பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெய்ச்‌ சுரங்கவியல்‌ 137

தால் கிணறு செங்குத்தாகச் செல்கிறதா, விலகிச் செல்கிறதா என்று அறியலாம். ஸ்லெம்போசர் காட்டி. இக்கருவி மின்சாரத்தால் இயக்கப்படுகிறது. பாகைகளாகப் பிரிக்கப்பட்ட கண்ணாடிக்குழித்தட்டு, உருளும் உலோகப் பந்து, திசை காட்டும் காந்த ஊசி, 35 மி.மீ. ஒளிப்படக் கருவி ஆகியவை இக்கருவியில் சில சிறப்பான பகுதி களாகும். குழாய்க்கிணறு தோண்டும்போது காப் பிட்ட மின்கம்பிகளால் இணைத்து உள்ளே இறக்கி இக்கருவியை இயக்கினால் காந்த ஊசி திசையையும், கண்ணாடித்தட்டு விலகல் கோணத்தையும் காட்டும் போது, புகைப்படக் கருவி படமெடுக்கிறது. கிணற் றின் ஆழத்தோடு இப்படங்களை ஒருங்கிணைத்துப் பார்த்தால் திசை விலகல் தெரிய வரும். சூர்வெல்காட்டி. இக்கருவி உலர் மின்கலங்களால் யக்கப்படுகிறது. எனவே மின்னாற்றல் இல்லாத எண்ணெய்ச் சுரங்கவியல் 137 இடங்களுக்கும், அதிக ஆழமான கிணறுகளுக்கும் பயன்படும். இக்கருவியில் திசைவிலகல் கிடைமட்டக் கருவி மூலமும், கொட்பு கோணமானி மூலமும் உணரப்பட்டு ஒளிப்படமாக்கப்படுகிறது. குழாய்க்கிணறு திசை விலகல் காட்டி, பெட் ரோலிய எண்ணெய் எடுக்கும் குழாய்க் கிணறுகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இராம. இராமநாதன் எண்ணெய்ச் சுரங்கவியல் புவிக்கடியில் ஏராளமான கனிமங்கள் கிடைக்கின்றன. தங்கம், வெள்ளி, இரும்பு, மாங்கனீஸ் போன்ற திண்மக் கனிமங்களும், பெட்ரோலியம் போன்ற படம் 1 தார்மணல் திறந்தவெளி எண்ணெய்ச் சுரங்கம்