பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/770

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 உள்ளுறுப்பு இயக்கம்‌

750 உள்ளுறுப்பு இயக்கம் நரம்பிழைகளாகவும் outflow) மார்பு முதுகுப்புற நரம்பிழைகளாகவும் (sympathetic) திரிக புற எல்லை நரம்பிழைகளாகவும் (para sympathetic sacral outflow) பிரிக்கப்படு (parasympathetic cephalic கின்றன. தலைப்பகுதிப் புற எல்லை நரம்பிழைகளும், திரிக புற எல்லை நரம்பிழைகளும் தூண்டப்படும் போது ஒரே தன்மைகொண்ட உடற் செயலியலில் ஒத்து விளங்குகின்றன. மேலும் நரம்புச் செல் திரள் களில் இருந்து தங்களைச் சுற்றியுள்ள உறுப்புகளைச் சென்றடைவதிலும் அவை ஒத்துள்ளன. ஆகவே இவை இரண்டும் ஒரே பகுதியின் கீழ் கொணரப் பட்டுள்ளன. இவற்றைத் தலைப்பகுதி, திரிக தானி யங்கு நரம்பிழைப் பகுதி என்றும் துணைப் பரிவு நரம்பிழைப் பகுதி என்றும் கொள்ளலாம். மார்பு, முதுகுப் புறத் தானியங்கு நரம்புப் பகுதி, தலைப்பகுதியில் திரிக தானியங்கு நரம்புப் பகுதியினின்று வேறுபட்டு விளங்குகின்றது. உடல் கூறு பகுதியின் துணை உறுப்புகள் மாறுபடுவ தால் அவை வெவ்வேறு உறுப்புகளுக்கு அனுப் பும் பாதையும் வேறுபடுகிறது. நரம்புச் செல் திரள்கள் இரு சங்கிலித் தொட ராகவும் திசு முடிச்சுகளாகவும் உள்ளுறுப்புகளுக்கு நரம்பிணைப்பாகவும் அமைந்துள்ளன. மார்பு- கீழ் முதுகு தானியங்கு பகுதி, பரிவு (sympathetic) நரம்புப் பகுதியைச் சார்ந்துள்ளது எனலாம். பொதுவாக இரு பகுதியையும் சார்ந்த நரம்பிழை கள் ஒரே உறுப்பைச் சென்றடைவதுடன் அவற்றில் எதிரும் புதிருமான செயல்களை உருவாக்குகின்றன. இதயத்திற்குச் செல்லும் மார்பு- கீழ் முதுகு தானி யங்கு பகுதியைத் தூண்டினால், அது இதயத் துடிப்பை அதிகரிக்கின்றது. அதை விடுத்து வேகஸ் என்னும் கபால்- திரிக தானியங்கு பகுதியைத் தூண்டினால் இது இதயத் துடிப்பைக் குறைக்கிறது. துணைப் பரிவு (para sympathetic) நரம்புப் பகுதியைச் சார்ந்த உணவுக் குழாய்க்குச் செல்லும் நரம்பிழைகளைத் தூண்டினால் அவை உணவுக் குழாய் அலையிக்கத்தை உண்டாக்குகின்றன. ஆனால் பரிவு நரம்புப் பகுதியைச் சார்ந்த நரம்பிழைகளைத் தூண்டினால் அது சிறுகுடல் பெருங்குடல் அலையி யக்கத்தைத் தடுப்பதுடன், சுருக்குத் தசையை மூடவும் செய்கிறது. பொதுவாக இந்த இரு நரம்புப் பகுதி களும் ஒன்றோடொன்று கூடிச் செயல்பட்டு உடற் செயலியலைச் சமமான நிலைக்குக் கொண்டு வரு கின்றன. கபால-திரிக உள்ளுறுப்புத் தானியங்கு பகுதி நரம்புகள் நடு மூளையுடன் கண் தசை இயக்க நரம்பின் மூலம் (மூன்றாம் கபால நரம்பு) தொடர்பு கொள்கின்றன. அதே போல் பெருமூளையின் உட் பகுதி, முகம், நாக்கு, மேல்தொண்டை, சஞ்சாரி (vagus) நரம்பு, தண்டுவட உபரி நரம்புகள் மூலம் தொடர்பு கொள்கின்றது. தண்டுவடத்தின் திரிகப் பகுதியுடன் இரண்டு, மூன்று, நான்காம் திரிசு நரம்புகள் மூலமாகவும் தொடர்பு கொள்கின்றது. கண் தசை இயக்க நரம்பாகிய மூன்றாம் நரம்பு இழைத் தசையையும், கருவிழித்திரையின் சுருக்குத் தசையையும் சென்றடைகின்றது. ஏழம் கபால் நரம்பு கண் குழிவையும், கண்ணீர்ச் சுரப்பியையும் சென்றடைகின்றது. ஈறுகள் ஆகிய மேலும் சளிச் சுரப்பிகள் இருக்கும் மூக்கு, மேலண்ணம், டான்சில் மேல்பக்க வற்றை இவை சென்றடைவதுடன், அவற்றிற்கு வந்தடையும் இரத்த நாளங்களை விரிவடையவும் செய்கின்றன. மேலும் உமிழ்நீர்ச் சுரப்பிகளான கீழ்த் தாடை, அடிநாக்குச் சுரப்பிகளையும் சென்றடை கின்றது. ஒன்பதாம் கபால நரம்பு கன்ன உமிழ் நீர்ச் சுரப்பியைச் சென்றடைகிறது. பத்து, பதினோராம் கபால நரம்புகள் இதயத் துடிப்பைப் பாதிக்கும் நரம்பிழைகளாகவும், உணவுக் குழாயின் அலை யியக்கத்தைத் தூண்டுவனவாகவும் அமைந்துள்ளன. இரைப்பை, கணையம், கல்லீரல் போன்ற உள் ள்ளு றுப்புகளுக்குச் சுரக்கும் நரம்பிழைகளாகவும் செயல் புரிகின்றன. சிறுநீரகங்கள், சஞ்சாரி (vagus) என்னும் நரம்பின் மூலம் உணர்வலைகளைப் பெறுகின்றன. தண்டு வடத் துணை நரம்பாகிய மூளை, தண்டு வட உபரி நரம்பின் (spinal accessory nerve) தானி யங்கு நரம்பிழைகளின் சஞ்சாரி நரம்பை, உள்கிளை மூலம் அடைந்து தானியங்கு நரம்புப் பகுதியுடன் தொடர்பு கொண்டுவிடுகின்றது. கபால், திரிக நரம்புப் பகுதியில் இருந்து இரத்த நாளங்களை விரி வடையச் செய்யும் நரம்பிழைகள் ப்ராஸ்டேட் சுரப் பிக்கும், விந்து சுரப்புக் குமிழ்களுக்கும் ஆண்குறி உறுப்புகளுக்கும் செல்கின்றன. சிறுநீரகப் பைக்குச் செல்லும் நரம்பிழைகளைத் தூண்டுவதால், விரிவடைகின்றது. சுருக்குத்தசை மேலும் நீள் தசை இழைகள் சுருங்குகின்றன். கீழ் இறங்கும் பெருங்குடல், மலக்குடல் ஆகிய உறுப்பு களும் திரிக தானியங்கு நரம்புப் பகுதி வாயிலாக இயக்கு நரம்பிழைகள் கீழ் இறங்கும் பெருங்குடல் மலக்குடல் ஆகிய உறுப்புகளைச் சென்றடைகின்றன. பெண்களின் கருப்பை, யோனி போன்ற உறுப்பு களில் உள்ள இயக்குத் தசைகளின் செயலைத் தடுக்கும் நரம்பிழைகள் சென்றடைகின்றன. கரு நாளங்கள், சூலகம் முதலிய உறுப்புகளையும் இதே போன்று நரம்பிழைகள் சென்றடைகின்றன. இந்த உறுப்பு களுக்கும், பெண் குறி உறுப்புகளாகிய கந்து, யோனி, சிற்றிதழ்ப் பகுதிகளுக்கும் செல்லும் இரத்த நாளங்