பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டிக்காய்‌ 97

கொட்டையை எடுப்பர். பிறகு கொட்டையை வெயி லில் உலர்த்துவர். தரம் பிரிக்கப்பட்டபின் கார்த்திகை முதல் மாசி வரை விற்பனையாகும். எட்டி அல்கலாய்டும் - உட்கூட்டுப்பொருளும். இனம் மருத்துவம் மற்றும் நச்சியியலில் (toxicology) மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஸ்டிரிக்னாஸ் இனத்தில் பல தீவிர நச்சு அல்கலாய்டுகள் உண்டு. எட்டியில் பொதுவாக ஸ்டிரிக்னைன், புரூசின் ஆகி யவை குறிப்பிடத்தக்கவை. இவற்றைத் தவிர ஓமிசின், ஸ்டிரிக்னோசைன் என்பவையும் காணப் படுகின்றன. எட்டி விதையில் 1.5 3.5% அல்க லாய்டுகள் உண்டு. அவற்றில் பாதி அளவு ஸ்டிரிக் னைன் ஆகும். நகஸ்- வாமிகா என்ற வணிகப் பெயர் ஸ்டிரிக்னைன் அல்கலாய்டைக் குறிக்கும். புரூசின் அல்கலாய்டு நச்சுத்தன்மை குறைவானதால் இதற்குப் பொருளாதார மற்றும் மருத்துவ முக்கியத்துவம் குறைவு. கனியின் சதைப்பற்றுப்பகுதியில் லொகா னின் எனப்படும் குரூகோஸைடு உள்ளது. அல்கலாய்டுகள், லொகானின் எட்டியின் மற்ற பகுதி களான வேர், கட்டை, பட்டை, இலை, கனி சதைப் பற்றுப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கை அளவு வேறுபடலாம். ந்த மருத்துவப் பயன். ஸ்டிரிக்னைன் மிகவும் கசப்பு வாய்ந்த வேதிப் பொருளாகும். 4 இலட்சம் பங்கு நீரில் 1 பங்கு ஸ்டிரிக்னைன் இருந்தாலும் அதற்கே உண்டான கசப்புச்சுவை அந்த நீருக்கு வந்துவிடும். இந்திய மருத்துவத்தில் வலிமை தர காய்ச்சலைக் குறைக்க, தோல் தொடர்பான நோய்க் காயங்களை ஆற்றப் பயன்படுத்துவதுண்டு. மேலும் வாதநோய் களைக் குணப்படுத்தும். இந்தியாவின் சில பகுதிகளில் எட்டிவிதைப் பொடியைப் பாலுணர்வைத் தூண்டப் பயன்படுத்துவதுண்டு. குதிரைகளுக்கு வலிமை தரவும் கொடுப்பதுண்டு; மேலும் இது மூச்சு மண்டலத்தைத் தூண்டக்கூடியதாகும். சில மருத்துவர்கள் இதை வாந்தி ஊக்கியாக வும் வயிற்றுச் சாந்தியாகவும் (anodyne), Gug மருந்தாகவும் சளி வெளியேற்றியாகவும் (expellant) பயன்படுத்துகின்றனர். எட்டிப் பட்டை காய்ச்சலுக் கும், உடல்வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. ஸ்டிரிக் னைன் மூளையை ஊக்கி நரம்பைப் பணி செய்யத் தூண்டும் தன்மைகொண்டது. பாலும், தண்ணீரும் சமமாகக் கலந்த நீர்மத்தில் எட்டிக் கொட்டையைக் கொதிக்கவைப்பதால், விதை மிகவும் மிருதுவாகி விடும். அதிலிருந்து விதைப்பருப்புகளையும் கருவையும் எடுத்து அரைத்து மாவாக்கி உலர்த்திப் பொடியாக்கி விடுவர். எட்டிப்பொடி சாப்பிடுபவர் பால் நெய் அருந்தி வந்தால் பயன் மிகுதியாகும். எட்டிப்பொடி வயிற்று மந்தம், இரத்தப்போக்கு, கழிச்சல், வாதச்சேட்டை, வயிற்றுப்பூச்சி. மனக்கொதிப்பு, மலச்சிக்கல், எட்டிக்காய் 93 வலிப்பு, ஆசன வெளியேற்றம் (prolapse of rectum) கவுட் (gout) நீர் அச்சம் (hydrophobia), ஆண்மைக் குறைவு ஆகிய பல நோய்களுக்கும் பயன்படுகிறது. நீண்டநாள் கொடுத்து வந்தால் நீரிழிவுநோய் குணமாகிறது என்று கூறப்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களில் ஸ்டிரிக்னைன் சல்ஃபேட்டாக விற்கப்படுகின்றது. இதில் 0.5-1% ஸ்டிரிக்னைன் உள்ளது. இதைத் தீனியுடன் கலந்து விலங்குகளை அழிக்கப் பயன் படுத்தலாம். பிற பயன். கனியிலுள்ள சதைப் பற்றுப்பகுதி யிலும் ஸ்டிரிக்னைன் மிகக் குறைந்த அளவில் காணப் படும். இருப்பினும் பறவைகள், கால்நடைகள், குரங்குகள், பிற விலங்குகள் அவற்றை விரும்பி உண்பதுண்டு. இதன் காரணமாக விதைபரவுதல் நடைபெறுகிறது. எட்டி இலையை உட்கொண்ட கறவைப் பசுக்கள் கொடுக்கும் பாலிற்கு எட்டிக்கு உரித்தான சுவை வந்துவிடும். இந்தப் பாலை உட் கொண்டால் மனிதனுக்குச் செரிப்புத் தன்மை, உடல்வலிமை கூடும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் இதற்கு மருத்துவச் சான்று இல்லை. சாரய காய்ச்சுபவர்கள் இக்கொட்டையும் சேர்த்துக் காய்ச்சினால் போதைகூடும் என்று கருதுவதுண்டு. மலைவாழ் மக்கள் மீனைப்பிடிக்க இந்தப் பொடியைப் பயன்படுத்துவதுண்டு. எட்டி மரக்கட்டைகள் கெட்டி யானவை: கறையான் தாக்குதலுக்கு உட்படுவ தில்லை. அவற்றைக் கொண்டு வேளாண்பயிர்ப் பொருள்கள் செய்வர். அழகிய, கடைசல் வேலைக்கு மிகவும் ஏற்றது. யம் தை நச்சுத்தன்மை, எட்டியிலுள்ள ஸ்டிரிக்னைனும் மற்ற அல்கலாய்டுகளும் மனிதனின் முக்கிய நரம்பு மண்டலத்தைத் தாக்க வல்லவை. உட்கொள்வதால் அனிச்சை செயல்கள் தூண்டப்படு கின்றன. மிகுதியான ஸ்டிரிக்னைன் உட்கொண் டால் தசைகளில் துடிப்பு, இழுப்பு முதலியவை ஏற்படும். இதற்குக் காரணம் தசைகளின் செயல்கள் எதிர்மாறாக நடைபெறுவதேயாகும். பாலூட்டிகளில் எட்டி அல்கலாய்டுகள் இதயத்தை நேராகத் தாக்குவதில்லை. மனிதன் எட்டியை உட்கொண்டால் அது உணவுக்குழாயை அடைத்து அங்கிருந்து மற்ற மண்டலங்களை அடையும். சிறு நீர் மூலமாக 10-20% வெளிவருவதாகக் கூறப்படு கிறது. ஈரலில் பெரும்பகுதி காணப்படுகிறது. மனி தனிடம் 0.07 0.15 தானியமணி அளவு ஸ்டிரிக் னைன் இழுப்பைத் தோற்றுவிக்கும். இந்த அளவு 0.03 க்கும் மிகுதியானால் மரணம் நேரிடும். 12- 45 தானியமணி அளவு உயிருக்கு ஆபத்தான அளவு ஆகும். ஸ்டிரிக்னைனை மருந்தாக உட்கொண்ட தாயிடமிருந்து பாலை உட்கொண்ட குழந்தை