பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/838

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 ஊமழத்தை (சித்த மருத்துவம்‌)

8/8 ஊமத்தை (சித்த மருத்துவம்) ஊமத்தை (சித்த மருத்துவம்) இது 60-120 செ.மீ. வரை வளரும். வெளிப்புறம் நீல நிறம் கொண்ட வெள்ளைப் பூக்களையும், பந்து போன்ற காய்களையும் அடர்ந்த முள்களையும் கொண்டிருக்கும். எங்கும் விளையும் இதன் பூவும் மொட்டும் அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். பூ மொட்டை மராட்டி மொக்கு என்பர். இதற்கு நச்சுப்பண்பு இருப்பதால் நன்கு தெளிந்த பிறகே இதைப் பயன்படுத்த வேண்டும். இச்செடி யின் அனைத்துப் பகுதிகளுமே நச்சுத் தன்மை உடையவை. இதன் இலையைச் சுவாசக் காசநோயில் சுருட்டாகப் பயன்படுத்தலாம். வீக்கங்களுக்கும் கீல்வாயுவிற்கும் ஏற்றது. இதன் வேர்ப்பட்டைச் சூரணம் தலைவலியைப் போக்கும். மாதவிடாய்க் காலத்தில், இதன் இலை அல்லது விதையை அரைத்துப் பற்றுப்போட வலி குணமாகும். தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர் இதைத் தின்பதுண்டு. இதன் நீர்மம் அபினியைப் போல மயக்கத்தைக் கொடுக்கும். இலையைக் கஷாயமிட்டு நாய்க்கடிக்கும் கொடுப்ப துண்டு. இதன் இதில் வெள்ளை, சுறுப்பு என இருவகையுண்டு. வெள்ளையைவிடக் கறுப்பே சிறந்தது. இலையை வாத வீக்கத்திலும், மேக வீக்கத்திலும், வைத்துக் கட்டவும் ஒற்றடம் கொடுக்கவும் நலமளிக் கும். முகத்திலுண்டாகும் நரம்பு நரம்பு வீக்கங்களுக்கு, இதன் காய்ந்த சருகை எரித்துக் கொழுப்புடன் கலந்து பூசக் குணமுண்டாகும். இதில் சீமையினம், நாட்டினம் ஆகியவை இருப்பினும் இவற்றிடையே எந்த வேறுபாடும் இல்லை. இது அலோபதி மருந் தான பெலடோனாவுக்குச் சமமானது. அமெரிக்கா வில் இதன் சிவந்த பழத்தை ஒருவாறு பக்குவப் படுத்திப் பான வகையாகக் குடிப்பதுண்டு. இதன் இலையைச் சாராயத்தில் நனைத்து வலியுள்ள இடங் களில் வைத்துக் கட்ட வலி நீங்கும். இலையின் சாற்றை எண்ணெயிற் காய்ச்சிச் தோல் நோய்க்குப் பூசுவதுண்டு. ஊமத்தைப் புல்லுரு வியினால் வசியமுண்டாகும் என்று கூறுவர். வயிற் றுப் பூச்சிகளைக் கொல்லும் குணம் உடையது. இவ்வினத்தில் ஊமத்தை அகப்படுவது அரிது; இதன் குணங்களைத் தமிழ் மருத்துவ நூல்களில் லாம். காண ஊமத்தையின் இலை, பூ, காய், விதை முதலி யவை வாந்தியுண்டாக்கும்; இசிவகற்றும்; துயரடக் கும்; மூர்ச்சையுண்டாக்கும். இதன் சமூலம் நாய்க் கடிப்புண், குழிப்புண், கட்டி, நஞ்சு ஆகியவற்றை நீக்கும். இலையை உலர்த்திப் பொடிசெய்து 1 அல்லது 1 குன்றியளவு உள்ளுக்குக் கொடுக்க இரைப்புநோய் நீங்கும். ஊமத்தை இலை, அரிசிமா இவற்றை ஓர் அள வாக எடுத்து, சிறிது நீர் விட்டரைத்துக் களிபோல வேகவைத்து, எலும்பு மூட்டுகளிலுண்டாகும் வீக்கம், வலி தரும் கட்டி, வெளிமூலம் இவற்றிற்குப் பற்றா கப் போடலாம். ஆனால் புண்ணில் போடக் கூடாது. நரம்புச் சிலந்திக்கும் இது மிக நல்லது. கரும்பு வெல்லத்தில் இதன் சாற்றில் 1-3 துளி விட்டு மூன்றுநாள் கொடுத்துப் பாலன்னம் மோர் சாதம் கொடுக்கப் பேய்நாய்க்கடியின் நஞ்சு தீரும். பத்தியமாக உப்பு புளி இவற்றை நீக்க வேண்டும். தயிரில் இதன் சாறு 5-10 துளி சேர்த்துக் கொடுக்க, வெள்ளை தணியும். இலைச் சாறில் ஓரிரு துளி காதில்விடக் காதுவலி தீரும். வீக்கமுள்ள இடங் களிலும் தடவலாம். ஊமத்தை கண்தாரையைப் பெருக்கும். ஊமத்தையின் காய் வளிநோய், கரப் பான், கழலை, சொறி இவற்றை நீக்கினாலும் மயக்க மும் வெறிநோயும் உண்டாக்கும் இளங்காயைக் குடைந்து அதற்குள் கந்தகத் துண்டை வைத்து, அக்காயினாலேயே குடையப் பட்ட வாயை மூடிப் பசுவின் சாணத்திற்குள் வைத்து, காயை வேகும்படி புடமிட்டெடுத்து, சாணத்தைப் போக்கி வெந்த காயுடன் துளசியிலை சேர்த்து அரைத்து, உருண்டை செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு, சிரங்கின் மீது தூவும்போது சிரங்கு ஆறும். எண்ணெயுடன் குழைத்துப்பூச, கழலை, கரப் பான் போகும். ஊமத்தை இலையின் சாற்றைக் கொண்டு செய்யப்படும் மத்தன் எண்ணெய் புண், புரை, ஆறாப்புண், பிளவை. சதை வளர்தல் இவற்றைப் போக்கும். இதன் வித்து நஞ்சுகளையும் முப்பிணிக் கழிச்சலையும் நீக்கும்; காய்ச்சல் சுரம் இவற்றை நீக்கும். இதன் விதையைப் பசுவின் நெய்யில் அரைத்து மூலமுளையினடியிற் பூச மூலமுளை அற்று விழும். இவ்விதையைக் காடி அல்லது தேனில் அரைத் துக் கொதிக்கவைத்துக் கட்டிகள் மேல் பூசக் கட்டிகள் கரையும்; வீக்கத்தின்மீது பூச வீக்கம் குறையும். வலி குத்தலுள்ள இடங்களில் பூச, வலியையும் குத்தலை யும் நிறுத்தும். இதனால் மயக்கம் உண்டானால் மிளகு, சோம்பு, தேன் இவற்றில் ஒன்று அல்லது இரண்டைக் குடிநீராகக் கொடுக்க அந்நோய் விலகும். சிதைத்த விதை 45 கி. எண்ணெய் 420 மி.லி. சேர்த்து ஏழு நாள் வரை அரைத்து வெயிலில் வைத்து. எட்டாம் நாள் வடித்து அடிவயிற்றில் தடவச் சூதக வயிற்று வலி, நீர்த்தாரை எரிவு நீங்கும்; கன்னம், முகம், காது இவ்விடங்களில் காணும் குடைச்சலுக் கும், முப்பிணியில் உண்டாகும் வலிகளுக்கும் தடவ, நன்மை கிடைக்கும். கருவூமத்தை, ஊமத்தையைவிட மிகுந்த வன்மை யுள்ளது. சுக்கிலத்தையும், பாதரசத்தையும் கட்டும்,