பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/846

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826 ஊர்‌ வணரி இயங்கமைப்பு

326 ஊர் வணரி இயங்கமைப்பு படம் 4. மூன்றாம் தலைகீழ் மாற்று இயங்கமைப்பு. { 1 படம் 5. நான்காம் தலைகீழ் மாற்று இயங்கமைப்பு. கமைப்பில் உள்ள நான்கு தண்டுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிலையாகப் பொருத்தப்பட்டால் அவற்றை ஊர் வணரி இயங்கமைப்பின் தலைகீழ் அல்லது மாற்று அமைப்பு எனலாம். ஊர் வணரி இயங்கமைப் பில் மூன்று சுழல் இணைகளும் ஓர் ஊர் - இணையும் உள்ளன. மேலும் இதில் நான்கு கணு இணைப்புகள் உள்ளன. எனவே இதில் நான்கு தலைகீழ் மாற்று இயங்கமைப்புகள் கிடைக்கும். முதல் தலைகீழ்மாற்று இயங்கமைப்பு. இவ்வகை இயங்கமைப்பைப் படம் 2 இல் காணலாம். தில் முதல் கணு இணைப்பு நிலையான இணைப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். எடுத்துக் காட்டாக நீராவிப் பொறி, உட்கனற் பொறி, நீர் ஏற்றும் பொறி ஆகியவற்றைக் கூறலாம். இரண்டாம் தலைகீழ் மாற்று இயங்கமைப்பு. இதைப் படம் 3 இல் காணலாம். இதில் மூன்றாம் தண்டு நிலையான இணைப்பாக வடிவமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். இவ்வகை இயங்கமைப்பு கள் ஊசலாடும் பொறிகள், வணரி மற்றும் காடி யெடுத்த நெம்புகோல் இயங்கமைப்பு ஆகியவற்றில் பயன்படுகின்றன. மூன்றாம் தலைகீழ் மாற்று இயங்கமைப்பு. இதைப் படம் 4 இல் காணலாம். இதில் இரண்டாம் தண்டு நிலையான இணைப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இவ்வகை இயங்கமைப்புகள் சுழல் பொறிகளிலும்