பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/813

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊசல்‌ 793

ஊசல் 793 கலிலியோதான் என்று ஊசலின் ஆட்டத்தால் இயக்கப்பட்ட ஒரு நேர காட்டியை வடிவமைத்து, அதன் பதிவு உரிமையைப் பெற்றார். ஊசல் நேரம் காட்டியை முதலில் கண்டு பிடித்தது என்று சில வல்லுநர் கண்டுபிடித்தார் களும், ஹய்ஜன்ஸ்தான் வேறு சிலரும் கருதுகின்றனர். எனினும் ஹய்ஜன்ஸ் தான் ஊசல் குண்டை, ஓர் ஆதார மையத்தைச் அமைத்ததன் மூலம் சுற்றி ஊசலாடும் விதத்தில் ஊசலின் அலைவு நேரத்தைச் சரியாக நிலைப்படுத் தினார். ஊசல் எளிய எளிய ஊசல் என்பது ஓர் ஊசல் குண்டு ஒரு மெல்லிய கயிற்றின் நுனியில் கட்டித் தொங்கவிடப் பட்டுள்ள அமைப்பாகும். தொங்கு கயிறு, மிகவும் மெல்லியதாகவும், ஊசல்குண்டு எடையுடன் ஒப் பிடும்போது, எடையற்றதாகவும் உள்ளது. குண்டின் மையத்துக்கும், அது கட்டித் தொங்க விடப்பட்டுள்ள மைய ஆதாரத்துக்குமிடையே உள்ள தொலைவை மிகுவிப்பதன் மூலம், ஊசலின் அலைவுநேரத்தை அதிகரிக்கலாம். எனினும், ஊசல் குண்டின் பொருண்மையில் ஏற்படும் மாறு தல், இதன் அலைவு நேரத்தைப் பாதிப்பதில்லை. இதற்கு மாறாக, அலைவுநேரம், புவியில் ஊசல் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுகிறது. புவி ஈர்ப்பு விசை அனைத்து இடங்களிலும் ஒரே அளவுடன் இருப்பதில்லை என்பதே இதன் காரணமாகும். ஒரே ஊசல், கடல்மட்டத்திலிருந்து குறைவான உயரமுள்ள இடங்களில், உயரம் அதிகமுள்ள டங்களில் உள்ளதைவிட அதிக வேகத்துடன் ஆடுவதுடன், குறைவான அலைவு நேரங்களையும் கொண்டுள்ளது. அதாவது, ஓர் அலகுப் பொருண் மையின் மேலுள்ள புவியீர்ப்புவிசையால் பொருளுக்கு ஏற்படும் விளைவு, மிகச் சிறிய அளவில் மாறுபடுவதுடன், ஊசலின் தன்மையையும் பாதிக் கிறது. ஓரிடத்தில், ஓர் எளிய ஊசலின் அலைவு நேரம், அந்த ஊசலின் நீளத்தை, அந்த இடத்தின் புவியீர்ப்பு விசையால் வகுத்தால் வரும் ஒரு ஈவின் ஈரடுக்கு மூலத்தை இரண்டால் பெருக்கினால் வரும் தொகைக்குச் சமமாகும். ஒரு மீட்டர் நீளமுள்ள எளிய ஊசலின் அலைவுநேரம் இரண்டு நொடி யாகும். ஊசல் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கம் செல்ல ஒரு நொடி ஆகும். ஊசலின் அலைவுநேரம், இதன் கோண இடப் பெயர்ச்சியால் (angular displacement)(ஊசலின் செங் குத்து நிலைக்கும், அதன் மிக அதிக வீச்சுக்கும் இடையேயுள்ள கோணம்) சிறிது பாதிக்கப்படுகிறது. கோண இடப்பெயர்ச்சி 30° ஆனால், அலைவுநேரம், பொதுவாக உள்ள சமன்பாட்டின் மூலம் கிடைக்கும் அலைவு நேரத்தைவிட 1% அதிகமாக உள்ளது. ஐந்து பாகைக்குட்பட்ட வீச்சுகளுக்கு, அலைவுநேரம் 0.05% அளவே மாறுபடுகிறது. ஊசல் திருத்தம். ஊசல் குண்டின் எடையை அதி கரித்து அல்லது குறைத்து, ஊசலின் மையத்தை உயர்த்தி அல்லது தாழ்த்தி, ஊசலின் வீச்சை அதிகரிக் கவோ குறைக்கவோ இயலும். மேலும், ஊசல் குண் டைத்தாங்கும் தண்டு, வெப்பம் அதிகரித்தால் நீளவும், வெப்பம் குறைந்தால் சுருங்கவும் வழியுண்டு. வெப்ப மாறுதலுக்கு ஈடு செய்ய ஊசலில், இரும்பு பித்தளை யாலான பகுதிகளைக் கொண்ட தண்டு உள்ளது. வெப்ப உலோகங் மாற்றத்தின்போது, இவ்விரு களும், வெவ்வேறு அளவில் நீளமாறுதல் அடைவ தால், ஊசலின் நீளம் மாறாதிருக்கும்படிச் செய்யப் படுகின்றது. இம்முறையைத்தவிர வெப்ப மாறுதலுக் கேற்ப உயர்ந்தவாறும், தாழ்ந்தவாறும் அமைக்கப் பட்ட பாதரசக் கம்பம் கொண்டும், இன்வார் என் னும் பொருள் கொண்டும் செய்யப்பட்ட ஊசலா லும், ஊசலில் வெப்பத்தால் ஏற்படும் ஏற்படும் மாற்றங் களைச் சீர் செய்ய முடியும். ஊசல் வகைகளைக்கீழ்க் காணுமாறு வகைப்படுத்தலாம். கேட்டரின் திரும்பக் கூடிய ஊசல். இது புவியீர்ப்பு விசையின் அளவைக் கணக்கிட வடிவமைக்கப்பட் டுள்ளது. இதில், ஒரு பொருளின் பொருண்மை மையத்தின் இரு பக்கங்களிலும் அமைத்துள்ள இரு கத்திமுனை ஆதாரங்களைக் கொண்ட பொருள் உள்ளது. இதில் குறைந்தது ஒரு கத்திமுனை ஆதா ரத்தில் நிறுத்தப்பட்டாலும், இந்த ஊசலின் அலைவு நேரம் ஒன்றாக இருந்தால், ஒரு கத்திமுனை ஆதா ரம், ஏனைய அலைவுமையத்தில் உள்ளதோடு, இவற் றிற்கிடையே உள்ள தொலைவும் இதே அலைவு நேரத்தையுடைய எளிய ஊசலின் நீளத்திற்குச் சம மாகும். இதிலிருந்து புவியீர்ப்பு விசையின் அளவைக் கணக்கிடலாம். . உந்து இயக்க ஊசல். துப்பாக்கிக் குண்டின் உந் தத்தை அளக்க இக்கருவி பயன்படுகிறது. இதில், ஊசல் குண்டாக உள்ள ஒரு மரத்துண்டுக்குள் துப் பாக்கி சுடப்படுகிறது. மரத்துண்டிற்குள் துப்பாக்கிக் குண்டு நிறுத்தப்பட்டு, அதன் உந்தம் ஊசலை அடை கிறது. ஊசலின் வீச்சிலிருந்து உந்தம் கணக்கிடப் படுகிறது. கோள வடிவ ஊசல். இது ஊசலாடும் தளம் சுழலும்படி அமைந்துள்ள கோள வடிவ ஊசலாகும். இது புலியீன் சுழற்சியை விளக்கும் விதத்தில் வடி வமைக்கப்பட்டுள்ளது. வடதுருவத்தில் அமைந்திருந் தால், இந்த ஊசலின் கீழ், புவியின் சுழற்சியால் புவியிலுள்ள பார்வையாளருக்கு, ஊசலின் இயக்கத் தளம், ஒரு நாளில் ஒருமுறை 360° சுழல்வதாகத் தோன்றும். குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஃபோகால்ட் ஊசலின் இயக்கத்தளம், சிறிது குறைந்த அளவில் சுழல்கிறது. இந்த அளவு உயரத் தைப் பொறுத்து அமைந்துள்ளது. ஊசல் என்ற முறுக்கு ஊசல், பெயருடைய போதும் இது ஊசல் வகையில் சேராது. இது முறுக்கு