பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/782

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 உற்பத்தித்‌ திட்டமிடல்‌

762 உற்பத்தித் திட்டமிடல் தித் திட்டம், திட்டமிட்ட வழியில் நன்முறையில் நிகழ்வதைக் கண்காணிக்க வேண்டும். மூலப்பொருள், கருவி, எந்திரம் ஆகியவை வந்து சேர்வதற்கு முன்பும் வந்து சேர்ந்த பிறகும், உற்பத்தி நடைபெறும் போதும், உற்பத்தித் திட்டமும் கட்டுப்பாட்டு முறை யின் கடமைகளும், சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பின் வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. முன்னறிந்து கூறல். எதிர்காலத் தரம், தன்மை, தேவை போன்றவற்றை மதிப்பிட்டுக் கூறல். ஆணை எழுதுதல். ஒருவருக்கோ பலருக்கோ வேலையை எடுத்துச் செய்யத் தக்க அதிகாரம் அளிக்க ஆணை பிறப்பித்தல். உற்பத்தி வடிவமைத்தல். பொருள்களைப் பற்றிய விவரக் குறிப்பு, அளவுக் குறிப்பு, வரை படம் இவற் றைத் தொகுத்தல். செயல்முறை உள்ளடக்கிய திட்டமும் வழியும். மிக வும் சிக்கன முறையில் உற்பத்தி செய்வதைப் பற்றி யும் எங்கு, எப்படி அந்த உற்பத்தியைச் செய்ய முடியும் என்பது பற்றியும் கணக்கிடல். மூலப்பொருள்களின் கட்டுப்பாடு. நிர்ணயிப்பதும் கட்டுப்படுத்துவதும். தேவையை கருவிகள் கட்டுப்பாடு தேவைப்படும் கருவிகளை நிர்ணயித்தலும் கட்டுப்படுத்தலும். சுமை/பணி அளித்தல். தொழிலாளர்களின் எந்திர வேலைகளை நிர்ணயித்தல். அட்டவணைப்படுத்துதல். பதற்கும் தொடங்குவதற்கும் வேலைகளை முடிப் நேரங்களை நிர்ணயித்தல்.மேலும் எம்முறையின் அடிப்படை யில், வகைகளில் வேலையைத் தொடங்கி முடிக்க வேண்டும் என்பதையும் நிர்ணயித்தல். வெளி அனுப்பல். இது திட்டநிலையிலிருந்து செயல் நிலைக்கு மாறும் நிலையாகும். பணி முன்னேற்ற அறிக்கை. வேலை முன்னேற்றத் திற்கான அடிப்படை விவரங்களைத் தொகுத்தலும் ஒப்பீட்டு அடிப்படையில் மொழி பெயர்த்து அறிக்கை தொகுத்தலும். திருத்திய செயல். உண்மையில் திட்டமிட்ட படியே உற்பத்தி இருக்குமேயானால் அதனை மேலும் விரைவுபடுத்திச் செயலை முடிக்கச் செய்தல், திட்டம் ஒழுங்கான முறையில் திட்டமிட்ட அளவில் நடைபெறவில்லையெனில் அதை மாற்றி அமைக்க மறுதிட்டமிடுதல், தொழிலாளர் தொழில் அதிபர் களின் வசதியை முன்னிட்டும் நாட்டின் நலன் கருதி யும் உற்பத்தியைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்த லாம். தொடர் மற்றும் தொடரிலா உற்பத்தி. தொடர்ச்சி யாக மூலப் பொருள்களை வழங்குவதும் உற்பத்தி யைத் தொடர்வதுமாகும். சிமெண்ட் தொழிற் சாலை, வேதித் தொழிற்சாலை, சிகரெட் உற்பத்தி செய்யுமிடம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு களாகும். பெருமளவான தொடர் உற்பத்தி, தொடர் உற்பத்தி முறையைச் சார்ந்ததாகும். தொடரிலா உற்பத்தி. தொழிற்சாலையிலிருந்து தொடரிலா முறையில் மூலப் பொருள்கள் உற்பத் திக்கு வந்து கொண்டிருப்பதைப் பொதுநோக்கு எந்திரங்களின் மூலம் பல வழிகளிலும் பயன்படும் பொருட்டுச் சிறுசிறு பொருள்களை உற்பத்தி செய்ய லாம். எந்திரப்பட்டறைப் பாதுகாப்பு, பழுது பார்க்கும் தொழிலகம், பற்றவைக்கும் தொழிற்கூடம் ஆகியவை தொடரிலா உற்பத்திக்கு எடுத்துக்காட் டாகும். தொடரிலா உற்பத்தியைத் தொகுப்பு உற் பத்தி, வேலைச் சார்பு உற்பத்தி என வகைப்படுத்த லாம். பெருமளவு தொடர் உற்பத்தி முறையின் தன்மை. அதிக உற்பத்தி என்பது சிறப்பு வகை எந்திரங் களைக் கொண்டு உற்பத்திப் பொருள்களை மிகுதி யான அளவில் உற்பத்தி செய்வதாகும். திருகு. பிளாஸ்டிக் பொருள்கள் முதலியவை மிகுதியான முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. காற்றுப் பதனாக்கி, தொலைக்காட்சிப்பெட்டி, மோட்டார் சைக்கிள் முதலியவை தொடர்ந்து நிகழும் முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இம்முறையின் தனித் தன்மைகளாவன: தொழிலாளர்களின் வேலைப் பங் கீட்டு முறைக்கு வழி வகுத்தல், உற்பத்திக்கேற்ப எந்திரங்களை வரிசையாகவும் தொடர்ச்சியாகவும் அமைத்தல், பொருள்களை ஏற்றி இறக்குவது ஓர் அளவிற்குக் குறைக்கப்படுதல், மீண்டும் மீண்டும் எந்திரங்களை இயக்க எடுத்துக் கொள்ளும் நேரத் தைக் குறைத்தல், நேர அளவைப் பயன்படுத்திப் பல வகையான செய்முறைகளை ஒப்பிட்டுப் பார்த் தல், தொழிற்கூட வரைபடம், வசதி ஆகியவற்றை உற்பத்திக்கு ஏற்றவாறு வடிவமைத்தல், அதிக உற்பத்தியினால் விலை குறைப்பிற்கு வழி செய்தல் ஆகியன. ஆனால் தொடரிலா உற்பத்தியை ஒப்பிடும் போது வேலையின் முன்னேற்றம் குறைவாகும். தொடர் உற்பத்தியின் தனித்தன்மை. தொடர் உற்பத்தி மிகவும் முக்கியமானதாகும். அனைத்துப் பொருள்களும் ஒரே வழி முறையில் நடத்தப்படும். மூலப் பொருள்கள் ஒரு வழியாக உட்சென்று மறுவழியில் முழுப்பொருள்களாக வெளியாகும். தானியங்கியினால் பொருள்கள் அல்லது கருவிகள் கையாளப்படுகின்றன. உற்பத்தியின் தேலைக்கேற்பத் தொழிற்கூட வரைபடம் மாற்றியமைக்கபபடும்.