எங்ளர், அடால்ஃப் 81
எங்ளர், அடால்ஃப் 8/ 1970 ஆம் ஆண்டு இறுதியில் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையிலிருந்து இத்தாலிய ஏவுகணையிலிருந்து உஹுரு என்ற அமெரிக்கச் செயற்கோளை விண்ணில் செலுத்தினர். அதன் மூலம் சென்டாரஸ் X-3, GX3 +1, GX5-1, ஹெர்குலஸ் X-1 போன்ற முப்பது எக்ஸ் கதிர் தோற்றுவாய்களைக் கண்டுபிடித் தனர். தனித்தன்மை எக்ஸ் கதிர் விண்மீன்களுக்குத் அளிப்பவை அவற்றின் அடர்த்திமிகு மின்னொளிர் வும், அடிக்கடி ஒளிர்வு மாறும் தன்மையின் விரை வும் ஆற்றலும் ஆகும். எடுத்துக்காட்டாக, சைக்னஸ் எனப்படும் விண்மீன் குழுவில் சிக்னஸ் X-1 என்ற எக்ஸ் கதிர் விண்மீனின் ஒளிர்வு கண் இமைக் கும் நொடியில் மாறுகின்றது. மேலும் காட்சி வண் ணத்திறம் மிக்கவை எக்ஸ் கதிர் நோவே என்னும் விண்மீன் கூட்டமாகும். இவை திடீரென்று கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் தோன்றிச் சில மாதங்கள் வரை ஒளியை அதிகரித்துக் கொண்டு இருந்து, பிறகு விரை வில் மறைந்து விடுபவை. ஆனால் பெரும்பான்மை யான எக்ஸ் கதிர் விண்மீன்கள் சில நொடிகளே விண்ணில் இருந்து பின் மறைந்து விடுகின்றன. மாறாக, சாதாரண விண்மீன்கள் 'மினுக், மினுக்' என்ற தம் இயல்பான ஒளியுடன் விண்ணில் ஒளி விட்டுக் கொண்டேயிருக்கும். சாதாரண விண்மீன்களின் ஒளியின் செறிவைவிட எக்ஸ் கதிர்களின் செறிவு பல்லாயிரம் மடங்கு மிகுதியாதலால் எக்ஸ் கதிர்களை உருவாக்கப் பல கோடிக் கூறு வெப்பம் தேவை. எக்ஸ் கதிர் ஒளி மிகக் குறுகிய கால அளவுத் தன்மையினால் மிகச் சிறிய, நெருக்கமாக இணைக்கப்பட்ட பொருள் களினின்று வீச வேண்டும். இத்தகைய பொருள்கள் மூன்றுவகைப்படும்: அவை வெள்ளைத் தாழ் ஒளிர் விண்மீன்கள், நியூட்ரான் விண்மீன்கள், கருந்துளைகள் ஆகும். ஒரு பொருளின் சிறு துகள் நியூட்ரான் விண்மீன் மீது விழும்போது அந்தத் துகள் சாதாரண ஒளியின் வேகத்தில் மூன்றிலொரு பங்கைப் பெறு கின்றது. அதாவது அந்தத் துகளின் பொருண்மை ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு அப்பொருள் விழும் நிலையில் இயங்காற்றலாக மாறி, இறுதியில் அந்தத் துகள் விண்மீனின் பரப்பின்மீது படும்போது, கடும் வெப்பமாக மாறி அழிந்து விடுகின்றது. ஓராண்டில் நியூட்ரான் விண்மீன் மீது விழும், கோடியில் ஒரு பங்குத் துகள் அந்த எக்ஸ் கதிர் விண்மீனை எக்ஸ் கதிர் வெப்பத்திற்குச் சூடேற்றி விடுகிறது. அப்போது இந்த நியூட்ரான் விண்மீன் எக்ஸ் கதிர் விண்மீனா கிறது. கருந்துளைக்கு அருகேயுள்ள வளிமம் சற்றுத் தொலைவேயுள்ள வளிமத்தைவிட விரைவாகக் கருந்துளையை வட்டமாகச் சுற்றுகிறது. உட்புறமும் வெளிப்புறமும் சேர்ந்து உள்ள வளிமம் அனைத்தும் ஒரு தகடுபோல் அமையும். இந்த வளிமத் தகடு தன் அ.க.6-6 மையத்திற்கு அப்பால் மெதுவாகச் சுற்றுகிறது. இந்த வளிமத் தகட்டின் பகுதிகளுக்கிடையேயுள்ள உராய்வு வெளிப்புற வளிமத்தை விரைவுபடுத்தவும் உட்புற வளிமத்தை நிலைப்படுத்தவும் முயல்கிறது. அதனால் வளிமம் உட்புறமாக மையத்தில் இருக்கும் கருந்துளையை நோக்கித் தள்ளப்படுகிறது. வளிமத் தகட்டில் ஏற்படும் உராய்வு வெளிப் புறப் பகுதிகளுக்குச் சாய்வான இயக்க உந்து விசை யைக் கொடுக்கிறது. அதனால் வளிமத் தகட்டிலுள்ள பொருள், மையத்தை நோக்கிச் சுருள் வடிவத்தில் மெதுவாகப் படிப்படியாக இறங்கிக்கொண்டே செல் கிறது. உராய்வினால் ஏற்படும் வெப்பம் உள்நோக்கி விழும் பொருளின் ஈர்ப்புச் சக்தியினின்று உற்பத்தி யாகி வெளியே வீசப்படுகிறது. உட்புறமாகவுள்ள வளிமம் கருந்துளைக்கு அருகில் இருப்பதால்துளையில் விழும் ஒவ்வொரு கிலோகிராம் வளிமமும் மிகுதி யான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதனால் வெளியாக, வளிமத் பல கோடிக் கூறு வெப்பம் தகட்டிற்கு அடர்த்தி மிகு மின்னொளிர்வு உண்டா கிறது. இத்தகடு எக்ஸ் கதிர் விண்மீனாக மாறுகிறது. ஏ. எஸ். குமாரசாமி எங்ளர், அடால்ஃப் இவர் புகழ்பெற்ற தாவரவியல் அறிஞர். ஹீன்ரிச் கஸ்டாவ் அடால்ஃப் எங்ளர் ஜெர்மானிய நாட்டில்