130 எண்ணுக்கருவி
130 எண்ணுக்கருவி காணப்படுகின்றன. வட்டத்தசைகள் உணர்நீட்சி குறுக்குத்தசைகள் தலையிலும் அமைந் களிலும். துள்ளன. உடல் உணர் நீட்சிகளின் உட்பகுதிகள், காம்பு, சுவருக்கும், உணவுப்பாதைக்கும் உள்ள இடைவெளி ஆகிய இடங்களில் உடற்குழி இல்லை. இதற்குப் பதிலாக அமீபாய்டு செல்களைக் கொண்ட ஊண் பசையினாலான பாரன்கைமா என்னும் ணைப்புத் திசு காணப்படுகின்றது. இதன் காரணமாக எண்டோ புரோக்ட்டாவைப் போலி உடற்குழியுடைய உயிரி என்பர். எண்டோபுரோக்ட்டாக்கள் கடல்நீரில் உள்ள டயாட்டம்கள், டெஸ்மிடுகள். ஒரு செல் உயிரிகள் ஆசியவற்றை உட்கொள்கின்றன. உணர்நீட்சிகளில் உள்ள குற்றிழைகள் நீரில் உள்ள உணவுப் பொருளைத் தொண்டைக்குழலில் தள்ள. உணவு அங்கிருந்து பின்னர் வாயை அடைகின்ற றது. எண்டோபுரோக்ட்டாவில் மூச்சுவிடுதல் உடற் பரப்பின் வழியாக நடைபெறுகின்றது. தலையில் அமைந்துள்ள இணையான முன்னோடி நெஃப்ரீடி யாக்கள் உடலில் ஏற்படும் யூரிக் அமிலம், குவானின் ஆகிய கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. இரைப்பைக்கும் எண்டோபுரோக்ட்டாவில் வெஸ்டிபியூலிற்கும் இடையே ஒரு நரம்புச் செல்திரள் அமைந்துள்ளது. இதிலிருந்து உணர் நீட்சிகள், கேலிக்ஸ், காம்பு, இனப்பெருக்க உறுப்புகளுக்கு நரம்புகள் செல்கின், றன. ஆண், பெண் எனத் தனித்தனியாகச் சில எண்டோபுரோக்ட்டாக்கள் உள்ளன. இருபால் இனப்பெருக்கச் சுரப்பிகள் ஒரே விலங்கிலும் காணப் படுகின்றன. இரைப்பைக்கும் வெஸ்டிபியூலிற்கும் இடையே எளிய அமைப்புடைய இரண்டு இனப் பெருக்கச் சுரப்பிகளான விந்தகம் அல்லது அண்டகம் காணப்படுகின்றது. ஒவ்வொன்றிலிருந்து வரும் நளாங்களும் இணைந்து ஓர் இனப்பெருக்கத் துளைக்குள் செல்கின்றன. விந்துகள் நீளிழைகளைக் கொண்டுள்ளன. அண்டமும் விந்தும் ணைந்து பை கலவி இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. கருவுறுதல் இனப்பெருக்க நாளத்தில் நடைபெறுகின்றது. இனப்பெருக்கத் துளைக்கும் மலக்கூம்பிற்கும் உள்ள இடைவெளிப்பள்ளம், அடைகாக்கும் எனப்படுகின்றது. கருமுட்டை அடைகாக்கும் அறையில் வளர்ச்சியடைந்து டிரோக்கோஃபோர் இளவுயிரியாக வெளிவருகின்றது. இது சிறிது காலம் நீரில் நீந்தி வாழ்ந்து பின்னர் வளர் உருமாற்றம் அடைந்து பற்றிடத்தைப் பற்றி எண்டோபுரோக்ட்டா ஆகின்றது. எண்டோபுரோக்ட்டா மொட்டுவிடுதல் முறை யில் கலவியிலா இனப்பெருக்கத்தையும் மேற் கொள்கின்றது. சாதகமற்ற சூழ்நிலையில் தலைப் பகுதி மட்டும் உதிர்ந்து விடுகின்றது. ஆனால் காம்பு. தண்டு ஆகிய பகுதிகள் உயிருடன் காணப்படுகின்றன. இவை ஏற்ற சூழ்நிலை வந்த காலத்தில் புதிய தலை களை மீட்பாக்கம் செய்து கொள்கின்றன. எண்டோபுரோக்ட்டாவுக்கும் கோலோதீகாசிய வகைச் சக்கர உயிரி (rotifera)க்கும் இனவுறவுகள் உண்டு. சில எண்டோபுரோக்ட்டாக்கள் பெடிசெல்லினா. கடல் நீரில் கூட்டுயிரியாக வாழும் பெடிசெல்லினா. கிளைகளை உடைய தண்டையும் முள்களைக் கொண்ட நீண்ட காம்பு களையும் கொண்டுள்ளது. செம்பழுப்பு நிறமுடைய இவ்வுயிரியல் உணர் நீட்சிகள் 12-24 வரை உள்ளன. காம்பும் தலையும் ஓர் இடைச்சுவரால் பிரிக்கப் பட்டுள்ளன. லாக்சோசோமா. கடல் நீரில் தனித்து வாழும் இவ்வுயிரியில் உணர்நீட்சிகள் 22-26 வரை காணப் படுகின்றன. எளிதில் ஒட்டிக்கொள்ளும் தட்டைப் பெற்றுள்ள இவ்வுயிரி பற்றாத நிலையில் சும் பளிப்புழுப் போல ஊர்ந்து செல்லும் இயல்புடையது. அர்னட்டெல்லா. நன்னீரில் வாழும் இக் கூட்டுயிரியின் காம்பு, கணுக்களையும் கிளைகளையும் கொண்டுள்ளது. இதற்குப் பொதுவாக அடித்தட்டு உண்டு. காந்தா பாலசுப்பிரமணியன் எண்ணுக்கருவி கதிரியக்கத் தனிமத்தின் கதிர் வீச்சினையும், அதன் பண்புகளையும் வெளிவரும் துகள்களின் அயனி யாக்கும் திறன் மற்றும் ஒளிவேதியியல் வினைகளைக் கொண்டும், கடின ஒளி குவாண்டா மற்றும் மின்னூட்டமுள்ள துகள்கள் காந்தப்புலத்தில் விலக் கப்படும் தன்மை ஆகியவற்றைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் கதிர் வீச்சினையும், அதன் பண்புகளையும் அறிய அமைக் கப்பட்ட கருவியே எண்ணுக்கருவிகள் (counters) ஆகும். இவை ஒரு கதிரியக்கத் தனிமத்தின் கதிர் வீச்சின் அயனியாக்கும் திறனைக் கணக்கிட உதவு கின்றன.கீகர் எண்ணுக்கருவி, சுடர்ப்பொறி எண்ணி ஆகியவை எண்ணுக் கருவியில் முக்கியமானவை. கீகர் எண்ணுக்கருவி. இக்கருவி கதிர்போன்ற மின்காந்த அலைகள், துகள்கள், துகள்கள் போன்ற மின்னூட்டமுள்ள துகள்கள், இவற்றைக் கண்டறிய வும், அவற்றின் செறிவை அளவிடவும் பயன்படு கிறது. 1911 இல் எர்னஸ்ட் ரூதர் போர்ட்,