பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/862

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 ஊனுண்ணி

842 ஊனுண்ணி யுடன் தொடர்புடையன. சுற்றுப்புறங்களிலிருந்து இவற்றை எளிதில் இனங்கண்டு கொள்ள முடியாத வாறு சுற்றுப்புறங்களைச் சார்ந்த உடல் நிறத்தைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவைத் தவிர உல கெங்கும் இவை பரவியிருப்பினும் பழைய உலக வெப்பக்காடுகளே இவற்றின் தலையாய வாழிடம் எனக் கருதப்படுகிறது. ஃபெலிஸ் வியோ (சிங்கம்). இது இரவில் இயங் கும் காட்டு விலங்குகளில் சிறந்ததாகும். ஆண் சிங்கத்தில் பிடரி மயிர் இருக்கும். மேற்கு ஆசியக் காடுகளிலும், இந்தியாவில் கிரி காடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் இவ்வினம் வாழ்கிறது. மரம் ஏற முடியாத இது, தன்னைத் துன்புறுத்தும்போது மட் டும் தாக்கும் இயல்புடையது. ஃபெலிஸ் டைகிரிஸ். ஆசியக் காடுகளின் வடக்கே சைபீரியா வரை பரவியுள்ள இந்தப்புலி வகை மூன்று மீட்டர் வரை நீளமாக வளரும். அழகான உடல் வரிகள் இதன் தனிப்பண்புகளில் ஒன்றாகும். நன் றாக வேட்டையாடும் இது, மரமேறவும் நீரில் நீந்த வும் வாயில் இரையைக் கவ்விக் கொண்டு விரைந்து ஓடவும் வல்லது. ஃபெலிஸ் பார்டஸ். சிறுத்தைப்புலி, சிங்கம் போன்று ஆசிய ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்கிறது. ஃபெலிஸ் அன்சியா. வெண் சிறுத்தை இரண்டு மீட்டர் வரை நீளமாக வளரும் அழகிய காட்டு விலங்கு ஆகும். இது மத்திய ஆசியக் காடுகளில் காணப்படுகிறது. ஃபெலிஸ் வைவொரினா. மீன்பிடிக்கும் பூனை இந்தியாவில் சில இடங்களிலும் சீனாவிலும் காணப் படுகிறது. ஒரு மீட்டர் நீளம் வளரும் இதன் உட லில் சாம்பல் நிறம் கலந்த கரும்புள்ளிகள் காணப் படும். மீன்களையும் நத்தைகளையும் இது பிடித்துத் தின்னும். ஃபெலிஸ்லின்க்ஸ், ஆசிய, ஐரோப்பிய அமெரிக்க வெப்பப்பகுதிகளில் காணப்படும் இதன் வாயில் இரண்டு முன்கடைவாய்ப் பற்களே உள்ளன. (பூனை வகைகளில் மூன்று கடை வாய்ப் பற்களே உள்ளன). நீண்ட கால்களையும் குட்டையான திரள் முடி வாலையும், கூம்புக் காதுகளையும் கொண்ட இது நன்கு வேட்டையாடும் திறன் வாய்ந்ததாகும். 119 புலி