பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/801

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறை நிலையும் உறை கலவையும் 781

உறை நிலையும் உறை கலவையும் 781 வெப்பநிலை உருகுநிலை 1 C குளிர் ஆகும் நேரம். படம் 2. குளிர்தல் வீத வரைகோடு படிக நிலைகள் அல்லது ஆக்கக்கூறுகள் வெவ்வேறு வெப்பநிலைகளில் உருகுவதே இதற்குக் காரணம் (படம் 3). வெப்பநிலை நேரம் படம் 3. கலவைகள் படிக உருவற்ற பொருள்களின் குளிர்தல் வரைகோடு 1849 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் தாம்சன் அழுத்தத் தின் காரணமாகப் பொருள்களின் உருகு நிலை மாறுவதைக் கண்டுபிடித்தார். உருகினால் சுருங்கு கிற பொருள்களின் உருகுநிலை அழுத்தம் அதிகரிக் கும் போது குறையும். உருகினால் விரிகிற பொருள் களுக்கு அழுத்தத்துடன் உருகுநிலை அதிக உருகு நிலை மாறுகிற மாகும். அழுத்தத்துடன் விதத்தைப் பின்வரும் கிளாசிய்ஸ் - கிளே பிரான் சமன்பாடு அளிக்கிறது. - dT T (V, V₁) dp LJ இங்கு dT என்பது T என்ற உருகு நிலையுள்ள பொருளின் உருகு நிலையில் dp என்பது அழுத்த மாற்றம் காரணமாக ஏற்படும் மாற்றம். L என்பது திண்மத்தின் உருகுதலின் உள்ளுறை வெப்பம். Vi. V. ஆகியவை முறையே திண்மம், நீர்மம் ஆகிய வற்றின் அலகு நிலைப் பருமங்கள் எனில் அதாவது திண்மம் உருகும் போது விரிவடையுமானால் dT/dp நேரினம். அப்போது அழுத்தம் அதிகரிக்கும் போது உருகு நிலை உயரும்; V< V, எனில் அதாவது திண்மம் உருகும் போது சுருங்குமானால், dT/dp எதிரினம். அழுத்தம் அதிகமாகும்போது உருகு நிலை குறையும். அழுத்தம் ஒரு வளி அழுத்தத் திற்குச் சமமாக அதிகரிக்கும்போது பனிக்கட்டியின் உருகு நிலை 0.0073°C குறைகிறது. மெழுகின் உருகு நிலை 0.04°C அதிகரிக்கிறது. இரண்டு பனிக்கட்டிகளைச் சேர்த்து அழுத்தி னால் அவை ஒட்டிக் கொண்டு விடுகின்றன எனப் பாரடே கண்டுபிடித்தார். அழுத்தம் செலுத்தப் படும்போது உருகுநிலை குறைவதால் பனிக்கட்டி நீராகிறது. அழுத்தத்தை நிறுத்தியவுடன் அது மீண்டும் பனிக்கட்டியாக உறைந்து விடுவதால் பனிக் கட்டிகள் ஒட்டிக் கொண்டு விடுகின்றன. இது மறு உறைவு எனப்படும். ஒரு பனிக்கட்டிப் பாளத்தில் ஒரு கம்பி வளையத்தை மாட்டி அதிலிருந்து ஓர் எடையைக் கட்டித் தொங்கவிட்டால் கம்பி வளை யம் மெல்லப் பனிக்கட்டியின் ஊடாகக் கடந்து சென்று விடும். ஆனால் பனிக்கட்டி இரண்டாகப் பிளவு படாது. கம்பி அழுத்தும் இடத்தில் பனிக் கட்டி உருகி விடுவதும், கம்பி அந்த இடத்தைக் கடந்ததும் அப்பகுதி மீண்டும் உறைந்து விடுவதுமே இதற்குக் காரணம். இரும்பும் நீரைப் இரும்பும் நீரைப் போன்று உருகினால் சுருங்குவதும், உறைந்தால் விரிவடைவது மான தன்மையுள்ளது. பனிக்கட்டிகளை அழுத்தி ஒட்ட வைப்பது போலவே இரும்பையும் அழுத்தி ஒட்ட வைக்கலாம். கொல்லர்கள் சூடான இரும்புத் தண்டுகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்துச் சம் மட்டிகளால் அடித்து அவற்றை ஒட்ட வைப்பது வழக்கம், பனிப் படலங்களின் மேல் காலை வைத் தால் வழுக்கி விடுவதற்கும், பனிச்சறுக்கு விளையாட் டின் போது விளையாடுபவர்கள் எளிதாகப் பனிப் சறுக்கிக் கொண்டு செல்வதற்கும் பரப்பின் மேல் பனி காரணமாகப் அழுத்தம் உருகிவிடுவதே காரணம். பனியாறுகள் நகருவதற்கும் இதுவே காரணம், பனிக்குவியலில் எடை காரணமாக அதற் கடியிலுள்ள பனி உருகி நீராவி வெளியே வந்துவிடும். வெளியே வந்ததும் அது மீண்டும் உறையும். இவ் வாறு பனி மெல்ல மெல்ல மலை உச்சிகளிலிருந்து கீழே இறங்கி வருகிறது.