பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடையறி பகுப்பாய்வு 101

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்போது அவர்கள் மிகை எடை உணர்வுக்கு ஆளாகின்றார்கள். பின்னர் செயற்கைக் கோள்களில் அவர்கள் பூமியை வலம் வரும்போது, பூமியின் காரணமாக ஏற்படும் ஈர்ப்பு விசை, மைய விலகு விசையால் சுழியாக்கப் படுவதால், கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அனைவரும் எடையற்ற நிலையில் இருப்பதை உணர் வார்கள். செயற்கைக் கோளை ஒரு தற்சுழற்சி இயக்கத்திற்கு உட்படுத்தி எடையற்ற உணர்வை நீக்கலாம். இதையே செயற்கை ஈர்ப்பு என்று கூறு கின்றார்கள். சில நீண்ட கால எடையற்ற உணர்வால், வேண்டாத உடற்கூறு மாற்றங்கள் நிகழ்வதால், எடையற்ற நிலை விண்வெளிப் பயணத்தில் ஒரு தடங்கலாகக் கருதப்படுகின்றது. விண்வெளி வீரர் களைத் தீவிரமான உடற் பயிற்சிகளுக்கு உள்ளாக்கு வதால், நீண்ட கால எடையற்ற உணர்வால் ஏற் படும் உடற்கூறு மாற்றங்களை ஓரளவு ஏற்கலாம் என்று கண்டு பிடித்திருக்கின்றார்கள். எடையறி பகுப்பாய்வு - மெ. மெய்யப்பன் இது அளவறி பகுப்பியலின் (quantitative analysis ) ஒரு பிரிவாகும். ஒரு பொருளில் உள்ள தேவைப் படும் ஒரு கூறைமட்டும், தகுந்த முறையில், இயல்பு தெரிந்த ஒரு தூய சேர்மமாகவோ, தனிமமாகவோ மாற்றி (வேதி முறையிலோ மின்வேதி முறையிலோ வீழ்படிவாக்கி) எடையிட்டு அப்பொருளின் இயைபை நிர்ணயிக்கும் பகுப்பியல் முறை எடையறி பகுப் பாய்வு (gravimetric estimation) எனப்படும். சிலசெய் முறைகளில் வீழ்படிவாக்கப்பட்ட சேர்மம் அல்லது தனிமம் மூலப் பொருளில் இருந்த கூறைப் பெற்றி ருக்காது; ஆனால் அதனுடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தொடர்புடையதாயிருக்கும். கிடைக்கும் வீழ்படிவின் எடையிலிருந்தும் இயைபிலிருந்தும் தேவைப்படும் கூறின் அளவைக் கணக்கிடலாம். மிகப் பழமையான இம்முறை விரைவான முறை யன்று எனினும் மிகவும் நுட்பமான முடிவுகளை தரவல்லது. எனவே பகுப்பியலாரால் 'பெருமளவில் இம்முறை கையாளப்படுகிறது. எடையறி பகுப் பியல் கீழ்க்காணும் செய்முறைகளை உள்ளடக்கியது. கரைத்தல். அளவிடப்பட வேண்டிய கூறைக் கொண்ட பொருள் தகுந்த கரைப்பானில் கரைக்கப் படுகிறது.நீர் அல்லது நீர்த்த கனிம அமிலங்கள் பெரும் பாலான கனிமப் பொருள்களைக் கரைக்க வல்லவை. சில பொருள்களைக் கரைப்பதற்கு அடர் அமிலங்கள் தேவைப்படுகின்றன. கரையாப் பொருள்கள் எடையறி பகுப்பாய்வு 101 தகுந்த பொருள்களுடன் சேர்த்து உருக்கப் பட்டுப் பின்னர் அமிலங்களில் கரைக்கப்படுகின்றன. வீழ்படிவாக்கல். இடையுறும் பொருள்களை interfering substances) நீக்கியபின் கரைசலுடன் தகுந்த வினைப்பொருள் (வீழ்படிவாக்கி) சேர்க்கப் பட்டுத் தேவைப்படும் கூறு வீழ்படிவாக்கப்படுகிறது. வினையுறும் அயனிகளின் செறிவுகளின் பெருக்குத் தொகை வீழ்படிவாகும் பொருள்களின் கரைதிறன் பெருக்குத் தொகையை விட (solubility product) மிகுந்திருந்தால் மட்டுமே வீழ்படிவாக்கம் நடை பெறும்; வீழ்படிவின் துகள் பரிமாணம் வீழ்படி வாக்க வேகத்தைப் பொறுத்ததாகும். வீழ்படி வாகும் வேகம் அதிகமாயிருப்பின் வீழ்படிவின் துகள் பரிமாணம் மிகவும் குறைவாயிருக்கும். விளையும் வீழ்படிவு எஞ்சியுள்ள மூலக்கரைசலில் கரையும் திறன் அற்றதாயிருக்க வேண்டும். ஒரு வீழ்படிவின் கரைதிறனை அதன் கரைதிறன் பெருக்குத் தொகை யைக் கொண்டு அறியலாம். வீழ்படிவின் கரைதிற னைக் குறைப்பதில் வீழ்படிவாக்கியின் (precipitating agent) அளவும் பங்கு பெறுகிறது. கணக்கிடப்பட்ட அளவை விடச் சற்று அதிகமாக வீழ்படிவாக்கியைச் சேர்ப்பதால் வீழ்படிவின் கரைதிறன் குறைகிறது. வீழ்படிவாக்கி அதிமிகையாகச் சேர்க்கப்படின் அது சில வீழ்படிவுகளின் கரைதிறனை அதிகரித்து வீழ் படிவாக்கத்தை முழுமையற்றதாக்கிவிடுகிறது. கரை சலில் அமிலம் அல்லது காரம் இருப்பினும் வீழ்படி வின் கரைதிறன் அதிகரிக்கிறது. எனவே, தகுந்த பி.எச் (pH) சூழலில் வீழ்படிவாக்கம் நிகழ்த்தப்பட வேண்டும். பெரும்பாலான வீழ்படிவுகளின் கரை திறன் வெப்பநிலை உயர்வால் அதிகரிக்கிறது. இத்தகைய வீழ்படிவுகள் குளிர்ந்த நிலையிலேயே வடித்திறுக்கப்பட வேண்டும். வீழ்படிவுகள் நீரில் அதிகக் கரைதிறனைப் பெற்றிருப்பின் இவை ஆல்க ஹால், அசெட்டோன், அடர் அசெட்டிக் அமிலம் போன்ற பிற கரைப்பான்கள் கலந்த நிலையில் வீழ் படிவாக்கப்படவேண்டும். தேவையான கூறு வீழ்படி வாகும் போது விரும்பத்தகாத மற்ற பொருள்கள் உடன் வீழ்படிவாவது தடுக்கப்பட வேண்டும். அதிக நீர் விளாவிய சூடான மூலக்கரைசலை நன்கு கலக்கிக் கொண்டே நீர் விளாவிய தகுந்த வீழ்படிவாக் கியைத் துளித் துளியாகச் சேர்ப்பதால் உடன் வீழ் படிவாக்கம் தடுக்கப்பட்டுப் படிப்படியாக நிகழ் கிறது. வீழ்படிவாக்கத்தின்போது வீழ்படிவுத் துகள்களின் பரப்பின் மீதோ அல்லது துகள்களுக்குள்ளோ மாசுப் பொருள்கள் தங்குகின்றன. வீழ்படிவுப்பரப்புக்கு மேல் காணப்படும் மாசுப் பொருள்களுக்குக் காரணம் வீழ்படிவின் பரப்புக் கவர்ச்சி (adsorption) அல்லது புற வீழ்படிவாக்கமே (post precipitation) ஆகும். துகள்களுக்குள் மாசுப் பொருள்கள் புகுவதன்