106 எண்
106 GT GÅT நைட்ரஜன் தசைகளால் சேகரிக்கப்பட்ட, தசைகளின் இயக்கத்திற்குத் தேவையான நைட்ரஜனே ஆகும். தசைகள் நைட்ரஜனை இழந்தவுடன் தம் பலத்தைப் பெரிதும் இழந்துவிடுகின்றன. எடையின்மை நிலையில் கால்சியமும், நைட்ரஜனும் உடம்பிலிருந்து வெளி யேறுவதன் காரணம் தெளிவாக்கப்படாமலே இருக் கிறது. எலும்புகளில் ஒரு கட்டுக்கோப்போடு அடங்கி யுள்ள புரோட்டீன்கள் இழக்கப்படுகின்றன. அதனால் எலும்புகள் மிகவும் வலிமையிழக்கின்றன. நீண்ட காலத்திற்கு எடையின்மை நிலையில் இருந்தால் அவை நொறுங்கிவிடவும் கூடும் என ஆராய்ச்சி யாளர்கள் கருதுக கின்றனர். இரத்தத்தின் பருமன் மொத்தத்தில் 5% வரை குறைகின்றது. இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 5-10 துடிப்புகள் வரை அதி கரிக்கின்றது. மேலும் நீண்ட நேரத்திற்கு எடை யற்ற நிலைக்கு உட்பட்டு மீண்ட ஒருவன் திரும்ப வும் எழுந்து நேராக நிற்பானேயானால் கண்பார்வை உணர் ஏறக்குறைய முற்றிலும் மங்கிவிட்டதுபோல வான். சோர்வு மேலிட மயங்கி விழுந்து விடுவதும் உண்டு. எடையின்மை மீண்ட நிலையிலிருந்து பொழுது பழைய இயல்பு நிலையை அடைய எடுத்துக் கொள்ளும் காலம் சற்று அதிகமாகவே இருக் கின்றது. மனித இனம் சூழ்நிலைக்குத் தக்கவாறு விரை வாகத் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மை யைப் பெற்றிருக்கின்றது. எனினும் நீண்டகால அடிப்படையில் குறிப்பிட்ட வரம்பையும் மீறி ஏற் படும் சுற்றுப்புற மாற்றங்களை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விண்கலத்தை முடுக்கத் தோடு ஒரு நேர் கோட்டில் இயக்குவதாலோ. அல்லது ஒரு மைய அச்சு பற்றிச் சுற்றும்படிச் செய்வ தாலோ விண்வெளியில் பயணம் செய்யும் விண் வெளி வீரர்களின் நெடுநாளைய எடையின்மையை நீக்கிவிடலாம். கலம் சுற்றும்போது ஏற்படும் மைய விலக்கு விசை, ஈர்ப்பு விசையே இல்லாததால் சமப் படுத்தப்படுவதில்லை. எடையின்மை நிலையை நீக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கலத்தை ஒரு வித இயக்கத்திற்கு உட்படுத்தினால் அதற்குத் தேவைப்படுகின்ற எரிபொருள் ஒரு பிரச்சினை யாகின்றது. மேலும் தற்சுழற்சியுடைய ஒரு கலத்தி லுள்ள மனிதர்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் போது ஒருவிதமான நலக்குறைவிற்கு உட்படுகின் றார்கள். எனவே நாம் புதிய பயன்தரும் வழியைத் தேடுவது கட்டாயமாகின்றது. எடையின்மை நிலையை ஏற்றுச் சமாளிக்கத்தக்க பயிற்சி அளிப்பதே புதிய வழிமுறையாகும். உண்மையில் விண்வெளி வீரர்கள் ஒரு வகையான உடற்பயிற்சிகளுக்கு பட்டால் அவர்கள் எடையின்மை நிலையை எளிதாகச் சமாளித்து விடுகின்றார்கள் என்று அறியப் பட்டது. அலைவுறும் ஒரு படுக்கையில் படுக்க வைத்தும், மேலும் அதைக் கிடைத்தளத்திலிருந்து உட் மிக 50- 60 டிகிரி கோணம் ஏற்படுமாறு மாறி மாறி அமைத்தும் விண்வெளி வீரர்களை எடையின்மை நிலைக்குத் தகுதிப்படுத்துகின்றார்கள். கைகளிலும், கால் தொடைகளிலும் ஓர் உறையை சுற்றிக்கட்டி அதனுள் காற்றைச் செலுத்தியும், வெளியேற்றியும் எடையின்மை நிலையில் ஏற்படும் இரத்த ஓட்டம், இதயத்துடிப்பு ஆகிய மாற்றங்களை நீக்கி விடுகின் றார்கள். எண் மெ. மெய்யப்பன் கணிதம் என்றாலே எண்களைக் குறிக்கும். எண் களைப் பலவகைப்படுத்திக் கணிதவியலில் அந்தந்த பிரிவுகளுக்கேற்ப அந்தந்த எண்களைப் பயன்படுத்திக் கணித முறைகளில் தீர்வுகள் காண்பது இயல்பாகவே பழக்கத்திலிருந்து வரும் வழக்கமாகும். ஆதிகாலத்தில் ஆள்கள், பொருள்கள் அளவுகள் போன்றவற்றைக் கணக்கெடுப்பதற்கு 1,2,3,4... 8,9 ஆகிய முழு எண்கள் வரையறுக்கப்படாமல், அப்படியே இயல் எண்களே (natural numbers) பயன்படுத்தப்பட்டன. பின்னர் பயன்பாடுகளுக்கேற்ப எண்கள் பாகுபடுத்த பட்டன. இந்தியா, அரேபியா, எகிப்து, கிரேக்கநாடு ரோம் போன்ற நாடுகளில் இது விரைவாக பெற்றது. வளர்ச்சி 8-11 ஆம் நூற்றாண்டு வரை இந்திய, அரேபிய நாடுகளில் வாழ்ந்த கணித அறிஞர்கள் எண்கள், எண்மானம் (numerals), குறியீடு (notation) ஆகிய வற்றைப் பற்றிக் கண்டுபிடித்த உண்மைகள் பதிமூன் றாம் நூற்றாண்டில், அரேபியரால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவின. முழு எண்கள், பின்னங்கள், தசமபின்னங்கள் ஆகியவற்றைக்கொண்டு பயன்படுத்தப்படும் இன்றைய எண் கணிதத்திற்கு ஹிந்து - அரேபிய முறை என்ற பெயர் குறிப்பிடப் பட்டது. மற்ற நாட்டு முறைகளும் வழக்கத்தில் உள்ளன. பூச்சியம் என்ற எண்ணைக் கண்டுபிடித்து அதன் பயன்களை முதன்முதலாகக் கணிதவியலில் பயன் படுத்தியது இந்தியாவாகும். ஹிந்து - அரேபிய முறையில் உள்ள சில முக்கிய ஒப்புமைகளாவன; 1,2,3,9,0 என்ற உறுப்புகளும், 10 ஐ அடியாகக் கொண்டு தசமப் புள்ளியும் உண்டு. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், எண்களின் படிகள் காணுதல், எண்களின்மூலங்கள் கண்டுபிடித்தல் ஆகிய 6 செயலிகள் உள்ளன. மேலும் எண்களின் இட மதிப்புகள் தெளிவாகவும், எளிமையாகவும் அமைக் கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 444 என்ற எண்ணைக் குறிக்கும்போது இடக் கோடியில் உள்ள எண் 4 நூறுகளையும், வலக் கோடியில் உள்ள எண் 4 ஒன்றினையும் இடையில் உள்ள எண் 4 பத்தையும்