பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/857

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊற்றுநீர்‌ உட்கூறுகளின்‌ உருவாக்கம்‌ 827

ஊற்றுநீர் உட்கூறுகளின் உருவாக்கம் உள்ளடங் நிலத்தின் அடியில் ஏற்ற இடங்களில் தங்கி இருந்து உரிய சூழ்நிலைகளில் வெளிப்பட்டோ கியோ இருப்பது ஊற்றுநீராகும். மழை, உறைபனி, ஓடை, ஆறு, ஏரி கீழ்த்தளம் ஆகியவற்றிலிருந்து கசிந்து உட்செல்லும் நீர் விண் நீர் (meteoric water) எனப்படும். துகள்பாறைகளின் இடைவெளிகளில் தங்கி எளிதாக மீட்க வாய்ப்புள்ள வகையில் அமை யும் ஊற்றுநீரை மேல்மீட்பு நீர் என்பர். இது நன்னீ ராகவோ உப்புநீராகவோ இருக்கலாம். ஊற்றுநீரின் மூலநீர், கடந்துவரும் பாறைப்படிவங்களிலுள்ள கரையும் உப்புகளின் ஏற்பு, உறையும் இடங்களின் காலம் ஆகியவற்றால் அமையலாம். அனற்பாறைகள் வெளிப்படும் வளிச்சேர்க்கை உருவாகும்போது யினால் உருவாகும் நீர் வெப்பம் மிகு நீராகவோ நிலத்துள் ஊற்றுநீராகத் தங்கவோ. தங்கவோ, வெளியில் தரைக்குக் கடத்தப்படவோ நேர்ந்தால் நீரை வளநீர் எனலாம். அத்தகு நிலத்தின் உள் தள அமைப்பால் உள்ள வெடிப்பு, பிளவு, துகளிடைவெளி ஆகியவற்றின் வழியேயும், துகள்பாறைகளின் கனிம இடைவெளிகளின் ஊடே யும் நீர் உள்ளிறங்கிச் சென்று மிகவும் அடியில் தங்கிப் பரவுகின்றது. இவற்றின் மேல்பரப்பு நிலநீர் மேல்மட்டம் (water table) எனப்படும். இந்த நீர்த் தளம் பெரும்பாலும் தரையின் ஏற்ற இறக்கச் சரிவு களுக்கு ஒப்ப இணையாகவே அமைகின்றது. இப் பொதுத்தன்மையினாலேயே குன்றுகளிலும் சமதரை களிலும் கிணறுகளின் மேல்மட்டத்தில் ஊற்றுநீர் வெளிப்படுகிறது. எப்போதேனும் நீர்த்தளம் தரைப் பரப்பைத் தொட்டாலோ, தரைமட்டம் நீர்த்தளம் ஊற்றுநீர் உட்கூறுகளின் உருவாக்கம் 837 வரை சரிந்திருந்தாலோ பீச்சூற்றுக்கள் (springs) உண்டாகின்றன. நிலத்தினுள் மணற்பரப்பு போன்ற தளங்களின் வழி உள் நுழைந்த நீர் சில தளங்களில் சிறிதும் தங்காது அங்குள்ள கனிமப் பாறைகளில் மட்டுமே சிறிதளவு ஒட்டிக்கொள்ள நீர் முழுதும் கீழ்நோக்கிச் சென்றுவிடும். இத்தகைய மேல்நிலைத் தளங்களை நீர்தங்காத் தளங்கள் என்பர். தேங்கியுள்ள நீர்த் தளங்களின் மேல் மழை நீர் நுழைந்து நீர்மட்ட அளவினை உயர்த்தும். கோடைக்காலத்தில் இந்த நீர்மட்ட அளவு முன்னிலைக்கோ அதைவிடச் சிறிது உயர்ந்த நிலைக்கோ போகும். இவ்வாறு பருவகாலத் தின் அடிப்படையில் ஊற்றுநீரின் மட்டம் உயர்ந்து தாழும் தளநிலைகளை இடைநிலை நீர்தங்கு தளம் என்பர். பலவகைப் பாறைப் படிவ இடுக்குகளின் வழி யாகக் கீழ்நோக்கிச் சென்ற நீர் தக்க இடங்களில் மிகவும் அடியில் நின்று பரவித் தங்கும் இறுதிநிலைத் தளங்களை நிலைத்த நீர்த்தளம் என்பர். ஏறத்தாழ இதன் கீழ்மட்டம் மூவாயிரம் அடி ஆழம் வரை இருப்பதுண்டு. மேலும் கீழ்மட்டத்தில் கிடைக்கும் நீர் பேரளவான பாறை உருவாக்கத்தின்போது வெளிப்படும் வளநீர் வகையைச் சாரும். நிலைத்த நீர்த்தளம் தரைப்பரப்பைத் தொட்டுத் தாண்டும்போது அங்குச் சதுப்பு நிலங்களும், பீச் சூற்றுகளும் நிலையாக அமைகின்றன. இடைநிலை நீர் தங்கு தளம் தரையையோ. குன்றுச் சரிவு களையோ, ஆற்றுப் படுகைகளையோ தொட்டுத் தாண்டும்போது பருவகாலச் சுனைகள் தோன்று கின்றன. இந்நீர்த்தளம் தரைமட்ட அளவிற்குச் 7 ++++++ 7 2 5 6 3 படம் 1. I. நீர் தங்காத் தளங்கள் 2. இடைநிலை நீர் தங்கு தளங்கள் 4. நிலைத்த நீர்த்தளம் 4. ஆறுகள் 5. குழாய்க் கிணறுகள் 6.பருவநீர்க் குழாய்க்கிணறு 7. வெள்ளத்தில் ஆற்றுப்படுகை வற்றாத