பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 எச்சரிப்பு வண்ணம்‌

1 88 எச்சரிப்பு வண்ணம் நிறங்களின் மூலம் தாங்கள் இருக்கும் இடத்தை அனைவரும் எளிதாகக் கண்டு கொள்ளும்படி வெளிப் படுத்துகின்றன. இவ்வெச்சரிப்பு நிறங்கள் பொதுவாகப் பூச்சி இனங்களில்தான் மிகுதியாகக் காணப்படுகின்றன. எச்சரிக்கை நிறத்தைப் பற்றிய கோட்பாட்டை முதன் முதலாக வாலஸ் என்பார் வெளியிட்டார். எந்த அளவுக்கு எச்சரிக்கை நிறம் மிகுதியாகவும், பளப்பளப்பாகவும் உள்ளதோ அந்த அளவுக்கு அவ் வுயிரிகளில் சுவையற்ற தன்மையும் தீங்கும் உண்டு. . உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வரும் நச்சுச்சிலந்திகள் மிகவும் பளப்பளப்பான நிறம் கொண்டவை என்றும் மஞ்சள், நீலம் கறுப்பு, வெண்மை ஆகிய நிறம் கொண்ட தவளைகள் நச்சுப் பொருளைத் தம் தோலின் மூலம் சுரக்கின்றன என்றும் கொட்டும் குளவி, தேனீ, தும்பி, சுவை யற்ற வண்ணத்துப்பூச்சி ஆகியவை யாவும் பளிச் சிடும் நிறங்களைக் கொண்டுள்ளன என்றும் இவ் வாறே பறவை இனங்களில் சாட் (chat) டிட் (tit). மீன் கொத்தி ஆகியவை சுறுப்பு, வெள்ளை நிறம் கொண்டு சுவையற்ற தன்மையை உடையன என்றும் பிரிஸ்டோவ் என்ற அறிவியலார் கருத்துத் தெரிவித் துள்ளார். எச்சரிப்பு நிறம் கொண்ட விலங்குகள் அவற் றின் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. சிலவகை விலங்குகளுக்கு இந்நிறப் பாதுகாப்பு இல்லை. மேலும் வை தீங்கற்ற விலங்குகளாக இருப்பதால் கொன்று தின்னும் விலங்குகளுக்கு எளிதில் இரையாகி விடும். ஆகவே பாதுகாப்பற்ற இவ்விலங்குகள் எச்சரிப்பு நிறங்கொண்ட விலங்கு களிடத்தில் நிலையாக அடைக்கலம் அடைந்துள்ளன. கொண்ட சங்கு நண்டு என்ற நண்டு நச்சுத்தன்மை அழகிய நிறமான கடற்பஞ்சு கொட்டும் தன்மை கொண்ட கடற்சாமந்தி அல்லது ஒட்டிக் கொண்டி ருக்கும் நத்தை ஓட்டினுள் அடைக்கலம் புகுந்து பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுகிறது. சில பறவை கள் தங்கள் கூடுகளை, அதிகமாகக் கொட்டும் எறும்பு கள், தேனீக்கள், குளவிகள் கட்டியிருக்கும் களோடு ஒன்றாக அமைத்துக் கட்டுகின்றன. கூடு எச்சரிப்பு நிறத்தைக் காட்டி எதிரிகளை விரட்டி ஓடச் செய்யும் விலங்குகளைப் போன்றே கவர்ச்சி நிறங்காட்டி பிற விலங்குகளைக் கவர்ந்திழுத்துக் கொன்று தின்னும் விலங்குகளும் உண்டு. கறுப்பும் வெள்ளையும் கலந்த ஆர்னித்தோ ஸ்கட்டாய்டஸ் என்ற சிலந்தி, மரஞ்செடி கொடிகளில் அமர்ந்திருக்கும் போது ஒரு பறவையின் எச்சத்தைப் போலவே காணப்படும். பறவையின் எச்சம் என எண்ணிச் சிற் சில பூச்சிகள் இதன் அருகே வரும்போது இச்சிலந்தி அவற்றைப் பிடித்து உண்ணும். தொழுவன் பூச்சி செடிகளில் அமர்ந்திருக்கும்போது ஓர் அழசிய வண்ண மலர்போல் காணப்படும். இதேபோல் தூண்டில் மீனுக்கு வாயருகே நீளமான ஒரு தொடு உணர்ச்சிக் கருவி உண்டு. இது பசுமையான நீர்வாழ் தாவரத் தண்டைப்போல் தோற்றமளிக்கும். இதை அறியாது வரும் நீர்வாழ் விலங்குகளை இது பிடித்து உண்ணும். சில் வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளின் ஓரங்களில் கண்களைப் போன்ற வண்ண அமைப்பும் இருக்கும். எதிரிகள் இவை மிக முக்கியமான சுவை மிகுந்த பகுதி என நினைத்துத் தாக்கத் தொடங்கும். ஆனால் இமைப்பொழுதில் இம்மிகச்சிறிய பகுதியை மட்டும் எதிரிகளுக்குக் கொடுத்து விட்டுத் தப்பித்துக் கொள்ளும். தெக்லாஃபாட்டிரோஸ் எனும் வண்ணத்துப்பூச்சி தன் தலையைப்போன்றே சற்றுப் பெரிதான கவர்ச்சியான நிறத்தோடும் தொடு உணர்ச்சி இழைகளோடும் ஒரு போலித் தலையை உருவாக்கி வைத்துள்ளது. எதிரிகள் இப்போலியான தலைப்பகுதியை உண்மையான தலைப்பகுதி என்று நினைத்துத் தாக்கும். ஆனால் வண்ணத் துப்பூச்சிக்கு எவ்வித அழிவும் ஏற்படுவதில்லை.சில வகையான வண்ணத்துப்பூச்சிகள், தத்துக் கிளிகள், சுவர்க்கோழிகள், பறக்கும் பல்லிகள் ஆகியவை சாதாரண நிலையில் அமர்ந்திருக்கும்போது இவற் றின் மேற்பரப்பு மங்கிய நிறமுடையதாக இருக்கும். எதிரிகள் இவற்றினருகே வந்து தாக்க முயலும் சமயத்தில் திடீரென அவை தம் இறக்கைகளை உயர்த்திப் பறக்கத் தொடங்கும். இவ்வாறு திடீரென இறக்கைகளை மேலுயர்த்தும்போது, இறக்கையின் அடிப்பகுதி பளிச்சிடும் வண்ணத்தையோ பயங்கரத் தோற்றத்தைக் கொடுக்கும் வண்ண அமைப்பையோ வெளிப்படுத்துவதால் எதிரிகள் அதிர்ச்சியடைந்து சென்று விடும். ஸ்ஃபின்ஜிட் எனும் கம்பளிப்புழு தன்னை எரிதி கள் தாக்க வரும்போது திடீரென முன்பகுதியின் அடிபகுதியை உயர்த்திக் காண்பிக்கும். அதில் இரண்டு மிகப் பெரிய கண்களைப்போன்ற தோற்ற முடைய கவர்ச்சியான நிறங்கள் காணப்படும். இது பாம்பு படமெடுப்பதைப் போன்ற தோற்றமுடைய தாக இருப்பதால் எதிரிகள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவிடும். எச்சரிப்பு நிறத்தை ஓரினப் பூச்சி மட்டுமல்லாது. இரண்டு மூன்று இனங்கள் சேர்ந்தும் வெளிப்படுத்துவ துண்டு. இவற்றைக் கூட்டு எச்சரிக்கை வண்ணம் என்பர். இவ்வாறு இரண்டு மூன்று இனங்கள் சேர்ந்து ஒரே விதமான எச்சரிப்பு நிறத்தை வெளிப்படுத்துவ தால் அவ்வினங்கள் எதிரிகளால் மிகுதியான எண்ணிக்கையில் தாக்கப்படாமல் பாதுகாக்கப்படு கின்றன. லைசிட் என்னும் வண்டுகள். ஆரஞ்சும் கறுப்பும் கலந்த நிறமுடையவை. இதேவண்ண அமைப்புத்தான்