பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{rh}98 எடிசன்‌ மின்கலம்‌}}}

98 எடிசன் மின்கலம் பரிமாணங்களை ஆனால், எடிங்ட்டன். நான்கு உடைய வெளியை ஆதாரமாகக் கொண்டு பொருளை வரையறுக்கிறார். ஐன்ஸ்ட்டீன் உ உருவமைத்த அண் டம் நிலையற்றது; நுண்ணிய இடர்ப்பாடுகளுக்கே அது விரிந்து விடும் அல்லது சுருங்கிவிடும் தன்மை வாய்ந்தது என்பது எடிங்ட்ட னின் கூற்றாகும். இவர் 1933ஆம் ஆண்டு எழுதிய 'விரிவடையும் அண் டம்' என்ற நூலில் அண்டம் விரிவடையும் தன்மை வாய்ந்தது; ஆனால் பொருள்கள் ஆக்கவும் அழிக்க எனவே வும் முடியாதன. அண்டம் விரிவடையும் போது ஓடையில் மிதக்கும் தக்கையைப்போல விண் மீன் கூட்டங்கள் நகர்ந்து செல்கின்றன என்பதை விளக்குகிறார். ஆனால் இக்கோட்பாட்டை 1932இல் மில்னே என்பார் ஒண்முகிற் படலங்களுக் கிடையே ஏற்படும் ஈர்ப்பு விசை அண்டம் விரிவடை வதைச் சுருக்கித் தடுத்துவிடும் என்று கூறி மறுத் தார். மேலும் இவருக்குப் பின் வந்த பாண்டி கோல்ட், ஃப்ரெய்ட் ஹாய்லி ஆகியோராலும் இவரது கோட்பாடு மறுக்கப்பட்டது. இவர்கள் ஒண்முகிற் படலங்களில் ஏற்படும் சில இயற்பியல் மாற்றங்களி னால் ஏற்படும் பொருள் ஒண்முகிற்படலங்களுக் கிடையே புதிதாக உண்டாக்கப்படும் பொருள் என்று கூறுகின்றனர். இக்கருத்து இன்றுவரை பிரச்சினைக்குரிய ஒன்றாகவே அமைந்துள்ளது. 1936 ஆம் ஆண்டு குவாண்ட்டம் கோட்பாட்டை கொண்டு எடிங்ட்டன் எழுதிய அடிப்படையாகக் 'புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களின் சார்பு டைமைக் கோட்பாடு' என்ற நூலில் உள்ள கருத்துக் களும் சர்ச்சைக்குரியனவாகவே உள்ளன. சார்புடைமைக்கோட்பாட்டையும் குவாண்ட்டம் கோட்பாட்டையும் நோக்கினால் ஒத்து மாறா எண்களின் மதிப்பைக் கணக்கிட முடியும் என இவர் தர்க்க முறையில் நினைத்தார். குறிப்பாக புரோட் டான்களின் நிறைக்கும், எலெக்ட்ரான்களின் நிறைக் கும்உள்ள விகிதத்தையும், அண்டத்தில் உள்ள அணுக் களின் எண்ணிக்கையையும் கணக்கிட அவர் செய்த முயற்சிகள் முடிவடையவில்லை. இவருக்குப் பின் அண்டத்தின் இயற்பியல் கூறுகளைப் பற்றிய மிகப் பல் உண்மைகளை ஒருங்கிணைத்து இவருடைய கருத்துக்களை சர் எட்மண்ட் டெய்லர் விட்டேகர் வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளார்கள். அறிவியலில் இத்தகு தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஆன்மீகத்தில் ஆர்வமுடையவராயும் இவர் திகழ்ந் தார். முதல் உலகப் போரின்போது அமைதியை நாடும் சமாதான விரும்பியாகத் தம்மை அறிவித்துக் கொண்டார். இவர் எழுதிய தத்துவ நூல்களான 'அறிவியலும் கண்காணா உலகமும்' அறிவியலின் புதிய வழிகள்' 'இயற்பிய அறிவியலின் தத்துவம்' ஆகிய நூல்களில் இவருடைய மதப்பற்றைக் காண லாம். இவர் 1927ஆம் ஆண்டு எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே, இவர் 1928இல் வெளியிட்ட 'இயற்பியல் உலகின் தன்மை' என்ற நூல் ஆகும். இதில் அவர் உலகியல் உண்மைகளை உணர வேண்டுமானால் மனிதன் முதலில் ஆத்ம ஞானம் அடைய வேண்டுமேயன்றி அறிவியலால் முடியாது என்பதை வலியுறுத்துகிறார். எளிய நடையில் உரையாடலைப் போன்றே அமைந் துள்ள இந்நூலில் உள்ள கருத்துக்களைச் சிலர் அறிவியலுக்கு முரண்பட்டது என்று கருதினர். அவை மூட நம்பிக்கைகள் எதிர்த்தாலும் எடிங்ட்டன் அவற்றைப் பின் வருமாறு மறுக்கிறார்: ஈதல், எலக்ட்ரான் முதல் உள்ள எல்லா இயற்பொறி களையும் வைத்து நாம் மனித இயந்திரத்தை உரு வாக்கினாலும், உண்மையை உணர்ந்து ஒழுக்கத்திற் மனிதனை குக் கட்டுப்படுகின்ற அறிவையுடைய என உருவாக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி அவரது கருத்துக்களை மெய்ஞ்ஞானக்கண் கொண்டு நோக்க வேண்டுமென்று கூறுகிறார். முடிவில் அதிக மாக மாறக்கூடியது எதுவோ அதுவே மாறுபடாம் லும் இருக்கும் என்ற உண்மையை உணர்த்துகிறார். 1921-1923 வரை ராயல் வான் ஆய்வுக் கூடத் தின் தலைவராகவும் 1932இல் கணிதவியல் சங்கத் திற்கும், 1938-1944 வரை அனைத்துலக வான் ஆய்வு மையத்திற்கும் தலைவராக இருந்து இவற்றைச் சிறப்பித்தார். பன்னிரண்டு பல்கலைக் கழகங்களில் இருந்து பட்டங்களைப் கெளரவப் பெற்ற இவரை 1930ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, நைட் பட்டமளித்துப் பாராட்டியது. பல மிகத் திறமை வாய்ந்த அறிஞராக விளங்கிய எடிங்ட்டன் விளையாட்டுத் துறையிலும் ஆர்வமுடை யவர். நீச்சல், கோல்ஃப், சைக்கிள் விடுதல் போன்ற வற்றிலும் சிறந்த வீரராகத் திகழ்ந்தார். தத்துவம். விளையாட்டு அறிவியல்; ஆகிய துறைகளிலும் இணையிலாச் சிறப்புடையவராகத் திகழ்ந்த எடிங்ட்டன் அவர்கள் 1944 ஆம் ஆண்டு மறைந்தார். க.இந்திராணி எடிசன் மின்கலம் இதனை நிக்கல் - இரும்பு எரிகார மின்கலம் என்றும் குறிப்பிடலாம். இம்மின்கலத்தில் நிக்கல் ஆக்சைடு நேர்மின் முனையாகவும், நுண்ணிய இரும்புத் துகள்கள் எதிர்மின்முனையாகவும் உள்ளன. பொட் டாசியம் ஹைட்ராக்சைடு கரைசல் மின்னாற்பகு பொருளாக கலத்தினுள் காற்றுப்புகாவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மின் இறக்கம் நிகழும்போது நிக்கல் ஆக்சைடு, நிக்கல் ஹைட்ராக்ஸைடு ஆக மாறுகின்றது. இரும்பு, இரும்பு ஆக்ஸைடாக