக்கென்றே அனுமதிக்கலாம். குட்டி போட்ட இருபத்தொன்று இருபத்தெட்டாம் நாள்வரை பெண் முயல்களை மீண்டும் இனச் சேர்க்கைக்கு அனு மதிக்கலாம். ஓர் ஆண் முயல் இரண்டு முதல் மூன்று ஆண்டு வரை இனச்சேர்க்கைக்குத் தகுதியுள்ளதாக இருக்கும். முயல் பொதுவாகக் கருவுற்ற நாளிலிருந்து 30-32 நாள்களில் குட்டிகளை ஈனும். கருவுற்ற நாளி லிருந்து பெண்முயலின் அடிவயிற்றை 12-14 நாளில் தடவிப் பார்த்தால் முயல் கருவுற்றிருப்பதை அறியலாம். சில சமயங்களில் முயல்கள் கருவுற்றி ருப்பது போல் பொய்த் தோற்றத்தைக் கொடுக்கும். இந்தப் பொய்த் தோற்றக் கருவுறுதல் 18-20 நாள் வரை நீடிக்கும். அடிவயிற்றைத் தடவிப் பார்த்து ஆய்வு செய்தால் கருவுற்று இருக்கிறதா இல்லையா என்பது தெரியும். அடிக்கடி இவ்வாறு பொய்த் தோற்றக் கருவுறுதலைக் காட்டும் முயல்களை இனப் பெருக்கத்திலிருந்து நீக்கிவிட வேண்டும். குட்டி ஈன ஒரு வாரம் இருக்கும் பொழுது பெண் முயல்களை ஒரு தூய்மையான பெட்டியில் வைக்கோல்களை மூன்றில் இரு பங்கு உயரத்திற்கு நிரப்பி அதன்மேல் இறைச்சி இன முயல் வளர்ப்பு 57 தங்க வைக்க வேண்டும். பெட்டியின் நீளம் 45 செ.மீ. அகலம் 30 செ.மீ. உயரம் 18 செ.மீ. இருந்தால் போதுமானது. நோய்த்தடுப்பு. முயல்களுக்கு வரும் நோயைத் தடுத்தல் எளிமையானது; முயல்களுக்குச் சத்து நிறைந்த தீவனமும், நீரும் கொடுத்து நல்ல காற் றோட்டமும் வெளிச்சமுள்ள வெளிச்சமுள்ள அறைகளில் வளர்த் தால் பெரும்பாலும் நோய்கள் தாக்கா. முயல்களின் கழிவுகளை நீக்கிப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் அறைகளைக் கழுவித் தூய்மை செய்ய வேண்டும். முயல்களைத் தாக்கும் நோய்கன் காக்ஸிடியோஸிஸ், இந்த நோயால் முயல்கள் இளைத்துப் போகும். பெருங்கூட்டமாக ஓர் அறை யில் முயல்களை வளர்த்தல், இட வசதிக்குறைவு. தீவனத்தைத் தரையின் மேல் இட்டு உண்ண வைத் தல் ஆகியவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. முயல் களை வலைக் கம்பிகள் மேல் வளர்த்தால் கழிவுகள் தரையில் விழுந்துவிடும். முயல்களின் இருக்கை தூய் மையாக இருக்கும். காக்ஸிடியா பூச்சிகளைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தீவனத்தில் கலந்து முயல்களுக்குக் கொடுப்பதால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். சல்ஃபாமெஸாத்தின், நைட்ரோ பியுரோஸான் மருந்துகளைத் தண்ணீரில் கலந்து குடிக்கச் செய்யலாம். பியுராலால் ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு வாரம் வரை குடிக்கக் கொடுக்க வேண்டும். 10% அம்மோனியா நீரை முயல் அறைகளின் தரையில் தெளித்தால் நாற் பத்தைந்து நிமிடங்களில் அனைத்துக் காக்ஸிடியா சிஸ்டுகளும் அழிக்கப்படும். ஸ்னவில்ஸ். இது ஒரு நுரையீரல் நோய். இந் நோய் தாக்கிய முயலை நீக்கிப் புதைக்கவோ எரிக்கவோ வேண்டும். காது கேங்கர், இந்நோய் மைட் என்னும் உண்ணியால் வருகிறது. இந்நோய் வந்தால் காதில் புண் ஏற்பட்டுச் சீழ் வடியும். இதற்குப் பென்ஸால், பென்ஸயோட் என்னும் மருந்தைத் தடவினால் நலமாகலாம். மடிவீக்கம். பெண் முயல்களுக்குப் பால் சுரக்கும் மடிகள் வீங்கக் காய்ச்சல் உண்டாகும். இதற்குக் கால்நடை மருத்துவர்களை அணுகி மருத்துவம் செய்ய வேண்டும். கிருமியால் பேஸ்ட்ரெல்லோஸிஸ். பாக்டீரியா உண்டாகும் இந்நோயால் முயல்கள் இறந்துவிடு கின்றன. ஆன்டிபயாட்டிக் மருந்துகளைக் குடிநீரில் பயன்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். ஹோஸ்ட்டோஸைக்லின் ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பத்துநாள் குடிக்கக் கொடுக் கலாம்.