எடிங்ட்டன், சர்.ஆர்தர் ஸ்ட்டேன்லி 97
எடிங்ட்டனின் தந்தை, இவருடைய இரண்டாவது வயதிலேயே டைபாய்டு நோயால் மரணமுற்றார். தன் தாயின் உதவியுடன் எடிங்ட்டன் சோமர்செட் என்னுமிடத்தில் உள்ள வெஸ்ட்டன் - சூப்பர்மேர் என்னும் பள்ளியில் தமது பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டு மான்செஸ்ட்டரிலுள்ள ஓவண்ஸ் கல்லூரியிலும், 1902 ஆம் ஆண்டு கேம்பி- ரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியிலும் மேற்படிப் பைத் தொடர்ந்தார். டிரினிட்டி கல்லூரியில் பயின்றபோது கணிதத் தேர்வில் முதன்மையாகத் தெர்ந்தெடுக்கப்படும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவரில் சீனியர் ரேங்கலராக' இவர் தேர்ந் தேடுக்கப்பட்டார். மேலும் ஸ்மித் பரிசு போன்ற பல பரிசுகளையும் பெற்றார். கணிதத் துறையின் அனைத்துப் பரிசுகளையும் இவரே பெற்று முதல் மாணவனாகத் திகழ்ந்தார். எடிங்ட்டன் அறிவுக் கூர்மையை உணர்ந்த கல்லூரி அவருக்கு 1907 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான உதவித் தொகை அளித்து ஆராய்ச்சிப் பாதையில் செலுத்தியது. அவரை மேலும் 1906 - 1913 வரை கிரீன்விச்சில் உள்ள ராயல் வான் ஆய்வுக் கூடத்தின் முதன்மை உதவி யாளராகப் பணியாற்றி வானியல் கருவிகளைக் கையாளும் பட்டறிவைப் பெற்றார். இந்நாள்களில் இவர், மத்தியதரைக் கடலில் உள்ள மால்ட்டா தீவின் நெட்டாங்கை ((longitude)) முதன் முறையாக நிர்ணயித்தார். மேலும் ஒளிமறைப்பின் போது (ec'ipse) ஓர் ஆராய்ச்சிக் குழுவை பிரேசில் நாட்டிற்கு அழைத்துச் சென்று விண்மீன்களின் இயக்கத்தையும் பரவலையும் ஆராய்ச்சி செய்தார். எடிங்ட்டனின் அயரா உழைப்பு, அவரை 1913 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் புலுமியன் வானியல் பேராசிரியராக நியமித்தது. 1914 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தைச் சார்ந்த வான் ஆய்வுக் கூடத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதே ஆண்டில் விண்மீன்களின் இயக்கமும் அண்டத்தின் கட்ட மைப்பும்' என்ற நூலை எழுதினார். இதில் தொலை நோக்கியில் நாம் காணும் காற்று, தூசி. வளிமம் கலந்த ஒண்முகிற்படலங்கள் (nebulae) விண்மீன் கூட்டங்களே என்ற உண்மையைச் சிறப்பாக விளக்கு கிறார். 1916 ஆம் ஆண்டு விண்மீன்களின் கதிர்ப்புச் சமநிலைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட இவர் பெரிய விண்மீன்கள் லேசாகவும் சிறிய விண்மீன் அடர்த்தியாகவும் உள்ளன என்பதைக் கண்டறிந்தார். ஆசிரியராகவும் சொற்பொழிவாளராவும் இருந்துகொண்டே வான் இயற்பியல், சார்புடை மைக்கோட்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி எடிங்ட்டன், சர்.ஆர்தர் ஸ்ட்டேன்லி 97 னார். 1919 ஆம் ஆண்டு வடஆட்பிரிக்காவைச் சேர்ந்த பிரின்சிபி தீவிற்குச் சென்று ஐன்ஸ்ட்டீன் கோட்பாட்டை (நிறை அதிகமாக உள்ள விண் மீன்களின் அருகே அதன் ஈர்ப்புவிசை காரணமாக ஒளி நேர் கோட்டில் செல்லாமல் வளைந்து செல்லும்) ஆய்வு மூலம் நிரூபித்தார். மேலும் முழுச்சூரிய ஒளி மறைப்பின்போது சூரியனின் ஒளி மறைப்புப் பகுதிக்கு சற்றுத் தள்ளி உள்ள நட்சத்திரங்கள் சூரியப் பகுதியின் மையத்திற்குச் சற்று அப்பால் நிலைபெயர்ந்து சென்றுவிடும் என்ற பொதுச்சார்புடைமைக் கோட்பாடு மூலம் கூறப் பட்ட உண்மையையும் ஆய்வு மூலம் நிரூபித்தார். சார்புடைமைக் கோட்பாட்டை ஆங்கிலத்தில் எளிய நடையில் எழுதியவர் எடிங்ட்டனே ஆவார். இவர் எழுதிய ஈர்ப்பு விசைச் சார்புடைமைக் கோட் பாட்டைப் பற்றிய குறிப்பு, விண்வெளி நேரம், ஈர்ப்பு விசை ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன வாகும். இவருடைய கணிதவியல் கணிதவியல் சார்புடைமைக் கோட்பாடு, என்ற நூலை ஐன்ஸ்ட்டீன் பாராட்டி யுள்ளார். விண்மீனின் கொள்கை, ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளத் தேவைப்படும் அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கிய 'விண்மீன்களின் உள் அமைப்பு' என்ற இவரது நூல் இன்றைய ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தேவையான ஒன்றாகும். 1870ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்டு லேன் கண்டுபிடிப்புகளில் தொடங்கி, விண்மீன்களின் உட்பகுதியை ஆராய் வதின் பின்னணி அவசியத்தையும், வரலாற்றுப் களையும் துகொண்டுள்ளது. மேலும் போரின் அணுக் குவாண்ட்டம் கதிரியக்கக் கோட்பாடு ஆகியவற்றைத் திறனாய்வு செய்து சில புதிய விதிகளை உருவாக்கி அதன் அடிப்படையில் வெப்பச் சமநிலையில் கதிரியக்கம் பற்றி ஸ்டீபன் - போல்ட்ஸ்மன் விதியையும், வியன்ஸ் விதியையும் நிறுவியுள்ளார். விண்மீன்களின் நிறைக்கும், அவற்றின் ஒளிர்மைக்கும் (luminocity) உள்ள தொடர்பையும், அதைக் கண்டறிந்த முறையையும் எளிய நடையில் விளக்கியுள்ளார். மேலும் பல புதிய சமன்பாடுகளை நிறுவியும், போர், ஐன்ஸ்ட்டீன் போன்றோர் நிறுவிய சமன்பாடுகளுக்குத் தீர்வு கண்டும், பல புதிய கண்டுபிடிப்புகளையும் இந்நூலில் எழுதியுள்ளார். வளிமண்டலத்தைப் பற்றி ஐன்ஸ்ட்டீன், எடிங்ட்டன் ஆகிய இருவருக்கும் பல கோட்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஐன்ஸ்ட்டீன் பொதுச் சார்புடைமைக் கோட்பாடு, ஈர்ப்பு விசை ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு அண்டத்திற்கு ஒரு மாதிரியை அமைத்தார். வெளி ஐன்ஸ்ட்டீன் என்பதை பொருளை மையமாகக் கொண்டு வரையறுக்கிறார். . ! அ.க. 6-7