பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/787

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதியற்ற சமநிலை 767

கூழ்மக் கரைசல்கள் அல்லது புரதப் பொருள்கள், சிலேட்டுமப் படலங்களின் மீது ஒட்டிக் கொண்டு ஒரு பாதுகாப்புப் பொருளாக உறுத்தலடக்கி செயலாற்று கிறது. உறுத்தடலக்கிக்குச் சான்றாக, டிரகாகாந்த் (tragacanth) அகேசியாபிசின் (acacia gurm) பால், ஜிலேட்டின் கூழ்மங்களைக் கூறலாம். உறுதியற்ற சமநிலை அ. கதிரேசன் நுண்பொருள்களின் இயக்கப் பண்புகளை அறியக் குவாண்டம் கொள்கையே நுட்பம் மிக்கதாக உள் ளது. இக் கொள்கைப்படி, ஒரு நுண்பொருள் அமைப்பு, குறிப்பிட்ட சில ஆற்றல் நிலைகளில் இருக்க முடியும். புறத்தாக்குதல் எதுவுமில்லாதபோது பொதுவாக ஓர் அமைப்பு தன் தாழ் ஆற்றல் நிலையி லேயே (ground state) இருக்கும். தாழ் ஆற்றல் நிலைக்கும், அடுத்த ஆற்றல் நிலைக்கும் வேறுபாடான ஆற்றலை வெளியிலிருந்து ஊட்டினால், அவ்வமைப்பு தன் அடுத்த ஆற்றல் நிலைக்குப் பெயர்ச்சி அடை கின்றது. இந்நிலை, அவ்வமைப்பின் முதல் கிளர்ச்சி நிலை (first excited state) எனப்படும். இதுபோல அவ்வமைப்பு இரண்டாம், மூன்றாம் கிளர்ச்சி நிலைகளில் இருக்க முடியும். பொதுவாக இக்கிளர் வுறு நிலைகள் நிலையானவை அல்ல. எனவே, அவ் வமைப்பு கிளர்ச்சி நிலையைப் பெற உட்கவர் ஆற் றலை ஒன்று அல்லது இரண்டு ஃபோட்டான்களாக உமிழ்ந்து மீண்டும் தாழ் ஆற்றல் நிலையையே அடை கின்றது (படம்-1). அதாவது கிளர்வுறு நிலைகளின் வாழ்வு மிக மிகக் குறுகிய காலமாகும். சில நெறி முறைகளால் இக்கிளர்ச்சி நிலை உறுதியற்ற சமநிலை 767 யானதாக இருக்க முடியும். அவ்வாறு வழக்கத்திற்கு மாறாக இருக்கும் கிளர்ச்சி நிலைகளே உறுதியற்ற சம நிலைகள் எனக் குவாண்டம் கொள்கைகளில் கூறப்படுகின்றது. உறுதியற்ற சமநிலையில் உள்ள ஓர் அமைப்பில், கிளர்ச்சி நிலையிலிருந்து, ஆற்றல் நிலைக்கு நிலைப் பெயர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதன் காரணம் அறியத் தக்கது. பெரும்பாலான அணுக்களின் அமைப்பில் கிளர் வுறு நிலைகள், ஏறக்குறைய 10-8 நொடி என்ற குறுகிய காலத்திற்குள் ஒரு ஃபோட்டானை உமிழ்ந்து சிதைவுறுகின்றன. எனினும் ஹைட்ரஜன் அணுவின் இரண்டாம் கிளர்ச்சி நிலை கோண உந்தம் (angular momentum ) இடவலச் சமச்சீர் போன்ற பண்புகளின் மாறாக் கோட்பாட்டின் காரணமாக, சமகாலத்தில் இரு ஃபோட்டான்களை உமிழ்ந்து சிதையக் கூடிய தாக இருக்கின்றது. இதனால் அதன் வாழ்வு ஏறக் குறைய 0.15 நொடி அதிகரிக்கின்றது. க இதுபோலவே கிளர்ச்சியுற்ற அணுக்கரு ஒரு காமா கதிர் ஃபோட்டானை உமிழ்வது பொதுவாக 10-13 நொடி அல்லது அதற்கும் குறைவான காலத் திற்குள் நிகழ்கின்றது. எனினும் In 1i3 என்ற அணுக் கருவின் ஒரு கிளர்ச்சி நிலையின் வாழ்வு ஏறக்குறைய நூறு நிமிடம் உள்ளது. நிலை பெயர்வு வாய்ப்பு (transition probabilities) அதிர்வெண் குறைவிற்கு ஏற்பக் குறைவதால், தாழ்ந்த கிளர்வுறு நிலை, வழக்கமான வாழ்வுக் காலத்தைவிடக் கூடுதலான வாழ்வைப் பெற்றிருக்கலாம். இதனால் இது உண்மை யான உறுதிச் சமநிலை ஆகாது. தற்போது வான் இயற்பியலில் உறுதியற்ற சம நிலைக் கோட்பாடு தனிச் சிறப்பிடம் பெற்று வருகின் றது. எடுத்துக்காட்டாக ஒண்முகிற் படலங்களின் மூன்றாம் கிளர்ச்சி நிலை உட்கவர் ஆற்றல் இரண்டாம் கிளர்ச்சி நிலை மூதல் கிளர்ச்சி நிலை உமிழ்வு ஆற்றல் அடிமட்ட ஆற்றல் நிலை