பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 எட்டிக்காய்‌

92 எட்டிக்காய் சூலகம் கிளை புல்லி வட்டம் மலர் கனி சூல்பை மகரந்தப்பை அல்லி வட்டம் நீண்டது; ஏறத்தாழ 10-12 மி.மீ. நீளமிருக்கும். சூல்முடி தலைவடிவம். கனி. சதைக்கனி பெர்ரி (berry) ஆகும். ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணம் கொண்டது. 5-6 செ.மீ. குறுக்களவு. மேல்தோல் கெட்டியானது. விதைகள். கனிக்கு 4-6 ஆகக் காணப்படும். அவைவட்டமாக, தட்டையாக, ஓரங்கள் சற்றுத் தடித்து இருக்கும். 2 செ.மீ. விட்டம் கொண்டவை. விதைகள் பளபளப்பாகக் இருப்பதற்குக் காரணம் விதையுறையின் மேல்பகுதியில் காணப்படும், நெருக்க மாக அமைந்த படுக்கை வாட்டுத் தூவிகளே ஆகும். விதை எண்டோஸ்பர்ம் கொண்டது. கருவின் வித் திலைகள் பச்சையாக லை போன்று காணப்படும். விதைகளைச் சூழ்ந்து சதைப்பற்றுப் பகுதி காணப் படுகிறது. வளரிடம். தென்னிந்திய இலையுதிர்காடுகளில் காணப்படும். மலையடிவாரத்திலும், சிற்றூர்களிலும் தன்னிச்சையாக வளர்வதைக் காணலாம். செம் பூரான் மண்ணில் நன்கு வளரும்; சாதாரணமாக டிசம்பர் மாதத்தில் இலைகள் உதிர்ந்தபின் பிப்ரவரி யில் புதுக்குருத்துகள் தோன்றும். மார்ச்-ஏப்ரலில் மலர்கள் தோன்றும். கனிகள் மரங்களிலேயே உதிரா மல் ஆண்டு முழுவதும் காணப்படும். தயாரிக்கும் முறை. புரட்டாசி, ஐப்பசி மாதங் களில் நன்கு முற்றிய பழத்தை அழுகவிட்டு, நீரில் அதன் சதையைக் கழுவி, பின்னர் எட்டிக்