பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 எடை

100 எடை ஏற்படுத்துகின்ற தடையே ஆகும். அதாவது இயக்க பொருளின் நிறை மாறுதலைப் பொறுத்த வரை என்பது உராய்வைப் போல என்று கொள்ளலாம். எப்படி உராய்வு இயக்கத்தை எதிர்க்கின்றதோ அது போலப் பொருளின் நிறையும் இயக்க மாறுதலை எதிர்க்கின்றது. பொருளின் நிறை அதிகரிக்க, இயக்க மாறுதலுக்குப் பொருள் ஏற்படுத்துகின்ற தடையும் அதிகமாக இருக்கும். ஐன்ஸ்ட்டீனின் சார்புக் கொள்கைகள் இயக்க வேகம் அதிகரிக்க, ஒரு பொருளின் நிறையும் அதிகரிக்கின்றது என் பதைத் தெரியப்படுத்தியிருக்கின்றன. மிகக் குறைந்த வேகங்களில் பொருள் இயங்கும் போது, அதன் நிறை மாறுதலுக்கு உள்ளாவ வேகத்தைப் பொறுத்து தில்லை என்று கொள்ளலாம். நிறை வேகத்தைப் பொறுத்து மாறுதலுக்கு உள்ளாவதில்லை கொள்ளலாம். நிறை இடத்திற்கு இடம் மாறுபடுவ தில்லை. ஆனால் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு இடத்திற்கு பொருளின் இடம் மாறுபடுவதால் எடையும் இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது. இத னால் நிறை ஒரு ஸ்கேலார் என்பதையும். எடை, புவியால் ஈர்க்கப்படும் விசையைக் குறிப்பிடு வதால் ஒரு வெக்டார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது. நிறை கிராம், கிலோகிராம் போன்ற அலகுகளினால் அளவிடப்படுகின்றது. கிராம் (gram), கிலோ கிராம் (kilo gram weight), மற்றும் டைன், நியூட்டன் போன்ற அலகுகளால் எடை மதிப்பிடப் படுகின்றது. பிற கோள்களில் மனிதனின் எடை ஈர்ப்பு முடுக்கம் பூமியில் 70 கிலோ கோள் துணைக் எடையுள்ள கோள் g மனிதனின் எடை புதன் 3.587 25.55 வெள்ளி 8.895 63.35 பூமி 9.829 70.00 சந்திரன் 1.622 11.55 செவ்வாய் 3.745 26.67 என்று வியாழன் 26.066 185.64 கானிமிடி 1.612 11.46 சனி 11.185 79.69 டைட்டான் 1.406 9.99 யுரேனசு 10.517 74.90 நெப்டியூன் 13.279 94.57 புளூட்டோ 2.221 15.79 ஆனால் நியூட்டனின் ஈர்ப்பியல் விதிகளைக் கொண்டு ஈர்ப்பு முடுக்கத்தை (g) எண நிறுவலாம். GM g= -R2 இதில் M கோளின் நிறையையும். R அதன் சராசரி ஆரத்தையும் குறிப்பிடுகின்றன. G என்பது ஈர்ப்பு மாறிலி ஆகும். இதன் மதிப்பு 6. 6732 ×10-11 நியூட்டன் - மீட்டர்"/கிலோ கிராம்? ஆகும். ஈர்ப்பு முடுக்கத்தின் முடுக்கத்தின் சராசரி மதிப்பு (g - இன் மதிப்பு) ஒரு கோளின் நிறைக்கும், பரிமாணத்திற்கும் ஏற்ப அமைகின்றது என்பதால் ஒரு பொருளின் எடை, அப்பொருள் இருக்கும் கோள் அல்லது விண் உறுப்பைப் பொறுத்து மாறுபடுகின்றது. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் மற்றும் சில துணைக் கோள்களின் ஈர்ப்பு முடுக்கமும், பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒரு சராசரி மனிதன் அக்கோள்களில் பெற்றிருக்கும் எடையும் அட்டவணை - 1 இல் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதனின் நிறையில் மாற்றமில்லை என்றாலும் பிற கோள்களில் அம்மனிதன் வெவ்வேறு எடைகளைப் பெற்றிருப்பான் என்பதை இந்த அட்டவணையிலிருந்து அறிந்து கொள்ள முடி கின்றது. புவியும் தட்டையான கோளமாக இருப்பதால், நடுவரைக் கோட்டில் ஒரு பொருள் குறைவான எடை யையும், வட, தென்முனைப் பகுதிகளில் கூடுதலான எடையையும் பெற்றிருக்கும். நடுவரைக் கோட்டில் புவியின் ஆரம் அதிகமாக இருப்பதால், ஈர்ப்பு முடுக்கம் சற்றுக்குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். ஈர்ப்புப் புலமற்ற விண்மீனிடை வெளியில் ஈர்ப்பு முடுக்கம் இல்லாததால், அவ்விடங்களில் நிறை குறிப்பிட்ட அளவு இருந்தாலும் எடை இருப்ப தில்லை. இந்நிலையையே எடையற்ற நிலை என்று கூறுகின்றார்கள். எனினும் ஈர்ப்புப் புலம் இல்லாத தால் தான் எடையற்ற நிலை ஏற்படுகின்றது என்று கூறிவிட முடியாது. எடையற்ற நிலையை ஈர்ப்புப் புலத்தில் கூடத் தோற்றுவிக்கலாம். ஈர்ப்பு விசையை, அதற்குச் சமமான மற்றொரு எதிர் விசையால் சமன் செய்யும்போது இந்நிலை ஏற்படுகின்றது. ஈர்ப்புப் புலமற்ற பகுதியில் எடையற்ற நிலையை நீக்கவும் செய்யலாம். விசையினால் முடுக்கத்திற்கு உள்ளாகும் போது இந்நிலை விளைகின்றது. தன் இயல்பான எடையைவிடக் கூடுதல் எடையுள்ளதாக, அதாவது மிகை எடை உணர்வு ஏற்படும் படியும் செய்யலாம் ஒரு மனிதன் புவி ஈர்ப்பு முடுக்கத்தைக் காட்டிலும் கூடுதலான முடுக்கத்துடன் இயங்கும்போது அவன் மிகை எடை உணர்வை உணர்கின்றான். ஏவூர்திகளில்