பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/784

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 உறக்கம்‌

764 உறக்கம் வாகப் பொருள்கள் உற்பத்தி செய்ய முற்படுவதால், உற்பத்திச் செலவு அதிகமாவதுடன் காலமும் வீணா கின்றது. இன்றைய சூழ்நிலையில் மேலும் மேலும் சிக்கலான புதிய பொருள்களை மிகுதியாக உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. இயற்கை வளமும் குறைந்து கொண்டே வருகின்றது. அவற்றைச் சரியாகக் கையாள வேண்டிய இன்றியமையாமையும் ஏற்படு கிறது. இவற்றால் பொறியியலின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. குறிக்கோள். உற்பத்திப் பொறியியலின் பொது வான குறிக்கோள் மனித சமுதாயத்திற்குப் புதுப் புதுப் பொருள்களை அளிப்பதேயாகும். உற்பத்திப் பொறியியலின் திறமையான நடவடிக்கைகளின் விளைவுகள் பின்வருமாறு: அதிக அளவு உற்பத்திக்குத் தேவையான அனைத்துத் தொழில்நுட்ப விவரங்களையும் அளிக் கிறது. நம்பிகைக்குரிய தரமான பொருள்களை அளிக் கிறது. உற்பத்திச்செலவைக் குறைக்கிறது. முதலீட்டுச் செலவைச் சிக்கனமாக்குகிறது. தரமான உற்பத்தி யால் வாடிக்கையாளரின் ஆய்வுச் செலவுகளை மிகுதியாகக் குறைக்கிறது. குறைக்கிறது. சிறப்பு எந்திரங்கள், தொழில் நுட்பங்களின் தேவையைச் சற்றே கட்டுப் படுத்துகிறது. முக்கிய மூலப்பொருள்களின் தேவை யைக் குறைக்கிறது. திறமைமிக்க மனித ஆற்றலின் தேவையைக் குறைக்கிறது. கழிவுப் பொருள்களையும் அவற்றால் ஏற்படும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அவற்றையும் செய்து. இப்பட்டறிவைக் கொண்டு அதிக அளவு உற்பத்திக் குத் திட்டமிட வேண்டும். அப்போதுதான் சிக்கன மாக உற்பத்தி செய்யும் நுணுக்கங்களை அறிந்து கடைப்பிடிக்க இயலும். உற்பத்திப் பொறியியலின் நிலை. புதிய பொருள் களை ஆய்வின் மூலம் முதிர்வுறச் செய்தலுக்கும் அதிக அளவு உற்பத்திக்கும் இடையே உற்பத்திப் பொறியியல் பல நிலைகளில் படிப்படியாகச் செயல் படுகின்றது. புதிய பொருளை முதிர்வுறச் செய்த லில் வடிவமைப்புப் பொறியியல், உறுப்புகளைத் தோற்றுவித்தல், நடைமுறைக்கேற்ற ஆய்வு, பொறி யியல் ஆய்வு ஆகியவற்றிற்குப் பங்குண்டு. வடிவமைப்பின் மூலம் ஒரு தகுதியான பொருளை உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்ட வுடன் உற்பத்திப் பொறியியல் முறைகளைத் தாடங்கலாம். உற்பத்திப் பொறியியலுடன் முதிர்ந்த வளர்ச்சிச் செல்கள், இறுதியான ஆய்வில் உருபொருளின் இயக்கம் வெற்றி பெறும் வரை தொடர வேண்டும். இக்கட்டத்தில் வடிவமைப்புப் பொறியியல் தொழிலகப் பொறியியல் ஆய்வுப் பிரிவு ஆகியவை ஒன்றோடு ஒன்று ஒத்துழைத்துத் தக்க மாற்றங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். பொறியியலின் நலவாழ்வுக் கேட்டையும் முடிந்த அளவு விலக்குகிறது. அதிக அளவு உற்பத் திக்காகச் செய்யப்படும் முதன்மை ஏற்பாட்டிற்குரிய காலத்தை ஓரளவு குறைக்கிறது, செந்தரமான உறுப்புகளைப் பயன்படுத்த ஆவன செய்கிறது. உற்பத்தி முறை. கையாளப்பட வேண்டிய உற்பத் திப்பொறியியல் முறைகள் சூழ்நிலைக்குத் தக்கவாறு மாறுபடும். ஒரு பொருள் முன்னரே உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் பொருளை ஒத்திருப்பின், உடனடி யாகப் புதிய பொருளின் உற்பத்தியைத் தொடங்க லாம். ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் உலகில் புதிதாக வடிவமைக்கப்படும் பொருள்கள் பழைய பொருள்களில் இருந்து மிகுதியாக மாறுபட்டவை யாகவே உள்ளன. இத்தகைய சூழலின் முன்னோடி மாதிரிகள் தயாரித்து அப்பட்டறிவில் ஏற்படும் சிக்கலைக் களைந்தெறியத் தேவையான மாறுபாடு களைச் செய்த பின்னர் அதிக அளவில் உற்பத்தியைத் தொடங்கலாம். இதற்கும் மேலாக, ஆய்வின் மூலம் முற்றிலும் புதிய ஒரு கருவியைக் கண்டுபிடித்து அதை உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலையில் மேலும் விரிவான முறைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் மாதிரிப் பொருள்களை உருவாக்கி ஆய்வு செய்யவேண்டும். வடிவமைப்பில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் உடனே மாற்ற வேண்டும். பிறகு குறைந்த அளவு உற்பத்தி செய்து உற்பத்தி முறையில் இறுதியான ஆய்வுகளுக்குப் பிறகும் உற்பத்திப் வேலைகள், போதுமான எண் ணிக்கையில் பொருள்கள் உற்பத்தியாகும் தொடர்ந்து நடக்க வேண்டும். அப்போதுதான் பொருள்களின் தரம் ஆய்வின் முடிவுப்படி அமையும். வரை இப்போது அதிக அளவு உற்பத்திக்கு ஆயத்த மாக அனைத்து வரைபடங்கள், திட்டக்குறிப்புகள், அளக்கும் கருவிகளின் வரைபடங்கள், உறுப்புகளின் உற்பத்தி பற்றிய விளக்கங்கள் போன்றவை அடங் கிய தொழில் நுட்பக் குறிப்புகள் உற்பத்தி நிலைக்கு மாற்றப்படுகின்றன. இறுதியாக, உற்பத்திப் பொறி யியலை ஆய்வின் முதிர்ச்சியோடு தொடர்ந்து செயல் படுத்த, தக்க நேரத்தில் பண ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையேல் அதன் முழுப் பயனையும் பெற இயலாது. உறக்கம் எ. இளங்கோவன் தன்னையும், சுற்றுப்புறத்தையும், உணர்வுகளையும் தெரிந்து இருக்கும் உளஞ்சார்ந்த நிலையை விழிப்பு நிலை எனலாம். இதில் தெரிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் அடங்கும். உறக்கம் என்பது மேற் கூறியதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.