பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/819

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊட்டநிலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ பேணுதல்‌ 799

லால், இத்தகையகாப்புத்தடிகள் செய்வதற்கு மிகுதி யாகப் பயன்படுகிறது. மரத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் நீளவாக்கில் துண்டாக்கி, ஒன்றுடன் மற்றொன்றை வஜ்ஜிரத்தால் இணைக்க, ஓர் உருளை வடிவம் கிடைக்கிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட தடிகள் உலர்த்தப்பட்டு, அவற்றின் மீது 1/32" கனத்திற்கு மாப்லா பூச்சுப் பூசப்படுகிறது. இப்பூச்சு ஒருவகை ஒளி புகும் பிளாஸ் டிக் ஆகும். ஈரம் மரத்தினை நேரடியாகத் தாக்குவதி லிருந்து காக்கும் ஒரு கவசமாக இப்பூச்சு அமை கிறது. ஈரம் மின்கடத்தாத் தன்மையைக் குறைக்கக் கூடியது. எனவே இத்தடிகள் எப்போதும் தூய்மை யாகவும், உலர்ந்த நிலையிலும் இருக்குமாறு மிகவும் விழிப்புடன் பாதுகாக்கப்படவேண்டும். இத்தடிகள் ஓர் அடிக்கு 75 கிலோ வோல்ட் அழுத்தத்தை ஐந்து நிமிடத்திற்குக் குறையாமல் தாங்குகின்றனவா ஆய்வு செய்யப்படும். பின்னர் இவை ஊட்டநிலைச் செலுத்தத் தொடர் பேணும் காப்புத் தடிகளாக ஏற்கப்படுகின்றன. என காலப்போக்கில் வேதி முன்னேற்றத்தின் காரண மாக எபாக்சி ரெசின் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கொண்டு உருவாக்கிய காப்புத் தடிகள் எபாக்சி கண்ணாடி என அழைக்கப்படுகின்றன. எபாக்ஸிரெசினுடன்கண்ணாடி நாரைச் சேர்த்து ஒரு குழாய் உருவாக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் நுரைகள் அடைக்கப்பட்டு இத்தடிகள் உருவாக்கப்படுகின்றன. இவை ஈரத்தை உறிஞ்சாத தன்மையுடையனவாத லால் மரத்தடிகளைவிடச் சிறந்தனவாகும். எபாக்ஸி கிளாஸ் தடிகள் ஓர் அடிக்கு 100 கி. வோ மின் அழுத்தத்தை ஐந்து நிமிடத்திற்குக் குறையாமல் தாங்கவல்லவை (படம் 1). இவ்விருவகைத் தடிகளின் முனையில் அலுமினிய உலோகக் கலவையிலான கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை வெப்ப முறையில் புடமிடப்பட்டு வலிமையாக்கப்படும். பேணுதல் பணிக்கு அதிகமாகப் பயன்படும் அடிப் படைக் காப்புத் தடிகளும் அவற்றின் பயன்களும் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன. மின் கம்பிக்குறடு அல்லது இடுக்கி. மின்னோட்ட முள்ள கம்பியைத் தூக்கிப் பிடிக்கவும், தொலைவில் வைக்கவும் இக்குறடு பயன்படுகிறது. இது 14-3 பருமனும், 8-12" நீளமும் உடையது. இணைப்புத்தடி இத்தடி, மிகு சுமை தாங்கும் இணைப்புத்தடி. கனத்த மின்கம்பியைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள வும், தொங்கும் நிலையிலுள்ள வட்ட மின் கடத்தாப் பீங்கான் தொடரைப் பேணவும் பயன்படுகிறது. இத்தடி 14 -2 * பருமனும், 2-6" நீளமும் உடையது. தொங்கும்நிலை இணைப்புத்தடி. இத்தடி, உயர் ஊட்டநிலைச் செலுத்தத் தொடர் பேணுதல் 799 துகள்கள் மாப்லா பூச்சு ஆ பாக்கு கண்ணாடி நார்க்குழாய் பிளாஸ்டிக் நுரை படம் 1.ஊட்டநிலைத் தொடர் பேணுதல் அ. மரக்காப்புத்தடியின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஆ. எபாக்சி காப்புத்தடியின் குறுக்குவெட்டுத் தோற்றம் மின் அழுத்தக் கோபுரத்தொடரிலுள்ள தொங்குநிலை வட்ட மின் கடத்தாப் பீங்கான் தொடரைத் தாங்கிப் பிடிக்கப் பயன்படுகிறது. இத்தடி 24" பருமனும் 76* நீளமும் உடையது. உருளி பொருத்தப்பட்ட இணைப்புத்தடி, ஊட்ட நிலை மின்காம்புகள் ஒன்றையொன்று தொடா வண்ணம், பக்கவாட்டில் இழுத்துப் பிடிக்க இத்தடி பயன்படுகிறது. இழுசுமை தாங்கும் இருகழித் துணைக்கருவி. மின்னோட்டக் கம்பியை இழுத்துப் பிடித்துக் கொண் டுள்ள வட்டமின் கடத்தாப் பீங்கானைப் பாதுகாக்க இக்கருவி பயன்படுகிறது. இத்தடி 2" பருமனும்,6' நீளமும் உடையது. பொதுப் பயன்பாட்டுத் தடிகள். இவ்வகைத்தடியின் முனையில் பொருத்தப்பட்டுள்ள உலோகத் துணைக் கருவிகளில், பல வகை அமைப்புகளைப் பொருத்த இயலும்.