பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/853

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்வு அளவுகோல்‌ 833

என்பர். இவற்றின் முதுகில் முக்கோண வடிவத் தகடுகள் மாறி மாறி இருந்தன. வாலின் மேல், நான்கு முள்கள் இருந்தன. வாலைச் சுழற்றி எதிரி விலங்குகளைத் தாக்க முடியும். முதுகில் உள்ள தட்டு கள் அச்சந்தரத்தக்க உருவத்தைக் கொண்டுள்ளமை யால் எதிரி விலங்குகள் இவற்றினருகில் வருவதற்குப் பயந்தன. இதுவே முதலில் அழிந்த டைனோ சாராகும். தட்டுடை டைனோசார்களுக்கு அடுத்து, கொம் புடைய டைனேசார்கள் சில வியப்பிற்குரிய இயல்பு களைக்கொண்டிருந்தன. டிரை செரட்டாப்ஸ் என்னும் டைனோசாரின் தலையில் மூன்று கொம்புகள் இருந் தமையால் அதை முக்கொம்பு டைனேசார் என்பர். இந்த ஆற்றல் மிக்க கொம்புகளால் எதிரி விலங்கு களோடு மோதித் தம்மைக் காத்துக் கொண்டன. இவை தாவரங்களையே உணவாகக் கொண்டிருந்தன. நிலத்தில் வாழும் டைனோசார்களில் டைமெட் ரோடான் என்னும் வகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவற்றின் முதுகு முள்கள் வியக்கத்தக்க உயரங் கொண்டிருந்தன. இந்தப் புதுமையான விலங்கில் நடு முதுகில் ஒரு நீள்வசத் துடுப்பு அல்லது கப்பற் பாய் போன்றதோர் அமைப்புக் காணப்பட்டது. சில வல்லுநர்கள் இத்துடுப்பு ஒரு பாதுகாப்பு உறுப்பாக விளங்கியது என்கின்றனர். சிலர் இத் துடுப்பு, விலங்கிற்கு அச்சந்தரத்தக்க தோற்றத்தை யும்,பெரும் உருவத்தினையும் கொண்டு எதிரிகளிட மிருந்து அது தன்னைப் பாதுகாத்துக் கொண்டது என்பர். ஆனால் இத்துடுப்பு இத்துடுப்பு வெப்பநிலையைச் சீராக்கப் பயன்பட்டிருக்க வேண்டும் என்ற கருத் தைப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மரங்களில் வாழும் ஊர்வன. இடையூழி ஊர்வன வகைகள், நீரிலும் நிலத்திலும் அல்லாமல் மரங்களி லும் சிறப்பாக வாழ்ந்தன. டிரோசாரியா என்னும் பறக்கும் ஊர்வனவற்றை இறக்கையுடைய ஊர்வன என்பர். இவற்றின் முன்கால்கள் பறப்பதற்கு ஏற்ற வாறு இறக்கைகளாக உருமாறியிருந்தன. வானில் இருந்து கீழே இரை தேடும் பறவையின் கண்களைப் போன்று இவையும் பெற்றிருந்தன. ராம்போரிங்ஸ் என்னும் இறக்கையுடைய ஊர்வன, கடலின் மேல் பறந்து, அவ்வப்போது மீன்களைத் துரத்தி நீரில் நீந்தித் தற்பொழுது வாழும் கட ற்பறவைகளைப் என்று வாழ்ந்திருக்கலாம் கிறது. ஆனால் இவை இடையூழியின் முடிவில் வலிமை மிக்க பறவைகளுடன் போட்டியிட முடியா மல் அழிந்து விட்டன. போன்று கருதப்படு இடையூழிக்காலத்தில் பெரும்பான்மையான கண் டங்களில் வெப்ப, மிதவெப்பத் தாவர வகைகள் மிகுதியாகக் காணப்பட்டன. இதனால் தாவர வுண்ணி டைனோசார்களுக்கும் பிற ஊர்வனவற்றிற் கும் குறைவில்லாமல் உணவு கிடைத்தது. இதனால் அ.க. 5-53 ஊர்வு அளவுகோல் 833 இவை பெருமளவில் உணலை உட்கொண்டு எண்ணிக்கையிலும், பருமனிலும் பெருகின. இல் வாறே தாவரவுண்ணியை உண்டு வாழ்ந்த டைனோ சார்களும் பெருகின. டைனேசார்களின் அச்சந்தரத் தக்க உருவமும், அவற்றின் பல மாறுபட்ட உடல் அமைப்புகளும் இவற்றிற்குப் பாதுகாப்பாக விளங்கிய மையால் எதிரி விலங்குகள் இவற்றை அணுகவில்லை. ஆகையால் இவற்றின் ஆதிக்கமே மிக்கிருந்தது. பெரிய விலங்கு வெப்பத்தை மெதுவாக ஏற்று, மெதுவாகவே வெளியிடுகின்றது. எனவே, எந்தச் உடல் சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமலிருக்கப் பெரிய உடல் பயன்பட்டது. பெரிய விலங்குகளில் வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருப்பதால், பெரிய டைனோசார்களுக்கும் பிற ஊர்வனவற்றிற் கும் குறைவான உணவே போதும். எனவே, அவை உணவு குறைவான சூழ்நிலையிலும் சிறப்பாக வாழ்ந்தன. இடையூழிக் காலத்தில் பெரும்பான்மையான விலங்குகள் ஊர்வனவே ஆகும். எனவே எதிர்ப்பு இன்மையால் அதிகமான எண்ணிக்கையில் அவை சிறப்பாக வாழ்ந்தன. எனவே அக்காலத்தைத் தொல்லுயிர் வல்லுநர்கள் ஊர்வனவற்றில் பொற் காலம் என்று குறிப்பிடுகின்றனர். இடையூழிக்காலத் தொடக்கத்திலும் இடையிலும் சிறப்புற வாழ்ந்த ஊர்வனவற்றில் பெரும்பான்மையானவை பல்வேறு காரணங்களால் இறுதியில் அழிந்து மறைந்து விட்டன. ஊர்வனவற்றை நினைவூட்டும் வகையில் இக்காலச் சிறிய விலங்குகளாகப் பல்லி,பாம்பு, ஆமை, முதலை போன்றவை வாழ்கின்றன. ஊர்வு அளவுகோல் - ஆர்.ஜமால் கே. சம்பாத் கணிப்பொறி (computer), கணிப்பான் (calculator) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதற்குமுன் பல்லாண்டு களாகக் கணிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட கருவி ஊர்வு அளவு கோல் (slide rule) ஆகும். இதில் அசையாத இரு சட்டதிற்கிடையில் ஊரக்கூடிய ஒரு சட்டம் பொருத்தப்பட்டிருக்கும். இவ்விரு சட்டங் களிலும் பல்வேறு அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். நகரும் சட்டத்திலும் பல அளவுகள் குறிக்கப்பட்டி ருக்கும். இந்த அளவுகோல் நெப்பியர் என்பவர் கண்டறிந்த மடக்கை (logarithm) அடிப்படையில் இயங்குகின்றது. பலவகையான A,B,C,D என்ற அளவுகோல் களிருக்கும். இரு எண்களைப் பெருக்குவதற்கும்,