பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்ச உறுப்பு 83

ஒரு வித்திலைத்தாவரங்கள், இரு வித்திலைத் தாவரங்களைவிடப் படிமலர்ச்சியில் கீழ் நிலை யானவை; ஆர்க்கிடுகளைவிடப் புற்கள் படிமலர்ச்சி யில் மேல்நிலையானவை. மேற்கூறிய ஒருசில கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் எங்ளர் பிராட்ல் வகைப்பாடு மிகச் சிறந்த மரபுவழி வகைப்பாட்டியல் தொகுப்பு என்று ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் உள்ள மிகப் பெரும்பான்மையான அறிஞர்களால் பாராட்டப் பெற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்குக் காரணம் எங்ளரின் பரவலான நுண்ணிய ஆராய்ச்சித் திறனா கும். இவ்வகைப்பாட்டியல் தொகுப்பு, பாசிகள் (algae) முதற்கொண்டு பூக்கும் தாவரங்கள் வரை அனைத்து வகைத் தாவரங்களுக்கும் படங்களுடன் கூடிய விளக்கங்கள், அவற்றைக் கண்டுபிடிக்கும் வழிகள் ஆகியவற்றுடன் அமைந்திருந்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பேரினங்களுக்குக் (genera) கருவியல் (embryology) அமைப்பியல் (morphology) உள்ளமைப்பியல் (anatomy) புவியியல் பரவல் (geographic distribution) முதலிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.23 பிரிவுகளடங்கிய இவ் வகைப்பாட்டியல் தொகுப்பில் காணப்பட்ட படி மலர்ச்சி மேல்நிலை, கீழ்நிலையானவற்றிற்குக் கூறப் பட்ட அடிப்படைக் கருத்துகளை இவருக்குப்பின் வந்த அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர். எங்ளர் எழுதிய புளியில் தாவரத்தொகுப்பு (vegetation of earth) என்ற தொடர் கட்டுரை 1896-1923 வரை தொடர்ந்து அனைத்துத் தாவரவியலராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. மேலும் 1880 இல் வெளிவந்த தாவரவியல் ஆண்டு நூலின் தொகுப்பு ஆசிரியராக இருந்ததுமல்லாமல் அவருடைய வாழ்நாள் முழுதும் அந்த பணியைச் சிறப்பாகச் செய்து வந்தார், இவரின் வகைப்பாட்டியல் தொகுப்பினை அடிப்படையாகக் கொண்டு எஞ்ஜல்மேன், கில்ஸ் ஆகிய அறிஞர்கள் சிற்சில மாறுதல்களுடன் பல நூல்களை வெளி யிட்டனர். எச்ச உறுப்பு கே.ஆர். பாலசந்திரகணேசன் பெரும்பாலான விலங்கினங்களின் உறுப்புகளில் ஒரு சில இன்று பயனற்ற நிலையில் உள்ளன. படி மலர்ச்சி வரலாற்றின் முற்பகுதியில் இவ்வுறுப்புகள் அந்த விலங்கினங்களுக்குப் பயனுடையனவாக இருந்தன. இன்னும் இவ்வுறுப்புகள் அந்த இனத்தைச் சேர்ந்த வேறு இனங்களில் செயல்திறமுடையன வாகவும் நன்கு வளர்ச்சி பெற்றனவாகவும் உள்ளன படிமலர்ச்சி வரலாற்றின்போது அந்த விலங்கினங் அ.க. 6-6அ . எச்ச உறுப்பு 83 களுக்கு ஏற்பட்ட மாறுபட்ட வாழ்க்கைச் சூழ்நிலை யாலும், அந்த விலங்கினங்கள் அந்தச் சூழலுக்கு ஏற்ற வேறு தகவமைப்புகளைப் பெற்று அவற்றைத் தக்க வைத்துக் கொண்டமையாலும் அவ்வுறுப்புகள் தம் செயலிழந்து கால ஓட்டத்தில் உருக்குலைந்து குறுகி, பயனற்றவையாக எஞ்சி நிற்கின்றன. இந்த உறுப்புகளுக்கே எச்ச உறுப்புகள் (vestigeal organs) என்று பெயர். ஏறத்தாழ 200 உறுப்புகள் இவ்வாறு தோன்றி மறைந்தும், மறையாமலும் உள்ளன. குடல் நூற்றுக்கும் மேற்பட்ட எச்ச உறுப்புகள் மனித உடலில் இருக்கின்றன. குடல் வால், காதுத் தசைகள், மூன்றாம் கண் இமை ஆகியன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. தற்கால மனிதனின் வால் குறுகிச் செயலற்ற எச்ச உறுப்பாக உள்ளது. மேலும் சில வேளைகளில் அதனால் மனிதனுக்கு இடையூறும், உடல்நலக் குறையும் ஏற்பட வாய்ப் புண்டு, முற்கால மனிதன் தாவர உணவை உண்டு வாழ்ந்தான். இந்தத் தாவர உணவில் உள்ள செல்லு லோஸ் எனப்படும் பொருளைச் செரிக்க வைக்கக் கூடிய நொதி மனிதனின் உடலில் சுரப்பதில்லை. எனவே, இவ்வுணவு குடல் வாலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாக்டீரியாக்களினால் சுரக்கப்படும் செல்லுலோஸ் எனப்படும் நொதியால் செரிக்கப்பட்டது. ஆனால் நாகரிக வளர்ச்சியில் தீ மூட்டக் கற்றுக் கொண்டதன் பயனாக, மனிதன் காலப்போக்கில் வேக வைத்த ஊன் உணவையும், தாவர உணவையும் உட்கொள்ளத் தொடங்கினான். இவ்வாறு தாவர உணவைச் சமைக்கும்போது செல் லோஸ் தானாகவே சிதைந்து விடுகிறது. எனவே, செல்லுலோஸ் செரிப்பதற்காக இருந்த அந்த உறுப்பு வேலையிழந்து கால ஓட்டத்தில் சிறுத்து இன்று ஒரு பயனற்ற எச்ச உறுப்பாக இருக்கிறது. ஆனால் பாலூட்டி வகையைச் சேர்ந்த தாவர உணவை மட்டும் உண்டு வாழும் முயல் போன்ற விலங்கினங் களில் இன்னும் இந்தக் குடல்வால் பெரி தாகவும், வேலை செய்யும் திறனுடனும் உள்ளது. இத்துணை எச்ச உறுப்புகள் மனிதனின் படிமலர்ச்சி வளர்ச்சியை எடுத்துக்காட்டும் சான்றுகளாக அமைகின் றன. ல்லு இவ்வாறே மனிதனின் இடுப்புக்குக் கீழுள்ள முதுகெலும்பின் கீழ்நுனி (coccyx) குறைவுற்ற வால் பகுதியாகும். மனிதன், வால் உள்ள ஒரு பரம்பரையி லிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்பதற்கு இது சான்றாக அமைகிறது. மனிதனின் முன்னோர்கள் மரங்களில் வாழ்ந்திருக்க வேண்டும். மரங்களில் வாழும் விலங்கினங்களுக்கு வால்தான் உடலைச் சமநிலைப்படுத்தும் உறுப்பாக உள்ளது. மரக் கிளை களில் தாவிச் செல்லும் போது தவறிக் கீழே விழுந்து விடாமல் இருக்க உடலின் எடையைச் சமப்படுத்த உதவும் உறுப்பு வால்தான். ஆனால் படிமலர்ச்சியில் மனித இனத்தின் முன்னோடிகள் மரங்களில்