பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 எடையறி பகுப்பாய்வு

102 எடையறி பகுப்பாய்வு அல்லது உடன் காரணம் உட்கவர்தல் (occulsion) வீழ்படிவாதல் (coprecipitation) ஆகும். பரப்புக் கவர்ச்சியால் வீழ்படிவின் பரப்பு மீது கவரப்பட்டிருக்கும் மாசுப்பொருள்கள் நீரால் கழுவப் பட்டு நீக்கப்படுகின்றன. புற வீழ்படிவாக்கம் காரணமாகப் படிந்துள்ள மாசுப்பொருள்களைக் கழுவி நீக்க முடியாது. வீழ்படிவைத் தகுந்த கரைப்பானில் கரைத்து மறு வீழ்படிவாக்கத்திற்கு உட்படுத்துவதால் மட்டுமே இம்மாசுப் பொருள்களை நீக்க முடியும். உட்கவர்தல் அல்லது உடன் வீழ்படிவாக்கம் காரணமாக வீழ்படிவுடன் கலந்துள்ள மாசுப் பொருள்களை நீக்க முடியாது. அவ்வீழ்படிவை வீழ்படிவைத் தூய்மையாக்க மூலக்கரைசலில் ஊற வைத்தல் அல்லது புழுக்குதல் போன்ற முறைகள் கையாளப்படுகின்றன. புழுக்குதல். வீழ்படிவுடன் கூடிய மூலக்கரைசல் நீராவித் தொட்டி அல்லது மின்வெப்பத் தட்டின் (hot plate) மீது வைக்கப்பட்டுக் கரைசலின் கொதி நிலைக்குச் சற்றே குறைந்த வெப்பநிலையில் சூடேற்றப்படுதலே புழுக்குதல் எனப்படுகிறது. இதனால் வீழ்படிவு குறிப்பிடத்தக்க அளவிற்குத் தூய்மையடைகிறது. இச் செயலின்போது வீழ்படிவில் உள்ள கரையத்தக்க மாசுகள் கரைந்து விடுகின்றன. வீழ்படிவின் மீது பரப்புக் கவர்ச்சியால் ஈர்க்கப் பட்டுள்ளமாசுகள் நீங்கி விடுகின்றன. படிக உருவ மற்ற (amorphous) வீழ்படிவுத் துகள்கள் ஒருங்கிணை கின்றன. படிகத் துகள்களின் பரிமாணம் அதிகரித்து எளிதில் வடித்திறுப்பதற்கு ஏற்றவாறு மாறுகின்றன. சிறிது நேரம் சூடேற்றப்பட்ட பின் வீழ்படிவுடன் கூடிய கரைசலை ஆய்வுக்கூட வெப்பநிலைக்குக் குளிர்விக்க அது சிறிது நேரம் முன்னரே தனித்து வைக்கப்படுகிறது. இந்த இடைவேளைக் காலத்தில் வீழ்படிவாகாமல் இருக்கும் ஒரு சில அயனிகளும் வினையில் ஈடுபட்டு வீழ்படிவாக்கத்தை முற்றுப் பெறச் செய்கின்றன. வடித்தல் வீழ்படிவுடன் கூடிய கரைசல் ஒரு தகுந்த வடிக்கும் ஊடகத்தின் வழியே ஊற்றப்பட்டு வடி கட்டப்படுகிறது.ஊடகம் எதுவாயிருப்பினும் வீழ் படிவு முதலில் அதன்மீது ஊற்றப்படுவதில்லை. தெளிவு கூடுமானவரை முதலில் வடிக்கப்படுகிறது, பிறகு வீழ்படிவு நன்கு கழுவப்பட்டுக் கழுவுநீர் வடிக்கப்படுகிறது. இறுதியில் வீழ்படிவு வடிக்கும் ஊடகத்தின் மீது மாற்றப்படுகிறது. வடிக்கும் ஊடகங்களாகக் கீழ்க் குறிப்பிட்டுள்ளவை கின்றன. பயன்படு வடிதாள். எடையறி பகுப்பியலுக்குத் தக்க வடிதாள்கள் தனியே உருவாக்கப்படு வாறான கின்றன. ஹைட்ரோஃபுளூரிக் அமிலம் போன்ற அமிலங்களைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்பட்ட இவ்வடிதாள் எரியும்போது மிகக் குறைந்த அளவு சாம்பலைத்தான் தருகிறது. இத்தாள்களில் உள்ள நுண்துகள்களின் பரிமாணம் வேறுபடுகிறது. பல்வேறு பரிமாணங்களில் நுண்துளைகளைக் கொண்ட தாள் கள் பயன்படுத்தப்படுகின்றன. வீழ்படிவின் தன்மைக் கேற்றவாறு விரைவாகவடிக்கக்கூடிய உரியவடிதாள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயன் படுத்தப்படுகிறது. பசை போன்ற வீழ்படிவிற்குப் பெரிய நுண்துளை கொண்ட தாளும் பயன்படுத்தப்படுகின்றன. வடிதாளின் வழியே வீழ்படிவு வடிக்கப்படும்போது உறிஞ்சு விசை அளிக்ககூடாது. புடக்குகை. பல்வகைப்பட்ட புடக்குகைகள் (crucibies) வடிக்கும் ஊடகங்களாகப் பயன்படு கின்றன.கூச் புடக்குகை என்பது நுன்துளைகள் கொண்ட அடிப்பாகத்தை உடைய பீங்கான் புடக்கு கையாகும். இதில் வடிக்கும் ஊடகமாகக் கல்நார் இழைகள் இடப்பட்டு உறிஞ்சு விசையினால் இவை நன்கு படியுமாறு செய்யப்படுகின்றன. இதன் மேல் நுண்துளைகள் கொண்ட ஒரு தகடு பொருத்தப்படு கி கிறது. கல்நாருக்கு மாற்றாகக் கண்ணாடி ழை களையும் பயன்படுத்தலாம். வடித்தலுக்கு முன்னரும் பின்னரும் இப்புடக்குகை நன்கு உலர்த்தப்பட்டு (மாறாத எடை வரும் வரை) எடையிடப்படுகிறது. உலர்த்தப் பயன்படும் உலையின் வெப்பநிலையிலேயே குறித்த இயல்புடைய சேர்மங்களாக மாறும் வீழ்படிவுகளுக்கு மட்டுமே இப்புடக்குகையைப் பயன்படுத்தலாம். பிளாட்டினத்தால் ஆன புடக்குகை, மன்ரோ புடக்குகை எனப்படுகிறது. நுண் பிளாட்டினம் துகள் களே இதில் வடிக்கும் ஊடகமாகப் பயன்படுபவை. ஆல்கஹாலில் நனைக்கப்பட்ட அம்மோனியம் குளோரோபிளாட்டினேட்டைச் சுட்டெரித்து இந் நுண்துகள்கள் பெறப்படுகின்றன. மிகு நுண் நிலை யிலுள்ள வீழ்படிவையும் வடித்திருக்கும் தன்மையை இது பெற்றுள்ளது, மேலும் இப்புடக்குகையை உயர் வெப்பநிலைக்கும் சூடேற்றலாம். இப்புடக்குகையின் உயர்விலை காரணமாக து பரவலாகப் பயன்படுத் தப் பெறுவதில்லை. முழுதும் அலுமினியம் ஆக்சைடால் ஆன புடக் குகை ஆலண்டம் புடக்குகை எனப்படுகிறது. இப் எல்லாம் புடக்குகையின் சுவர்கள் நுண்துகள்கள் கொண்டவை. எனவே இப்புடக் குகையில் தனியாக வடிக்கும் ஊடகம் தேவையில்லை. இப்புடக் குகை யையும் உயர் வெப்ப நிலைக்குச் சூடேற்றலாம். மெருகூட்டப்பட்ட பீங்கானால் ஆன சுவர் களையும், மெருகேற்றப்படாத பீங்கானை வடிக்கும் ஊடகத்தையும் கொண்டிருக்கும் புடக்குகை, சேலாஸ் புடக்குகை எனப்படுகிறது.