142 எண்ணெய் மீட்பு முறை
142 எண்ணெய் மீட்பு முறை வெளியே தெரியத் தொடங்கியபின், தண்டு மேல் நோக்கி வளரத் தொடங்கும். இலைக்கணுவின் இடைவெளி 14-25 செ.மீ இருக்கும். பொதுவாக. மரம் ஆண்டு தோறும் 35-75 செ.மீ. உயரம் வளர் கிறது. வளர்ச்சி அடைந்த பனையின் குருத்தை ஆய்வு செய்தால் 50க்கும் மேற்பட்ட இளம் ஓலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருப்பதைக் காணலாம். மரத்தின் கொண்டைப் பகுதியில் 36-40 ஓலை கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன. நன்றாக வளர்ச்சியடைந்த ஓலைகளின் நீளம் 5 6 மீட்டர் இருக்கும். அடி மட்டை 120 செ.மீ. நீளத்தில் குட்டையாகவும் வகைக்கு ஏற்ற நிறத்துடனும் இருக்கும். ஆண்டு தோறும் 18-24 ஓலைகள் தோன்றி ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்குப் பின் பழுத்து உதிர்ந்து விடும். காய் ம் மஞ்சரிகள் 3-4 ஆண்டுகளில் வெளிவரத் தொடங் கும். ஒரே மரத்தில் ஆண், பெண் மஞ்சரிகள் தனித்தனியே காணப்பட்டாலும், ஒரு சில மரங் களில் ஒரே மஞ்சரியில் ஆண், பெண் பூக்கள் தோன்றுவதும் உண்டு. சில சூழ்நிலைகளில் இரு பால் பூக்களும் தோன்றுவதுண்டு. ஒரே மரத்தில், இரண்டு பூங்குலைகள் ஒருங்கே பருவமடைவ தில்லை என்பதால், அயல் மகரந்தச்சேர்க்கை இப் பனையின் இயல்பாகி விட்டது. கருத்தரித்த 60-70 நாள் வரை காயின் எண்டஸ் பர்ம் நீர்ம நிலையில் இருந்து, 100 நாளில் அது திண்ம நிலையடையும். காய்களில் எண்ணெய்ச் சத்து 70 நாளில் தோன்றத் தொடங்கி, 110-140 நாளில் முழுமை அடைகின்றது. பூ காயாக வளர்ச்சியடைய 166-170 முதிர்ந்து நாளாகும். மரம் ஒன்றிற்கு ஏறத்தாழ 30 கிலோ எடையுள்ள விதையும், அதிலிருந்து 3 கிலோ பருப்பும். 3 கிலோ எண்ணெயும் கி டைக்கின் றன. அனைத்து இன எண் ணெய்ப் பனைகளிலும் 32 குரோமஸோம்கள் காணப் படுகின்றன. இவற்றில், 8 குரோமஸோம்கள் மற்ற 24ஐ விடச் சற்று நீளமாக இருக்கும். மலேசியா போன்ற நாடுகளில் மஞ்சரிகளில் காய்களின் எண்ணிக்கையைக் கூட்டவும். எண்ணெய்ச் சத்தைப் பெருக்கவும், தண்டின் வளர்ச்சி வேகத் தைக் குறைக்கவும் டியரா வகையையும், பிளிபெரா வகையையும் ஒட்டு மூலம் இணைத்து ஒரு புதிய ஒட்டு வகையை உற்பத்தி செய்துள்ளனர். ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளில் ஒலிபெரா இனத்தை யும், எலிஸ் கிளன்சிஸ் னத்தையும் கரு ஒட்டு மூலம் இணைத்து மெலனோகாக்கை என்ற ஒட்டு வகை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் உற்பத்தி. விதையில் 16-18 % எண்ணெய்ச் சத்து உண்டு. பழத்தில் நார்ப் பகுதி யான மேல் தோட்டில் சிவப்பு நிற எண்ணெயும், பருப்பில் நிறமற்ற எண்ணெயும் கிடைக்கின்றன. சமையலுக்குப் பயன்படும் எண்ணெயில் கொழுப்பு அமிலம் 5%க்கும் குறைந்தே இருக்க வேண்டும். எண்ணெயைப் பிரித்து எடுக்க கையாளப்படுகின்றன. அடர் எண்ணெய்த் தயாரிப்பு. ஊற முறைகள் வைத்த காயைச் செக்கில் வைத்து நசுக்கி எடுக்கும்போது 55-60% எண்ணெய் மட்டுமே நீக்கப்படும். அடர்த்தி குறைந்த எண்ணெய்த் தயாரிப்பு. காய் களை நீரில் கொதிக்க வைத்துக் கட்டையால் அடித்து நசுக்கித் தண்ணீரில் மிதக்கும் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது. இம்முறைப்படி 55% எண்ணெய் மட்டுமே எடுக்கப்படும். இந்த எண்ணெய் தூய்மை யாக இருப்பதால் சமையலுக்குப் பயன்படுகிறது. எந்திரம் மூலம் புதிய முறைகளைக் கையாண்டு எண்ணெயைத் தோலிலிருந்தும், பருப்பிலிருந்தும் நீக்கும் முறையில் 85-95% எண்ணெயைச் சேகரிக்க முடியும். இ. ஹென்றி லூயி எண்ணெய் மீட்பு முறை எண் பெட்ரோலிய எண்ணெய்ப் படுகையில் உள்ள ணெய் முழுமையையும் எடுப்பது என்பது முற்றிலும்