பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்டர்‌ஃபெரான்‌ 67

இன்டர்ஃபெரான் 67 மேலும் பல வாரங்கள் தொடரலாம். நரம்புத் தளர்ச்சியுடன் கூடிய பசியின்மை உள்ள நோயாளி களுக்கு இம்மருத்துவத்தைப் பின்பற்றக்கூடாது. மா. பிரடெரிக் ஜோசப் அளவு மிகும். புது வளரிகளில் ஸ்டிரெப்டோசோ டோசின் என்ற மருந்து நன்மை தருவதாக அறியப் பட்டுள்ளது. ஆ.வாசுகிநாதன் இன்சுலின் மிகைப்பு கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு கணைய நோய்களின்போது அதிகரிக்கிறது. கணைய அடி னோமா, ஐலட்செல் உள்ள மைக்ரோ அடினமட்டோ சிஸ், ஐலட்செல் இல்லாத மைக்ரோ அடினமட்டோ சிஸ், கணையப்புற்று, இரண்டாம் நிலையாக ஏற் படும் கணையப்புற்று, மற்ற நாளமில்லாச் சுரப்பி களின் கட்டிகளோடு கணையக் கட்டிகளும் சேர்ந் திருத்தல், கணைய மிகை வளர்ச்சி ஆகிய நிலைகளில் இன்சுலின் மிகுதியாகச் சுரக்கிறது. கணையச் செல்நோய், கணைய மிகை வளர்ச்சி, நெசிடியோபிளாஸ்டோசிஸ் அடினோமா போன்ற நிலைகளில் குழந்தைகளில் இன்சுலின் மிகுதியாகச் சுரக்கும். இன்சுலின் மருத்துவத்தில் அளவுக்குமேல் இன்சுலின் கொடுத்தால் இன்சுலின் மிகைத்தல் ஏற்படுகிறது. அறிகுறிகள். இது இரத்தத்தில் இரத்தத்தில் குளுக்கோஸ் குறைவால் ஏற்படுகிறது. இதனால் வியர்த்தல், நாடித்துடிப்பு மிகுதல், சோர்வு, மயக்கம், அமைதி யின்மை, பசி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். மூளைக்குச் செல்லும் குளுக்கோஸ் அளவு குறைவதாலும் மூளை குறைவாகக் குளுக்கோசைப் பயன்படுத்துவதாலும் தலைவலி, பார்வைத் தெளி லின்மை, சுறுசுறுப்பின்மை, மயக்கம், அமைதியின்மை, நினைவிலும் பேச்சிலும் தடங்கல் ஏற்படுதல், சினம், மனக்குழப்பம், மிகைத் தூக்கம், தசைகள் துடித்தல், தசைகள் வெட்டியிழுத்தல் போன்ற பிற அறிகுறி களும் தோன்றும். உணவருந்துமுன் இரத்தக் குளுக்கோஸ் அளவை யும் பிளாஸ்மா இன்சுலின் அளவையும் கணக்கிடு வதன் மூலம் இன்சுலின் மிகைத்தலைக் கண்டுபிடிக்க லாம். இரத்தக் குளுக்கோஸ் குறைவாக இருப்பதும், உடற்பயிற்சியின்போது அதன் அளவு மேலும் குறைவதும் கணையச் செல் கட்டிகளைக் குறிக்கும். கணையத் தமனி வரைபடம் மூலம் கணையத்தில் இக்கட்டிகளிருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம். இரத்தக் குளுக்கோஸ் குறைநிலையைத் தடுக்க அறுவை செய்யலாம். பென்சோதயடையசீன், டை சாக்சைடு போன்ற மருந்துகளைச் சிறுநீர்ப் பெருக்கி களோடு சேர்த்துக் கொடுக்கும்போது அவை இன் சுவின் அளவைக் குறைப்பதால் இரத்தக் குளுக்கோஸ் அ.க.5-5 அ இன்டர்ஃபெரான் உடல்செல்களில், வைரஸ் நோய்களுக்கு எதிராகச் செயல்படும் திறனைத் தூண்டிவிடும் இயற்கைப் பொருளுக்கு இன்டர்ஃபெரான் (interferron) என்று பெயர். ஐசக், லின்டென்மேன் ஆகியோர், வைரசின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆய்வின் மூலம் இன்டர் ஃபெரானைக் கண்டுபிடித்தனர். வைரசினாலோ பிற பொருள்களினாலோ செல்கள் தாக்கப்படும் போது நீரில் கரையும் தன்மையுடைய இப்பொருள் உற்பத்தியாகிறது. தற்போது இது வைரஸ் எதிர்ப் பியாகப் பயன்படுகிறது. உயிரியல் திறன். இன்டர்ஃபெரான் நோயற்ற செல்களோடு சேரும்போது அச்செல்களை வைரஸ் கள் தாக்குவதில்லை. வைரஸ்கள் உடலினுள் புகு மிடத்திலிருந்து, இரத்தத்தினுள் செல்லவிடாமலும், அவை தாக்கும் உறுப்புகளில் தடுப்பாற்றலை உருவாக்கியும், வைரஸ்களைப் பெருகவிடாமலும், நோயுற்றபின் விரைவில் குணமடையச் செய்யவும் இன்டர்ஃபெரான் தூண்டுகிறது. பெருக்கத் விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இயற்கையாக வரும் வைரஸ் நோய்களை இன்டர் ஃபெரான் தடுக்கிறது என நிறுவியுள்ளன. தனிச் சிறப்புச் செயல்திறன், வைரசுக்கு எதிராகச் செயல் படும் திறன், குறைந்தளவு நச்சுத்தன்மை ஆகிய இம்மூன்று பண்புகளும் இன்டர்ஃபெரானை வைரஸ் எதிர்ப்பியாகப் பயன்படுத்த உதவுகின்றன. DNA, RNA QDuma maug siva afleir தைத் தடுத்தாலும், நோயாளியின் உடல் செல்களில் வைரஸ் பெருக்கத்தைத் தடுப்பதில்லை. லைரஸ் களின் எதிர்ப்பொருள்களைப் போல் இது நேரடி யாக வைரஸைத் திறன் இழக்கச் செய்யாமல் எல்லா வைரஸ்களையும் கட்டுப்படுத்துகிறது. ஆர்போ வைரஸ்களும், சில மிக்சோ வைரஸ்களும் இன்டர் ஃபெரானால் மிகவும் எளிதில் திறனிழக்கின்றன. ஆனால் அடினோ வைரஸ்கள் இன்டர்ஃபெரானை எதிர்ப்பவையாக இருக்கின்றன். ஒரு பொருளை இன்டர்ஃபெரான் எனக் குறிப் பிட அப்பொருள் பின்வரும் பண்புகளைப் பெற்றி ருக்க வேண்டும்; அதன் வைரஸ் எதிர்ப்பு ஆற்றல் உயிருள்ள, உயிரற்ற வைரஸ்களின் எதிர்ப்புத்தன்மை யிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். குறைந்தளவு