எடையின்மை 105
எடையின்மை 105 தை பொருளின் எடைக்குச் சமமாகிவிடுகின்றது. அந் நிலையில் பொருள் எடையற்றதாக இருக்கும். பொருளை நீர்மத்தினுள் எந்த இடத்தில் வேண்டு மானாலும் நிறுத்தி வைக்க இயலுவதாலும் அதற் காக எந்த வேலையும் செய்யப்படாததாலும் உணரலாம். எனவே, நம் உடம்பின் சராசரி அடர்த்தியை உடைய ஒரு நீர்மத்தினுள் முழுதும் மூழ்கியிருக்கும்போது எடையின்மை உணர்வு ஏற் படும் என்பது தெளிவாகின்றது. இப்படி ஏற்படும் எடையின்மை உணர்வு சுழிபுவிஈர்ப்பு விசையால் ஏற்படுகின்ற உணர்விலிருந்து சில காரணங்களினால் மாறுபட்டிருக்கின்றது. ஒரு மனிதன் நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் பொழுது நீர்ம மட்டத்தின் உயரத் திற்கு ஏற்ப மாறும் நிலை நீர்ம அழுத்தம் செயல்படுவதால் வெளி அழுத்தம் வளி மண்டல அழுத்தத்தில் மூச்சுவிடுதலை ஏற்படுத்திக் கொண் டிருக்கும் நுரையீரலில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாக இருக்கும். ஆனால் வளி மண்டலத்தில் எடையின்மை உணர்வு ஏற்படும்போது அழுத்தம் உள்ளும் புறமும் சமமாக இருக்கின்றது. வருவ வளி மண்டலத்தில் ஒரு கலம் புவியைச் சுற்றி ஒரு வட்டப்பாதையில் சுற்றிவரும் போது புவியின் காரணமாக ஏற்படும் ஈர்ப்பு விசை, மைய விலகு விசையால் சுழியாக்கப்படுவதால், கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அனைவரும் எடையற்ற நிலை யில் இருப்பதை உணர்வார்கள். புவி சூரியனைச் சுற்றி வருவதாலும், நிலா புவியைச் சுற்றி தாலும் பூமியிலும், நிலவிலும் எடையின்மை நிலை ஏற்படும் என்று இதன் பொருட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அவை தங்களின் அதிகமான நிறை காரணமாக எல்லாப் பொருள்களையும் ஓர் இழு விசைக்கு உட்படுமாறு ஒரு பரந்த விசைப் புலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பொது வாக எல்லா வானியல் உறுப்புகளுக்கும் ஈர்ப்பு ஆற்றல் உண்டு. ஈர்ப்பு விசைப்புலத்தின் எடையின்மை உணர்வை ஏற்படுத்தியது போல, ஈர்ப்பு விசைப்புலமற்ற பரந்த விண்வெளியில் அவ்வுணர்வை நீக்கவும் செய்யலாம். ஈர்ப்பு விசைப்புலமற்ற வெளியில் ஒருகலம் ஓய்வாக இருந்தாலும் அல்லது சீரான வேகத்தைப் பெற்றிருந் தாலும் அதிலுள்ள விண்வெளி வீரர்கள் எடையின்மை உணர்வைப் பெறுவார்கள். ஆனால் கலம் ஒரு விசை யால் உந்தப்பட்டு ஒரு முடுக்கத்தைப் பெறுமானால் ஈர்ப்பு விசைப்புலமற்ற அந்தப் பரந்த வெளியிலும் தமக்கு எடையிருப்பதாக உணர்வார்கள். இதற்குக் காரணம் வேக முடுக்கத்திற்கு நாம் கொடுக்கும் எதிர்ப்பேயாகும். எடையற்ற நிலையில் உடற்கூற்றில் சில குறிப் பிடத் தக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்று பல ஆய்வுகள் மெய்ப்பித்திருக்கின்றன. 1940 ஆம் ஆண்டில் ஹென்றி என்பார் குரங்குகளை V-2 விண் விண்வெளிக்கலன்களைக் வெளிக் கூட்டில் வைத்து அனுப்பி, ஒருசில நிமிடங் களுக்கு எடையின்மை நிலையில் இருக்கும்படிச் செய்த போது குறிப்பிட்டுக் கூறும்படியான எந்த உடற்கூறு விளைவுகளும் ஏற்படவில்லை. ஸ்புட்னிக் கொண்டு ஆராய்ந்த ரஷ்யர்களும் எடையின்மை உணர்வைப் பொதுவாகப் பாலூட்டிகள் மிக எளிதாகப் பொறுத்துக் கொள்ளு கின்றன என்று அறிந்தனர். எனினும் நீண்ட காலத் திற்கு மனிதனோ விலங்கோ எடையின்மை நிலைக்கு உட்படும்போது சில எதிர்பாராத உடற்கூறு மாற்றங் கள் ஏற்படலாம் என்று அனைவருமே எதிர்ப்பார்த் தனர். விளைவுகள். நேராக நிற்கும்போது ஈர்ப்பு விசையின் காரணமாக இரத்த அழுத்தத்தால் இரத்தம் உடம்பின் கீழ்ப் பகுதிகளில் மட்டுமே பாய் வதில்லை மூளைக்குங்கூடப் பாய்ந்து செல்கின்றது. இப்படி ஈர்ப்பு விசையை எதிர்த்து இரத்தம் பாய நம் உடம்பில் ஏதோ ஓர் அமைப்பு காரணமாக இருக்க வேண்டும். உண்மையில் காலிலுள்ள தசைகளின் விரிந்து சுருங்கும் தன்மையால், இரத்த நாளங்கள் அமுக்கப்பட்டு, ஈர்ப்பு விசையை எதிர்த்து இரத்த ஓட்டம் ஏற்படுமாறு செய்யப்படுகின்றது. இப்படி ஈர்ப்புக்கு எதிர் அமைப்பு இல்லையெனில் இரத்த அழுத்தம் வீழ்ச்சியுறும். இரத்தம் கீழ்ப்பகுதிகளுக்கு மட்டும் செல்வதால் மூளை சோர்வடையும். படுத்த நிலையில் இருக்கும்போது பெரும் பாலான தமனியும், சிரையும் இதயத்தோடு கிடைமட்டமாக இருக் கின்றன. அப்பொழுது எப்பகுதியிலும் இரத்தத்தால் ஏற் படுத்தப்படும் நீர்மத்தின் அழுத்தம் சுழியாகி விடு கின்றது. அதாவது ஈர்ப்பு விசை இல்லாதபோது மனிதன் நேராக நின்ற நிலையில் இரத்த ஓட்டத்தில் ஏற்படுகின்ற விளைவுகள். ஈர்ப்பு விசைப்புலத்தில் படுத்த நிலையில் உள்ள இரத்த ஓட்டத்திற்குச் சம மாகும் எனலாம். எனவே எடையற்ற நிலையில் என்னென்ன உடற்கூறு விளைவுகள் ஏற்படும் என்று அறிவதற்கு ஒரு மனிதனைப் பல வாரங்கள் படுத்த நிலையில் கிடத்தி வைத்தும் நீர்மத்தினுள் மூழ்கி யிருக்குமாறு செய்தும் ஆராய்கின்றார்கள். எடை யின்மை நிலையில் நீண்ட நேரத்திற்கு ஒருவன் இருப்பானேயானால் சோர்வு, மூச்சிரைப்பு, தசை களின் அழிவு. எலும்புகளில் தளர்ச்சி, இதயத் துடிப்பின் அதிகரிப்பு, இதயத்தின் அளவில் சுருக்கம், இரத்தத்தின் மொத்த பருமனில் குறைவு முதலிய உடற்கூறு மாற்றங்களுக்கு அவன் உட்படுகிறான். மேலும் எடையின்மை நிலையில் கழிவுறும் = சிறு நீரில் அதிகமான கால்சியம், நைட்ரஜன் முதலியன வெளி யேற்றப்படுகின்றன. சிறுநீரில் கால்சியம், கால்சியம் பாஸ்ஃபேட்டாகப் படிந்து, இயல்பான நிலையில் வெளியேறும் கால்சியத்தைப்போல இருமடங்கு வெளி யேறுகின்றது. சிறுநீரின் வழியாக வெளியேறிய