78 எக்ஸ் கதிர் வானியல்
78 எக்ஸ் கதிர் வானியல் எக்ஸ் கதிர் வானியல் சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள மூலங்களில் இருந்து, அதாவது விண்பொருளிலிருந்து வரும் எக்ஸ் கதிர்களை ஆராயும் பகுதி எக்ஸ் கதிர் வானியல் (xray astronomy) எனப்படும். பேரண்டமெங்கும் சிதறிக் கிடக்கும் விண்மீன்களையும், கோள்களையும் ஆராய நீண்ட அலை நீளம் கொண்ட மின்காந்த அலைத் தொகுப்பில் கட்புலனுக்கு உள்ளாகும் ஒளியை மட்டுமே முன்பு பயன்படுத்தி வந்தனர். புதிய அறி வியல் கண்டுபிடிப்புகளின் மூலமாக இன்றைக்குக் கட்புலனுக்கு உள்ளாகும் ஒளியை மட்டுமன்றி, அகச் சிவப்புக் கதிர்கள் நுண் அலைகள் புறஊதாக் கதிர்கள் எக்ஸ் கதிர்கள் போன்ற கட்புலனுக்கு உட்படாத கதிர்களையும், நியூட்ரினோக்களையும் கூட வானியல் ஆய்வு முறைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி பெருகியிருக்கின்றது. தேவைகளைப் பொறுத்து மேற்கொள்ளப்படும் வழிமுறைகளுக்கு ஏற்ப நீண்ட அலைத் தொகுப்பில் காணப்படும் தனிச் சிறப்பியல்பு மிக்க மின் காந்த அலைகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்படுகின்றன. 10 மீட்டர் முதல் 1 மில்லி மீட்டர் வரை அலை நீளமுடைய கதிர்வீச்சு அலைகள் சூரியனின் புற வெளி மண்டலம், முழுச் சூரிய ஒளிமறைப்பு, சூரியக் கரும்புள்ளிகள், வெடித்துச் சிதறிய விண்மீன்களின் எச்சம் போன்றவற்றை ஆராயப் பயன்படுகின்றன. I மில்லி மீட்டர் முதல் 300,000 A வரையுள்ள அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு வளிமண்டலத்தில் 30 கிலோ மீட்டர் உயரத்திற்கு அப்பால் மட்டுமே சிறப்பாக ஆராய முடியும். வளி மண்டலத்தில் உள்ள ஈரமும், கார்பன் டைஆக்சைடும் அகச்சிவப்புக் கதிர்களின் ஒரு சில பகுதிகளை மிகுதியாக கவர்ந்து விடுகின்றன என்பதால் புவியின் பரப்பில் இருந்து கொண்டு ஆராய அகச்சிவப்பு வானவியல் முழுப்பயன் அளிப்பதில்லை. உ விண்மீன் மற்றும் கோள்களின் பரப்பு வெப்ப நிலையை மிக நுட்பமாக அளவிடவும், குளிர்வுறும் விண்மீன், அண்டத்தின் பொது இயக்கம், குவாசர்கள் போன்றவற்றைப் பற்றி அறியவும் அகச்சிவப்பு வானவியல் பயன்படுகின்றது. 7000 - 4000 A வரையுள்ள குறுகிய நெடுக்கைக்குட்பட்ட கட்புல னுக்கு உள்ளாகும் நிற அலைகள் மிக எளிதாகத் தரை மட்டத்தை அடைகின்றன. நிறவொளி வானியல் முழு வளர்ச்சி அடைந்து இன்றைக்குப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சூரியன், ஒளிர்வுறும் விண்மீன்கள். கோள்கள் அண்டத்தின் பொதுவியக்கம் ஆகியவை பற்றி அறிய இது மிகவும் பயன்படுகிறது. 4000 - 3000 A வரை யுள்ள புறஊதாக் கதிர்கள். 300 1 A வரையுள்ள கதிர்கள் போன்றவற்றை ஏவூர்திகள் எக்ஸ் - செயற்கைக் கோள்கள் மூலம் எடுத்துச் செல்லப் படும் கதிர் உணர் ஆயும் கருவிகளைக் கொண்டு ஆராய முடிகின்றது. இளம் விண்மீன்கள், வயதான விண்மீன்கள் சுற்றியுள்ள வெப்பமிக்க அயன மண்ட லம் ஆகியவற்றைப் பற்றி ஆராயப் புற ஊதாக்கதிர் களும், வெடித்துச் சிதறும் விண்மீன்களைப் பற்றி ஆராய எக்ஸ் கதிர்களும் பயன்படுகின்றன. இதற்கு 1962 இல் ஏவூர்திகளை விண்வெளியில் செலுத்தி வானியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட போது ஒரு பெரிய உண்மை தெரியவந்தது. வெறும் எக்ஸ் கதிர்களை மட்டுமே உமிழும் X- கதிர் விண் மீன்கள் உள்ளன இப்பேரண்டத்தில் என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டனர். முதல் எக்ஸ் கதிர் விண்மீன் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒளி விண்மீன்குழுவில் கண்டறியப் பட்டது. ஸ்கோ x-1 (sco x-1) என்று பெயரிட்டுள்ளனர். து தன் ஆற்றலை 99.9% வெறும் எக்ஸ் கதிர்களாகவே உமிழ்கின்றது. எக்ஸ் கதிர்கள் கட்புலனுக்கு உட்படாமையால் ஸ்கோ x-1 சாதாரணமாகப் பார்த்து அறிந்துகொள்ள முடியாது. எக்ஸ் கதிர் வானியலால் மட்டுமே ஸ்கோ x-1 போன்ற விண்மீன்களைப்பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளுக்குப் பிறகு, தற்போது நூற்றுக்கணக் காண எக்ஸ் கதிர் விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. எக்ஸ் கதிர் உமிழ் விண்மீன்கள் பெரும்பாலும் அண்ட மையத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. பால்வழி மண்டலம் எனப்படும் மண்டலத்தில் மட்டும் ஏறத்தாழ 1250 எக்ஸ் கதிர் விண்மீன்களைக் கண்டு பிடித்துள்ளனர். இவற்றுள் நண்டு ஒண்முகில் மண்ட லம் (crab nebula) இரண்டாம் பெரிய எக்ஸ் கதிர் மூலமாக விளங்குகின்றது. ஸ்கோ x-1 ஐ விட நண்டு ஒண்முகில் நூறு மடங்கு செறிவுள்ள எக்ஸ் கதிர்களை உமிழ்கின்றது. ஆனால் ஸ்கோ x-1 ஐவிடக் கூடுதலான தொலைவில், நண்டு ஒண்முகில் படலம் அமைந்திருப்பதால், அதனால் உமிழப்படும் எக்ஸ் கதிரின் செறிவு ஸ்கோ x-1 ஐவிட எட்டு மடங்கு குறைவு போலத் தோன்றுகின்றது. மண்டலம் பேரண்டத்தில் உள்ள அனைத்து விண்பொருள் களும் எக்ஸ் வெப்ப கதிர்களை உமிழ்வதில்லை. மிக்க பிளாஸ்மா, சிதைவுறு விண்மீன், நியூட்ரான் விண்மீன், கருந்துளை விண்மீன் போன்றவை எக்ஸ் கதிர்களை உ. மிழ்கின்றன என்பது தற்போது உறுதி யாக்கப்பட்டுள்ளது. வெப்பமிக்க பிளாஸ்மா நிலையில் உள்ள அயனி கள் எக்ஸ் கதிர்களை உமிழலாம். பிளாஸ்மா என்பது நேர்மின் அயனிகளாகவும், எலெக்ட்ரான்களாகவும் பகுக்கப்பட்ட அணுக்களின் தொகுப்பாகும். பொரு ளின் நான்காம் நிலை எனப்படும் பிளாஸ்மா உயர்