பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்டர்‌ஃபெரான்‌ 69

நீர் சில கிளைக்கோ புரதங்களைப் போலவே, இன்டர்ஃ பெரான் இரத்தத்தில் சம அளவுக்குக் கொண்டு வரப்படுகிறது. இரத்த நாளங்களுக்கு வெளியிலும். செல் இடைத்திரவத்திலும் (intertitial fluid), கண் நுரையீரல், மூச்சுக்குழல், மூளை, தண்டுவட ஆகியவற்றிலும் இதன் அளவு குறைகிறது. சிறி தளவு நஞ்சுக் கொடியின் வழியாகவும் சிறிதளவு சிறு நீரிலும் வெளியேறுகிறது. இதிலிருந்து சையலிக் அமிலத்தைப் பிரித்தெடுத்துவிட்டால் கல்லீரலில் இன்டர்ஃபெரான் விரைவில் அழிந்துவிடும். தசை ஊசி மூலம் இதைச் செலுத்திய 5-8 மணி நேரத்தில் இரத்தத்தில் மிகுதியாகக் காணப்படும். ஆனால் சிரை வழிக்கொடுத்தால் 2-4 மணிவரை தான் இரத் தத்திலிருக்கும். வயதான காலத்தில், வாய்வழிக் கொடுக்கும் இன்டர்ஃபெரான் இரத்தத்தில் காணப் படுவதில்வை. எனினும் சிறுவயதில் கொடுக்கும் இன்டர்ஃபெரானில் சுமார் ஒரு விழுக்காடு மட்டும் இரத்தத்தில் காணப்படும். உடலில் செலுத்தப்பட்ட அளவில் ஒரு பகுதி மட்டுமே வெளியேற்றப்படுகிறது. ஆனால் எஞ்சி இருப்பவை நீர்த்து ரெட்டிகுவோ எண்டோதீலியத்திலும் செல்சுவர்களிலும் குவிந்து, மாற்றமடைகின்றன. இது திசுக்களி லிருந்து மறைந்த பிறகும், வைரஸக்கு எதிர்ப்பு ஆற் றல் அளிக்கிறது. ஏனெனில் இது வைரஸை எதிர்க்கும் பல பெப்டைடு தொடர்புகளைத் தூண்டி விடுகிறது. வளர்சிதை வெள்ளையணு இன்டர்ஃபெரானை கொடுக்கும் போது ஏற்படும் பக்க விளைவு, தூய்மையற்ற தயாரிப்பால் ஏற்படுகிறது. காய்ச்சல், குமட்டல் வாந்தி, தசைவலி, குளிர், இரத்த அழுத்தக் குறைவு, தோல் வியாதி மஜ்ஜையைத் தாக்கி அணுக்கள் உற் பத்தியைக் குறைத்தல் போன்ற பக்க விளைவுகளை இன்டர்ஃபெரான் 69 ஏற்படுத்தும். இன்டர்ஃபெரான் கொடுப்பதை நிறுத் தினால் இப்பக்க விளைவுகள் தாமே மறைந்துவிடும். இன்டர்ஃபெரான் மிகக்குறைந்த மூலக்கூறு எடையுடையது. இது துவே தடுப்பாற்றல் புரதங் களுக்கும், இன்டர்ஃபெரானுக்கும் இடையேயுள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடாகும். பொதுவாக 18,000 ஆக இருந்த போதும், பலவகையான செல் வகை கள் செல்கள், செல் விழுங்கிகள் (phagocytes) போன்றவையும் இன்டர்ஃபெரானை உண்டா டாக்கு வதால் இன்டர்ஃபெரான் பல்வேறு மூலக்கூறுகளில் காணப்படும். இன்டர்ஃபெரான் pH=2 இல் (4 செ இல்) பதினெட்டு மணி நேரம் வரை செயல் திறனுடன் இருக்கும். இதன் மூலம் இன்டர் ஃபெரான் தடுப்பாற்றல் புரதத்திலிருந்து மாறுபடு கிறது. செல்லுக்கு வெளியேயுள்ள வைரஸ்களையோ, அவற்றின் உற்பத்தியையோ இன்டர்ஃபெரான் தாக்கு வதில்லை. அவற்றைச் செல்லுக்குள் செல்லவிடாமல் தடுப்பதில்லை. இது செல் சுவரிலிருக்கும் கேங்கிலி யோசைட்ஸ் ஏற்பிகளோடு சேர்ந்து வினைபுரிகிறது. குரோமோசோம் 21 இதனுடன் தொடர்புடையது. வைரஸ் எதிர்ப்பு ஆற்றலுக்குத் தேவையான அளவை விட, மிகுதியாக இதைச் செலுத்தினால், செல்களை எதிர்க்கும் ஆற்றல் ஏற்படும். இதனால் இது புற்று நோய்களிலும் பயன்படுகிறது. எதிர் உறுப்பு ஊக்கி உடலினுள் புகுந்த உடனேயோ அதற்கு முன் பாகவோ இன்டர்ஃபெரானைக் கொடுத்தால், எதிர்ப் பொருள் உற்பத்தி குறைகிறது. செல்லின் மிகு கூருணர்ச்சியையும் இது குறைக்கிறது. அன்றியும், செல்களின் வேலைகளும் தூண்டப்படுகின்றன. செல் விழுங்கலையும் (phagocytosis) கூருணர்ச்சி இன்டர்ஃபெரானுக்கும், தடுப்பாற்றல் புரதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இன்டர்ஃபெரான் ஊக்குவிப்பிகள் - RNA தோற்றம் T செல்கள், செல் விழுங்கிகள் மூலக்கூறு எடை 18,000- 100,000 உற்பத்தி - சில நிமிடங்களில் உற்பத்திக்காலக் கட்டம்-சில நாள்கள் வினைபுரியும் இடம்-ஒம்புயிரி செல் நிலைபெறுவது pH = 2இல் - நிலையாக உள்ளது பயன் - தடுப்பு முறையில் பயன்படுகிறது தடுப்பாற்றல் புரதம் எல்லா வகையான எதிர் உறுப்பு ஊக்கிகள் பிளாஸ்மா செல்கள் 150,000 900,000 வெகு நேரமாகிறது சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஒட்டுண்ணி இல்லை தடுப்பு முறையாகவும், மருத்துவ முறையாகவும் பயன்படுகிறது.