பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இன்டீன்‌

70 இன்டீன் பெற்ற லிம்ஃபோசைட்கள் ஏற்பி செல்களின் மீது காட்டும் நச்சுத்தன்மையையும் மிகுதிப்படுத்துகிறது. எதிர் உறுப்பு ஊக்கி உடலினுள் புகுவதற்குச் சற்று முன்பாக லிம்போசைட்களுக்கு இன்டர்ஃபெரா னைக் கொடுத்தால், அது எதிர்ப்பொருள் உற்பத்தி யைத் தூண்டும் வெள்ளையணுக்கள் முதன் முதலில் வைரஸால் தாக்கப்படும்போது JgE வழியாக வரும் ஜிஸ்டமின் வெளியீட்டை அதிகரிக்கிறது. JgE என்பது தடுப்பாற்றல் புரத E வகையாகும். . பயன்கள். இன்டர்ஃபெரானைக் கண் போன்ற ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொடுக்கும்போது அதன் நச்சுத் தன்மை குறைகிறது. இதை வைரஸ் எதிர்ப்பு மருந்துகளோடு கொடுத்தால் வரும் பயன் பற்றி எதுவும் புலனாகவில்லை. ஆனால் தடுப்பூசி, மருந்துகளுடன் கொடுத்தால் நல்ல பயன் கிட்டும். வைரசால் ஏற்படும் கல்லீரல் அழற்சி ரேபிஸ் ஆர்போ, ஹெர்பிஸ்சிம்பிளக்ஸ், அரினா, இன்ஃபுளுயன்சா மெதுவாக நோயூக்கும் வைரஸ் நோய்களிலும் இன்டர்ஃபெரான் பயனளிக்கிறது. மருந்தால் தாக்கப்பட்ட தடுப்பாற்றல் குறைவுக்கும், முதிர்வுறாத தடுப்பாற்றலுக்கும் இது பயனபடுகிறது. எலும்புப்புற்று நோயில் இதை 3 X 10s அலகு வீதம் வாரத்திற்கு மூன்று முறை, ஒன்றரை ஆண்டுகள் கொடுத்தால் நோயை ஓரளவு கட்டுப் படுத்தலாம். ஹாட்சிகின் லிம்ஃப்போமா, பல வகை மைலோமா நோய்களிலும் இதனைப் பயன் படுத்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. விற்பனை செய்யப்படும் அளவில், இன்னும் தயாரிக்கப்பட வில்லை. இன்டர்ஃபெரானின் முழுமையான உற்பத்தி, செயல்திறன், பக்கவிளைவு போன்றவை பற்றிய ஆராய்ச்சிகள் முடியும் நிலை உள்ளன. இன்ட்ராசெல்லுலர் லிப்பிட் . ஆ. வாசுகிநாதன் உடல் செல்களில் இருக்கும் கொழுப்பு இன்ட்ரா செல்லுலர் லிப்பிட் (intracellular lipid) எனப்படு கிறது. இது கொழுப்பு அமிலங்களுடன் தொடர்பு கொண்டது. இது நீரில் கரையாத்தன்மை கொண் டது; குளோரோஃபாம். ஈதர், பென்சீன போன்ற கரிமக் கரைப்பான்களில் கரையும் தன்மை உடையது. லிப்போ புரதக்கலவை. உடல் நலனுக்குத் தேவை யான ஆற்றலின் பெரும் பகுதி லிப்பிட்களில் இருந்து கிடைப்பதால் அவை இரத்தத்தின் மூலம் உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படும். லிப்பிட் கள் நீரில் கரையாத்தன்மை உடையதால் அவை லிப்போ புரதக் கலவைகளாக மாற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. உட்கொள்ளும் கொழுப்பு, உணவுப் பாதைப் புரதங்களுடன் இணைந்து லிப்போபுரதங்களாக மாறி, பின்னர் இவை குடல் உட்சுவர்களினால் உறிஞ்சப்பட்டுக் கல்லீரலை வந்தடையும். அங்கு கைலோ மைக்ரான்களாக மாற்றப்பட்டு இரத்தத் தின் வழி எடுத்துச் செல்லப்படும். செல் சுவர்களிலும், மைட்டோ கான்ட்ரிக்யாக்களிலும், சைட்டோ பிளாசத்திலும் லிப்போபுரதங்கள் உள்ளன. தூய கொழுப்பு, நீரை விட அடர்த்தி குறை வானது. லிப்போபுரதக் கலவைகளில் லிபிட்களின் அளவு புரதத்தின் அளவை விடக்கூடுதலானால் அதன் அடர்த்தி குறையும். இம்முறையால் கொழுப்பு நீர்மத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நீர்மத்தில் எந்த வகைக் கொழுப்பு எந்த அளவு அடங்கியுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். இம்முறையைக் கையாண்டு தனிப்பட்ட கொழுப்பு அமிலத்தைத் தவிர நான்கு லிப்போ புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை கைலோமைக்ரான்கள், அடர்த்தி கூடிய, அடர்த்தி குறைந்த, மிக அடர்த்தி குறைந்த விப்போ புரதங்கள் என்பனவாம். நீராற்பகுப்பு, கணையத்திலிருந்து சுரக்கும் விப் பேஸ் எனப்படும் நொதி லிப்பிட்களை நீரில் கரை பவையாக மாற்றுகின்றது. லிப்ட்களும்,நோய்களும், நரம்பு மண்டலத்தி லுள்ள செல்களில் சிலவகைக் கொழுப்புகளின் அளவு மாறுபடுவதால் பிறவி அணுக்களில் மாறுபாடு ஏற் பட்டுக் குழந்தைப் பருவத்தில் ஸ்பிங்கோலிப்போசிஸ் என்ற நோய் உண்டாகின்றது. மிகுதியான கொழுப்பு உற்பத்தி ஆவதாலும், கொழுப்பைக் கரைக்கும் நொதிகள் குறைவாகச் சுரப்பதாலும் இந்நோய் உண்டாகின்றது. பயன்கள். உடலின் ஆற்றலுக்கும், கொழுப்பு நீர் மத்தில் கரையும் வைட்டமின்கள் இரத்தத்தில் கலப்ப தற்கும், கொழுப்பு எண்ணெய்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றது. இது உடலின் ஆற்றல் தொகுப்புக் கும், உடம்பு வெப்பத்தைக் காப்பதற்கும் தேவை யானதாகும். எஸ். விசுவநாதன் ன்டீன் இது பென்சோசைக்ளோபென்ட்டாடையின் என்றும் அழைக்கப்படும். இன்டீன் ஒரு நிறமற்ற நீர்மம். இதன் கொதிநிலை 178-182° செ உறை நிலை - 2°செ கரித்தாரில் காணப்படும் ஹைட்ரோகார்பன்களின் இதுவும் ஒன்று. கரித்தாரைக் காய்ச்சி வடிக்கும்