எச்சரிப்பு அமைப்பு 85
Lan (Z-Z,)" ஐ விரிவுபடுத்தக் கிடைக்கும் கெழு a-1. இச்சார்பின் எச்சம் எனப்படும். தனித்த புள்ளி Z. ஐச் சுற்றியுள்ள, ஒரு வளையத்தின் புறமுள்ள அடைத்த வளைவொன்றில் உள்ள 1 2mic f f(z) dz இன் மதிப்பு சிக்கல் சார்பு f(z) இன் எச்சமெனவும் வரையறுக்கப்படும் அல்லதுZ. இல் லாரன்ட்ஸ் தொடர் fcz) ன்,விரிவில் (Z-Z,)-1 என்ற உறுப்பின் கெழு எனவும் கூறலாம்.ஆனால் லாரன்ட்ஸ் தொடர் விரிவுபடுத்துதல் அவ்வளவு எளிய தன்று: ஆதலால் ஒரு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி, தொடரை விரிவுபடுத்தி எச்சங்களைக் காணமுடியும். எச்சம் (கால்நடை) பங்கஜம் கணேசன். கோழி உண்ட உணவில் செரிக்காத பொருள்கள் சீக்கம் (caecum), ரெக்ட்டம் (rectum) எனப்படும் மலக்குடல் தொடர் குழாய்கள் வழியாக எச்சமாக வெளியேற்றப்படுகின்றன. சீக்கம் என்னும் குழாய் உணவுப்பாதையின் இரு புறங்களிலும் இரட்டையில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு பறவை இனங்களில் சிறப்பாகக் காணப்படுகிறது. மலக்குடல் ஆசனவாய்த் துளையில் முடிவடை கின்றது. இந்தத் துளையில் சிறுநீர் இயக்கம் மற்றும் பிறப்பு உறுப்புகளின் வெளிதுளைகள் வந்து அடை கின்றன. மலக்குடலில் சிறுநீரிலிருந்து நீர் மீண்டும் உறிஞ்சப்பட்டு வெண்மையான திண்மப் பொருளான செரிக்காத பொருள்கள் எச்சமாக வெளியேற்றப் படுகின்றன. இதனால் பறவையினங்களில் ஆசன வாய்த் துளையின் வழியாக மலமும் சிறுநீரும் கலந்து எச்சமாக வெளியேறும். கோழியின் சிறுநீரிலுள்ள யூரிக் அமிலத்தால் தான் கோழியின் எச்சம் வெள்ளை நிறத்துடன் பசைகலந்தாற்போல் உள்ளது. உணவு உட் காண்ட பின் உணவுப் பையிலிருந்து வெளிப்பட்ட இரண்டு மணிநேரத்தில் செரிக்காத பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன. 18 மணி நேரத்தில் உட் கொண்ட உணவு முழுதும் செரிக்கப்பட்டு மிகுதி எச்சமாக வெளியேற்றப்படுகிறது. மற்ற பறவை களிலும் கோழிகளைப் போலவே இயக்கம் நடை பெற்று எச்சம் உண்டாகிறது. ஆனால் வாத்துகள், கோழிகளை விட மிகு செரிக்கும் திறன் பெற்றவை. கோழி வளர்ப்பதில் ஆழ்கூள முறையில் எச்சத்தை ஒரு சேரத் திரட்ட முடிகின்றது. இந்த எச்சம் கறுப்புத் தங்கம் எனப்படுகிறது. எச்சரிப்பு அமைப்பு 85 . எச்சம் ஆழ்கூள முறையில் உமி, மரத்தூள், கடலைத்தோல் இவற்றுடன் சேரும்பொழுது எருவாக மாறுகின்றது; இந்த எருவில் தழைச்சத்து 3%, சாம்பல் சத்து 2%, மணிச்சத்து 2% உள்ளன. எச்சம் மட்கிய நிலையில் ரிபோஃபிளேவின், வைட்டமின் Big போன்ற நுண்ணூட்டச் சத்து களைத் தயார் செய்கிறது. எச்சத்தைக் கொண்டு நோயைக் கண்டறியலாம். வெள்ளை நிறத்திலிருந்து எச்சம் மாறுபட்டுப் பசுமை அல்லது பசுமையும் வெண்மையும் கலந்த நிறமாகவும் துர்நாற்றமாகவும் இருப்பதைக் கொண்டு கோழியின் கொள்ளைக் கழிச்சல் நோயை அறியலாம். இதே போன்று இரத்தக்கழிச்சல் நோயையும் எச்சத்தின் நிறத்தைக் கொண்டு அறியலாம். இந்த நோயில் எச்சம் நீர் நிறைந்தும், இரத்தம் கலந்தும் காணப்படும்; உள் ஒட்டுண்ணிப் புழுக்கள் இருந்தால் இந்த எச்சம் மாறுதலைக் காட்டுகின்றது. நுரையோடு கூடிய கழிச்சல் இதன் அறிகுறியாகும். கரிம எரு வை உற்பத்தி செய்யும் ஒரு ஆழ்கூள முறை தொழிலகமாக பயன்படுகிறது. எச்சம், ஆழ்குப்பைக் கிருமிகளால் சிதைக்கப்பட்டு ஈரப்பசை, துர்நாற்றம் குறைந்த நிலங்களுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது. ரோஜா, மல்லிகை ஆகியவை மலர்ந்து மணமூட்ட எச்சமே எருவாகப் பயன்படுகிறது. 50 கோழிகளின் எச்சம் ஆழ்கூள முறையில் கடலைத்தோல், உமி, மரத்தூள் இவற்றுடன் சேர்ந்து ஓராண்டு முடிவில் ஒரு எருவைத் தருகின்றது. - எஸ். ராம்பிரசாத் எச்சரிப்பு அமைப்பு 40 அடிக்கடி மாறுபட்ட நிலைக்கும், மாறுபட்ட இணைப்புகளுக்கும் உள்ளாகும் உயர் மின் அழுத் தத் துணைமின் நிலையங்களில் எச்சரிப்பு அமைப்பு கள் (alarm systems) மிகுதியாகப் பயன்படுகின்றன. கட்டுப்பாட்டு அறையில் உள்ள எச்சரிப்பு அமைப்பு கள். பணியில் இருக்கும் அலுவலர்க்கு மின் கருவி கள், மின்சுற்றுகள் இவற்றில் ஏற்படும் மாறு தல்கள், தற்போதைய நிலை ஆகியவற்றைத் தெரி விக்க உதவுகின்றன, எச்சரிப்பு அமைப்புகள் ஒளி, ஒலி வடிவங்களில் உள்ளன. தற்காலத்தில் தொடர் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து, நிகழ்ச்சிக்கான காரணத்தையும், கேடு தரும் விளைவுகளைத் தடுப்ப தற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையையும் சுட்டிக்காட்ட மைக்ரோபுராசசர் (microprocesser) அடிப்படையாகக் கொண்ட எச்சரிப்பு கள் பெருமளவில் பயன்படுகின்றன. அமைப்பு