பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/790

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 உறுப்பு அமைப்பு ஒற்றுமை

770 உறுப்பு அமைப்பு ஒற்றுமை உறுதியின்மைக் பயன். கோட்பாட்டைக் கொண்டு ஓர் எலக்ட்ரான் அணுக்கருவினுள் இருக்க இயலாது என்பதை நிறுவலாம். அணுக்கருவின் பரி மரணம் 10-14 மீட்டர்; எனவே ஓர் எலக்ட்ரான் அணுக்கருவினுள் இருந்தால் அது அணுக்கருவின் பருமனில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே அதன் இருப்பிடத்தை மதிப்பிடுவதில் ஏற் படும் தவிர்க்க இயலாத சிறுமப் பிழையும் 10-14 மீ. ஆகும். இதிலிருந்து எலக்ட்ரான் உந்தத்தில் நிகழும் தவிர்க்க இயலாத பிழையையும் மதிப்பிடலாம். உறுதியின்மைக் கோட்பாட்டின்படி A p = h = 10-20 ஏற்படும் பிழையையே எலக்ட்ரானின் உந்தம் எனக் கொண்டால், அதன் இயக்க ஆற்றல் (T) என்பது உந்தம் (P) மற்றும் ஒளியின் திசைவேகம் (c) இவற்றின் பெருக்கற் பலனாகும். ஏனெனில், அதிக உந்தத்தைப் பெற்றுள்ளன. ஒரு துகளின் இயக்கத்தை நியூட்டனின் இயக்க விதிகளை விட, அய்ன்ஸ்டீனின் சார்புக் கொள்கைகள் தெளி வாக விவரிக்கின்றன. எனவே, T = 3X10-15 ஜுல் 20 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் நிலைப்புத் தன்மையற்ற ஓர் அணுக்கருவிலிருந்து, கதிரியக்கத்தின்போது வெளிப்படும் எலக்ட்ரான் கள், இதில் ஒரு சிறு பகுதி ஆற்றலுடையனவாகவே இருக்கின்றன என ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள் ளது. இதனால் ஓர் எலக்ட்ரான், எலக்ட்ரானாக அணுக்கருவினுள் இடம் பெற முடியாது என்பது தெளிவாகின்றது. நிலையற்ற அடிப்படைத் துகளின் வாழ்வுக் காலத்தைக் கண்டறியவும் உறுதியின்மைக் கோட் பாடு பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு நிலையற்ற துகள் (மின்னூட்டமற்ற ஒமேகர் ஒத்த தீர்வுத் துகள்) முற்றிலுமாகச் சிதைவுற்று ஆற்றலை உமிழ்வதாகக் கொள்ளலாம். அது வெளிவிடும் மொத்த ஆற்றலே அதன் நிறையாகும். அதன் நிறை யைக் கண்டறியப் பலமுறை ஆய்வுகளைச் செய்த போது சூழ்நிலைக்குத் தக்கவாறுமி.எ.வோ வேறு பாடு காணப்பட்டது. அதன் சராசரி நிறையை 783 மி. எ. வோ எனக் குறிப்பிட்டால், ஆய்வின்படி அதன் நிறை 783+7மி.எ.வோ. ஆகும். ஆற்றல் அளவீட்டில் ஏற்படும் பிழையை 7 மி.எ.வோ எனக் கொண்டால் அத்துகளின் வாழ்வுக் காலம் h/7 mev ஆகும். இது 5×10-33 செக. ஆகும். ஹைசன்பர்க்கின் உறுதியின்மைக் கோட்பாட் டைக் கொண்டே யுகாவா என்ற ஜப்பான் நாட்டு அறிஞர் முதன் முதலில் மெசான் என்ற புதிய அடிப் படைத் துகளைக் கற்பித்தார் (காண்க, யுகாவா கொள்கை). நுண்பொருள் பற்றிய இயற்பியலில் உறுதியின்மைக் கோட்பாட்டை ஓர் ஆய்கருவியாகப் பயன்படுத்தலாம் என்பதை உறுப்பு அமைப்பு ஒற்றுமை புலப்படுத்தியது. மெ. மெய்யப்பன் இது முதுகெலும்பு உள்ள விலங்குகளிடையே மாறு படும் புறச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி யமைப்பதற்கான போராட்டத்தைக் குறிப்பிடு கின்றது. பயனற்ற உறுப்புகளை மறையச் செய்தலும் புதிய உறுப்புகளை உருவாக்குதலும் அடங்கிய தாகும். மனிதனின் கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், இப்போதுள்ள நிலையை அளவிடவும் இது ஏதுவாக அமைகிறது. மனிதனின் எதிர்காலம் பற்றிக் கூறவும் இயலுகின்றது. பூமியில் விலங்கினங் களும், தாவர இனங்களும், மாறிக் கொண்டேயிருக் கும் தன்மை வாய்ந்தவை. முந்நூறு மில்லியன் ஆண்டு களுக்கு முன்னர் பூமியில் இருந்த விலங்கினங்களும், தாவர இனங்களும் இப்போது இல்லை. நாளைய உலகில் மேலும் பல மாற்றங்கள் உண்டாகவாம். உறுப்பு அமைப்பு ஒற்றுமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது பல காரணங்களை ஆராயத் தூண்டு வதுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பதை அறியச் செய்யவும் துணை நிற்கிறது. இதை நன்கு அறிய அடிப்படையில், ஆர்க்கிடெக்சரல் அமைப் பும், அதன் மாற்றங்கள் உடற் பகுதியில் எவ்விதம் செயலாற்றுகின்றன என்ற உணர்வும் வேண்டி யுள்ளன. பொது உடல் அமைப்பு. உடல் அமைப்பு தலை, உடல், வால் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது. இரு பக்கங்களிலும் உள்ள உறுப்புகள் சில முதுகெலும்புள்ள விலங்குகள் நீங்கலாக அனைத்து உயிரிகளின் உடல் உறுப்பிலேயே அமைந்துள்ளன. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்குத் தலைக்கும் உடலுக்கும் இடையே கழுத்துப் பகுதி உருவாகின்றது. தலை. இரு பக்கமும் சமமாக உடற்பகுதியுள்ள விலங்குகளின் தலைப் பகுதியில் சிறப்பு உணர்ச்சி உறுப்புகள் தோன்றின. சூழ்நிலைக்கு ஏற்றவாறு பல முதுகெலும்பில்லாத விலங்குகள் மாறத் தொடங்கின.