பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெய்ப்‌ பனை 141

எண்ணெய்ப்பனை 141 பங்கேற்கின்றது. தென்னைமரம் போன்று ஆண்டு முழுதும் பயன்தரும் இம்மரம், 80-100 ஆண்டுகள் தொடர்ச்சியாக வளர்ந்து, பயன் தரும். ஆப்பிரிக்கா வின் சில பகுதிகளில் இப்பனையிலிருந்து பதநீரும் எடுக்கப் படுகின்றது. இம்மரத்தின் பழத்திலிருந்து இருவித எண்ணெய் எடுக்கப்படுகின்றது. நார்ப்பகுதி யான மேல் தோலிலிருந்து கிடைக்கும் எண்ணெய் சற்றுச் சிவப்பு நிறத்துடன் காணப்படுவதால் இம் மரத்தைச் சிவப்பு எண்ணெய்ப் பனை என்றும் கூறுவதுண்டு. இம்மரம் முதலில் மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் தோன்றியது என்பர். குக் என்ற அறிவியலார் பிரேசிலில் இப்பனை தோன்றியது என்றும், கார்னர் என்ற தாவர வல்லுநர் இப்பனையின் விதைகள் தென் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்காவிற்குப் பரவி இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். பின்பு சுமத்ராவிற்கும், மலேசியாவிற்கும் பரவிய இப்பனை, தற்போது இந்தோனேசியா. மலேசியா, நைஜிரியா, ஐவரிகோஸ்ட், தென் அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில், கோஸ்டாரிக்கா, கோண்டூராஸ், மெக்சிகோ. பனாமா, வெனின்சுலா,சூரினாம், பெரு, நிக்கரூவா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது. ஓடரா இது தாவரப் பிரிவில் அரிகேசி என்ற பனைக் குடும்பத்தில், எலிஸ் என்ற இனத்தைச் சேர்ந்தது. இதில் ஒலிஃபெரா, மடகாஸ்கரியன்சிஸ், கினன்சிஸ், என்ற நான்கு சிற்றினங்கள் உண்டு. எண்ணெய்ப்பனை எலிஸ் கினன்சிஸ் என்ற சிற் றினத்தைச் சேர்ந்தது. இந்தச் சிற்றினம் சிரட்டை யின் அடிப்படையில் மாக்ரோகாரியா அல்லது காங்கே, டியூரா அல்லது டெலி, தெனரா, பிசிபெரா எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இறுதியிலுள்ள வகைகளையும் முதலிரு வகைகளுடன் பிணைத்து எலிஸ் கிளன்சிஸ் மாக்ரோ காரியா, எலிஸ் சிளன்சிஸ் டியூரா என்ற இரண்டே வகைகளாகப் பிரித்துக் கூறுவதும் உண்டு. வடக்கில் 160 அகலாங்கு (latitude) தெற்கில் 15° அகலாங்கு ஆகியவற்றின் உள்ளமைந்த பகுதியில் சம தட்ப வெப்ப நிலையில் இப்பனைகள் அதிகமாக வளர் கின்றன. ஆண்டுக்கு 2500-3500 மி.மீ. மழை பொழியும் இடங்கள் இவற்றிற்கு ஏற்றவை. எனினும் 1500 மி.மீ. மழை உள்ள சமவெளிகளிலும் வளரும் திறனுடையவை. பயிரிடும் முறை. முதிர்ந்த விதைகளைச் செப் பனிடப்பட்ட நாற்றங்கால்களில், 60-80 செ.மீ. இடைவெளியில் விதைப்பது வழக்கம். 6-10 வாரங் களில் விதை முளைக்கும்; முதல் வேர் தோன்றிய வுடன் குருத்து மேல் நோக்கி வளரத் தொடங்கும். பின்னர் பக்க வேர்களும் புதிய இலைகளும் தோன்றும். முதல் 60 நாள் வரை கன்று தன்னுள் இருக்கும் உணவைச் சார்ந்தே வளர்கின்ற றது. க் கன்றுகள் 4-6 இலைப்பருவம் அடையும்போது பிடுங்கி நடப்படுகின்றன. குறைந்த அளவில் பாஸ்ஃ பரஸும், நைட்ரஜனும் உரமாக நாற்றங்காலில் இடப்படுகின்றன, பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி, விதைகளை அவற்றில் தனித்தனியாக ஊன்றி வளர்ப்பது புதிய நாற்றங்கால் முறை ஆகும். மரத்திற்கு மரம் 9 மீட்டர் டைவெளி விட்டு 90890×90 செ.மீ. அளவுக் குழிகளில் கன்றுகள் நடப்படுகின்றன. இவ்வாறு நடும்போது ஹெக்டே ருக்கு 140 மரங்கள் வரை நடலாம். இப்பனையின் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், பொட்டா சியம் ஆகியவை மிகுந்த அளவிலும், மக்னீசியம். சுண்ணாம்பு, கந்தகம், இரும்பு, மாங்கனீஸ் ஆக கியவை குறைந்த அளவிலும் தேவைப்படும். வளர்ச்சி அடைந்த ஒரு பனைக்கு ஆண்டுக்கு அம்மோனியம் சல்ஃபேட் 4 கிலோ, சூப்பர் பாஸ்ஃபேட் 3 கிலோ. பொட்டாசியம் குளோரைட் 2 கிலோ, மக்னீசியம் குளோரைட் 1.5 கிலோ தேவைப்படும். மரத்தின்வளர்ச்சி. இலைக் கணுக்கள் தோன்று வதற்கு முன்பே கன்றுகளின் துார்கள் பக்கவாட்டில் பருத்து வளர்கின்றன. பின்னர், இலைக் கணுக்கள் எண்ணெய்ப்பனை