பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/836

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816 ஊது காமாலை (சித்த மருத்துவம்‌)

816 ஊது காமாலை (சித்த மருத்துவம்) தாலும், உணவுகளின் வேறுபாட்டாலும், குளிர் காற்று தாக்குவதாலும், குருதி கேடடைந்து முக் குற்றங்களைத் தூண்டி ஊதல் நோயைத் தோற்று விக்கும். சன்னிபாத சுரங்களாலும், சிறப்பாகச் சித்த பிரமைச் சன்னியாலும், பாம்புக் கடியாலும், சில இடங்களில் தோன்றும் ஊறலாலும், சிறையிருத்தல், மலைவாசம், நீர்நிலை தரைகளில் வசித்தல், சாம்பல் மண் மா தவிடு போன்ற பொருள்களை மிகுதியும் உண்ணல் ஆகிய காரணங்களாலும் சோபை நோயுண்டாகும் என்பர். தொடக்கத்தில் உடல் வெளுத்தல், வலிமை குறை தல், சிறிது தொலைவு நடந்தாலும் கணுக்காலில் வீக்கமுண்டாதல், ஆயாசம் இளைப்பு தலைச்சுற்றல் மயக்கம் முதலியன உண்டாதல், நாளுக்கு நாள் வீக்கம் மிகுந்து கால் முகம் வயிறு இவற்றி லும் கால் முதல் தலை வரையிலும், முகத்திலிருந்து கீழ்நோக்கியும் ஊதல் ஆகியவற்றைக் காணலாம். யூகி முனி சிந்தாமணியில் நான்கு வகையான ஊதல் நோய்கள் கூறப்படுகின்றன. அவை வளி ஊதல் நோய் (வாதசோபை), அழல் ஊதல் நோய் (பித்தசோபை), ஐய ஊதல் நோய், (பக சோபை அல்லது சிலேட்டுமச் சோபை) முக்குற்ற ஊதல் நோய் (திரிதோட சோபை) எனப்படும். சோபையில் தனித்தனிக் குற்றமாக மூன்றும், இரு குற்றக்கலப்பால் மூன்றும், முக்குற்றத்தாலுண் டாவது ஒன்றும், நஞ்சால் வருவது ஒன்றும், அடிபடு தல் கட்டிகள் இவற்றால் வீங்குவது ஒன்றும் ஆக ஒன்பது வகை ஊதல் நோய்கள் கூறப்பட்டுள்ளன. ஆயினும் சித்தர் நூல்களில் நான்கு வகையான ஊதல் நோய்களைப் பற்றியே காணலாம். இந்நோய் வருமுன்னே உடல் வற்றி வெளுத்திருக் கும். உடல் வலிமை குறையும்; செரியாமையுண் டாகும். சிறிது நடந்தாலும் இளைப்பு உண்டாகும். மயிர் முனை சிவந்திருக்கும்; தூக்கம் கெடும்; உடல் வலி ஏற்படும்; உடல் நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே வரும். இந்நோயில் உடல், கண், புருவம், மூக்குத் தண்டு, மயிர் இவை மஞ்சள் நிறமாகும். சிலசமயம் உடல் சிவக்கும். வாந்தி, நீர் வேட்கை, இளைப்பு, சோர்வு, தலைவலி என்னும் அறிகுறிகளைக் காட்டி, நாளுக்கு நாள் உடல் வலிமை குறைந்து ஊட்ட மின்றி நடக்க முடியாமல் போகும். மயக்கம், வியர்த் தல், உடல்குளிர்தல் போன்ற அறிகுறிகளை இந் நோய் கொண்டிருக்கும். உடலின் தோல் தினவெடுத்து, மயிர்க் கால் தோறும் வெளுத்துப் பின்பு உடலும் வெளுக்கும். குளிர் சுரம் அடிக்கடி வரும். தூக்கமின்மை, கண் எரிச்சல், குரல் கம்மல், ஊழிநோய் போன்று பேதி யாதல், தலை. சுற்றல், உடல் முழுமையும் குருதி சுரந்து வீங்கல், மனம் அடிக்கடி திடுக்கிடல் என்பன ஏற்பட உடல் நாளுக்குநாள் வீங்கிக் கொண்டே. போகும். இந்நோயில் அடிக்கடி பெண்கள் மேல் சினங் கொள்ளல், உடல் வீங்குதல், சுரங்காய்தல், வயிறு கழிதல், வயிற்றுக்கடுப்பு, கீழ்வாய்க்கடுப்பு, உணவு வேண்டாமை முதலிய குறிகுணங்களையும், கால் கை துவளல், நடந்தால் பெருமூச்சு வாங்கல், தலைசுழலல், வாயில் நீர்சுரத்தல் போன்ற அறிகுறிகளையும் காணலாம். -சே. பிரேமா ஊது காமாலை (சித்த மருத்துவம்) பதின்மூன்று வகைகளில் காமாலையும் ஒன்றாகும். ஆனால் அகத்திய முனிவரால் காமாலை ஆறு வகைப் படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இந்நோயில் வாய்நீர் ஊறல், வாய் குமட்டல், உண வில் வெறுப்பு, செரியாமை, உடல் வறட்சி, தோல் சுருங்கித் தவளைத் தோலை ஒத்திருப்பது ஆகிய குறிகள் காணப்படும். கண், நகக்கணு, முகம், தோல், சிறுநீர் ஆகியவை மஞ்சளாக இருக்கும். கண்களில் பீளை கசிதல், முகத்தில் வியர்வை. உடல் வீங்கி வளைதல், உடலில் வெப்பம் மிகுந்து சுபத்தைக் கூட்டுதல், உடல் வாடல், திமிர்த்தல் என்பனவும் அறிகுறிகளாகும். எளிதில் தக்க மருத்துவம் செய்தால் காமாலை நீங்கும். மருத்துவம். இதற்குக் கீழ்க்காய்நெல்லிச் சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, கரிசாலை லேகியம் இவற்றை உட்கொள்ளலாம். உணவு. புளி, உப்பு இல்லாத உணவு, குறிப் பாகக் கஞ்சி நலம் தரும். எண்ணெய், நெய் இறைச்சி வகைகளை விலக்க வேண்டும். சி. ரெங்கராஜன் ஊதுசுருளி மின்னோட்டத்தைத் துண்டிப்பதற்காக ஓர் இணைப்பு மாற்றியிலுள்ள (switch) தொடுவான்கள் (contacts ) விலகுகின்றன. அப்போது உருவாகும் ஒரு மின் ஒளி வில்லை நீட்டித்து அதை அணைப்பதற்காகக் காந்தப் புலம் தோன்றும். இதற்குப் பயன்படும் கருவியான