பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெய்த்‌ தாவரம்‌ 139

பிலிருந்தே சுரங்கங்கள் அமைத்து எண்ணெய்ப் பாறைகள் வெட்டியெடுக்கப்படுகின்றன. இந்தியாவில் எண்ணெய் கிடைக்கும் எல்லா மாநிலங்களிலும் பாய்மமாகவே கிடைக்கின்ற காரணத்தால் பாறை களை வெட்டியெடுக்கும் எண்ணெய்ச் சுரங்கங்கள் ல்லை. எண்ணெய்ப்பாறைகளிலிருந்து மிகுதியான அளவு எண்ணெயை எடுப்பதற்குச் சுரங்கம் அமைத்துப் பாறைகளை வெட்டியெடுத்து அப்பாறைகளிலிருந்து எண்ணெயைப் பிழிந்து எடுப்பதே மிகச் முறையாகும். எண்ணெய்த் தாவரம் சிறந்த இராம. இராமநாதன் தாவரங்களின் பல்வேறு உறுப்புகளிலிருந்தும் பயன் மிக்க எண்ணெய்ப் பொருள்கள் கிடைக்கின்றன. தண்டு, இலை, விதை, வேர் ஆகியவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவதுண்டு. விதைகளிலிருந்து பிழிந்தெடுத்தல் முறையிலும், பிற பகுதிகளிலிருந்து காய்ச்சி வடித்தல் முறையிலும் எண்ணெய் எடுக்கப் படுகின்றது. இந்த எண்ணெய் ஆவியாகும் தைலங்கள், கொழுப்புறை எண்ணெய் என்ற இரு பெரும் பிரிவுகளில் அடங்கும். காண்க, ஆவியாகும் தைலங்கள். கொழுப்பு அற்றது. எனவே ஆவியாகும் தைலங்கள். இவ்வகை எண்ணெய் எளிதில் ஆவியாகக் கூடியது. நறுமணம் நிறைந் தது. வை நறு மணப் பொருள் சோப்பு, முகத்தூள் (face powder) தயாரிப்பில் பயன்படுகின்றன. மேலும் சிலவகை ஐஸ்கிரீம், மிட்டாய் வகைகள், இனிப்புப் பலகாரங் கள், குளிர்பானங்கள் போன்றவற்றிற்கு மணமும் சுவையும் கூட்டுவதற்கு உதவுகின்றன. சிலவகை பற்பசைத் தயாரிப்பில், மருத்துவத்தில் வலிதீர் களிம்புகள், நச்செதிர் மருந்துகள் ஆகியவற்றின் தயாரிப்பில் பெரும்பங்கு கொள்கின்றன. சிலவகை, மேற்பூச்சு வண்ணங்கள் (paints), மெருகெண்ணெய் (varnish) ஆகியவற்றின் தயாரிப்பில் கரைப்பான் களாகவும் உலர்த்திகளாகவும் பயனாகின்றன. பூச்சிக்கொல்லிகள் மணமூட்டிகள் (deodorants) தயாரிப்பிலும் சிலவகை பயன்படுகின்றன. எண்ணெய்ச் சாரங்கள் அவை எடுக்கப்படும் தாவர உறுப்புகளைக் கொண்டு புல் எண்ணெய் கட்டை எண்ணெய் இலை எண்ணெய் எனப் பிரிக்கப் படுகின்றன. இந்தியக் புல் எண்ணெய் காடுகளில் விளையும் பலவகைப் புற்களிலிருந்து மணமிக்க. விலை உயர்ந்த எண்ணெய்ச் எண்ணெய்த் தாவரம் 139 சாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுள் எலுமிச்சைப் புல் எண்ணெய், பாமரோசா எண்ணெய், சிட்ரோனெல்லா எண்ணெய், வெட்டி வேர் எண்ணெய் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. . எலுமிச்சைப்புல் எண்ணெய். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் கேரளா. தமிழ்நாடு, கர்நாட கப் பகுதிகளில் மிகுதியாக விளையும் சிம்போ கோகன் ஃப்ளெக்சுவோசஸ் எனும் புல் வகையில் இருந்து காய்ச்சி வடித்தல் முறையில் எடுக்கப்படு கிறது. இதன் மணம் எலுமிச்சையின் மணத்தை ஒத்திருப்பதால் இது எலுமிச்சைப்புல் எண்ணெய் எனப் டுகிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 1500 மெட்ரிக் டன் எண்ணெய் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இது உற்பத்தியில் 60% ஆகும். மேலும், இந்திய உற்பத்தியில் ஏறத்தாழ 80% வெளிநாடு களுக்கு ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது. செம் மஞ்சள் அல்லது செம்பழுப்பு நிறமும், எலுமிச்சை மணமும் கொண்ட இவ்வெண்ணெய் மருந்துகள், நறுமணப்பொருள்கள் தயாரிப்பில் பெருமளவு பயனா கின் உலக றது. பாமரோசா எண்ணெய். இந்த வணிகப்பெயர் காண்ட எண்ணெய் சிம்போபோகன் மார்ட்டினி எனும் புல்லிலிருந்து காய்ச்சி வடித்தெடுக்கப்படு கின்றது. இவ்வகைப்புல் இமயமலை அடிவாரப் பகுதி, உத்தரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, இராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் ஆந்திர மாநிலக் காடுகளில் மிகுதியாக விளைகின்றது. வெளிர் மஞ்சள் நிறங்கொண்ட எண்ணெய் ஜெரேனியம் எண்ணெயின் மணத்தை ஒத்திருப்பதால், வெளிநாடுகளில் இதற்குப் பெருந்தேவை உள்ளது. மருந்து, நறுமணப் பொருள், சோப், கொசுவத்தித் தயாரிப்பில் இது பயன்படுகின்றது. தன் சிட்ரோனெல்லா எண்ணெய். நார்த்தையின் மணத்தை ஒத்திருக்கும் இந்த எண்ணெய் சிம்போ போகன் நார்தஸ் எனும் தாவரவியல் பெயர் கொண்ட புல்லில் இருந்து காய்ச்சி வடிக்கப் பெறு கின்றது. இதுவும் மருந்து, நறுமணப்பொருள், சோப், கொசுவத்தித் தயாரிப்பில் பயனாகின்றது. வடகிழக்கு அசாம் மலைப்பகுதி, தமிழ்நாட்டின் நீலகிரி, கோடைக்கானல் பகுதிகள், ஆந்திரத்தில் ரம்ப்பா மலைப்பகுதிக் காடுகள் இவற்றில் இயற்கையாகப் பயிராகின்றது. வெட்டிவேர் எண்ணெய். வெட்டிவேரிய சிசனாய் தல் எனும் புல்லின் வேர்க்கற்றையிலிருந்து எண்ணெய் காய்ச்சி எடுக்கப்படுகிறது. இப்புல் வகை இந்தியா படுகைகளில் ஆற்றங்கரை, சேற்றுப் முழுதும் செழித்து வளர்கின்றது. இது தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் பயிரிடப்படுகிறது. காய்ச்சி வடித் தெடுக்கப்படும் பிசுபிசுப்பான வெண்பழுப்பு நிறமும்,