எண்ணெய் மீட்பு முறை 143
நிறைவேறாத ஒன்று. ஆனால் எல்லா வழிகளையும் பின்பற்றி இயன்ற அளவு மிகுதியான எண்ணெயை எடுக்கும் முறைக்கு மீட்பு முறை என்று பெயர். சாதாரணமாக தானே வழங்கும் எண்ணெய்க் கிணறு. எக்கிகள் மூலம் எண்ணெய் எடுக்கும் கிணறுகள் என இவ்வகைக் கிணறுகளில் பல வகை உண்டு. இக்கிணறு களில் இயல்பாக வரும் எண்ணெயின் அளவு நாட் படக் குறைந்து ஒரு நிலைக்குப்பிறகு முற்றிலும் நின்றுவிடும். இந்நிலையில் எண்ணெய்ப் படுகையில் எண்ணெய் இல்லையென்று கருதலாகாது. இயல்பாக எடுக்கும் எண்ணெய்க்குப்பிறகும் ஒரளவு எண்ணெய், படுகையில் இருந்து கொண்டே இருக்கும். இந்த எண்ணெயை வேறு பல முறைகளினால் எடுப் பதையே மீட்பு முறைகள் என்பர். மீதமுள்ள எண்ணெயை எடுக்காமல் விட்டுவிட்டால் அந்த எண்ணெய் வீணாகிவிடும். ஓர் எண்ணெய்க் கிணற்றிலுள்ள முழு எண்ணெயையும் எடுக்க யலாமைக்கு காரணங்கள் உண்டு. அவை, பெட்ரோலிய எண்ணெயில் ஓட்டமின்மை மற்றும் தொழில் நுட்ப மேம்பாடு இல்லாமை ஆகும். எண்ணெய்ப்படுகைகளின் தன்மை. என்ணெய்ப் படுகைகள் பெரும்பாலும் மணற்பாறை, சுண்ணாம்புப் பாறை, களிமண் பாறைகளிலேயே காணப்படுகின்றன. பம்பாய்க் கடல் அண்மைப் பாறைகள் சுண்ணாம்புப் பாறையிலும், தமிழகக் கடல் அண்மைப் பாறைகள் மணற் பாறையிலும் கிடைக்கின்றன. மணற்பாறைகளில் ஒரு துகளுக்கும் மற்றொரு துகளுக் கும் உள்ள இடைவெளியே துளையாக அமைகிறது. சுண்ணாம்புப் பாறையில் அரிமானம் காரணமாக நீண்ட பொந்துகள் உண்டாகின்றன. மணற்பாறைத் துளைகளிலும், சுண்ணாம்புப் பாறைப் பொந்து களிலும் பெட்ரோலிய எண்ணெய் தேங்கியுள்ளது. இவ்வாறு தேங்கிய எண்ணெய் தாளாகவோ,எக்கிகள் மூலமோ எடுக்கப்பட்டுப் புவிக்கு வெளியே கொண்டு வரப்படுகின்றது. சிலசமயங்களில் துளைகள் மற்றும் பொந்துகள், களிமண் போன்ற பொருள் களால் அடைபட்டுவிடும். அப்பொழுது எண்ணெய் வருவது நின்றுவிடும். சிற்சில இடங்களில் எண்ணெய் வளம் பல படிவுகளாக ஓன்றன் மேல் ஒன்றாக அமைந்திருக்கும். இப்படிவுகளில் துளைகளின் தன்மை மாறுபட்டிருந் தால் எண்ணெய் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு ஓடிச்செல்லும். முக்கியமாக நீர் உள்ளே ஓடும்போது எண்ணெயையும் உடன் கொண்டு சென்றுவிடும். மேலும், நீரோடு சேர்ந்த எண்ணெய், நீர்க்கலவையாக மாறுவதும் உண்டு. அவ்வாறு வேறு படிவுக்குச் சென்ற எண்ணெயையும் நீரோடு கலந்த கலவையையும் எடுத்துப் பயன்படுத்துவது மிகவும் கடினம். எண்ணெய் மீட்பு முறை 143 பொதுவாக எண்ணெய்ப் படுகைகள் சீராக இருந்தால் இயல்பாகவே அதிக அளவு எண்ணெய் பெற முடியும். மீட்பு முறைகள் எதையும் பயன் படுத்தத் தேவை இல்லை. சிற்சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் படுகை சீராக இருந்தாலும் கூட எண்ணெய் எடுப்பது கடினமாக அமையலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள கலிஃபோர்னி யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எண்ணெய்க் கிணற்றில் எண்ணெய் எடுக்க மிகவும் இன்னலுற வேண்டியதாயிற்று. இக்கிணற்றிலுள்ள எண்ணெய் யின் நெகிழ்ச்சி மிகக் குறைவு; வெப்பமும் குறைவு. எனவே எண்ணெய் நீர்மமாகவும் இல்லாமல் திண்மப்பொருளாகவும் இல்லாமல் ஒருவித திண்ம- நீர்ம நிலையில் இருந்ததால் இயல்பாக எண்ணெயை மேலே கொண்டு வர முடியவில்லை. வெப்பமுறை நுட்பங்கள். பெட்ரோலிய எண் ணெய்த் துறையில் ஒரு மாபெரும் புரட்சி சூயஸ்கால் வாய் மூடப்பட்டவுடனும், எண்ணெய் வள நாடுகள் திடீரென விலையைப் பன்மடங்கு உயர்த்திய போதும் ஏற்பட்டது. இந்த இரண்டு காலங்களிலும் எண்ணெய்த் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பிடத்தக்க வளர்ச்சி, எண்ணெய் தேடும் பணி. எண்ணெய்க் கிணறு தோண்டும் பணி, எண்ணெய் தேக்கி வைக்கும் கொள்கலங்கள், மீட்பு முறைகள், மிகு மீட்பு முறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டன. அப் போது தோன்றிய தொழில் நுட்ப முறைதான் வெப்ப மீட்பு முறையாகும். இம்முறையில் முக்கியமானவை நீராவியால் நிரப்புதல், நீராவியை உட்செலுத்துதல், காற்று மற்றும் நீரை உட்செலுத்துதல் ஆகும் குழாய்க் கிணற்றின் உள்ளே நீராவியை மிகுதி யான அளவு செலுத்தி, கிணறு மற்றும் படுகைப் பகுதிகளை நீராவியால் நிரப்பச் செய்வதுண்டு. வளிம விசை உள்ள கிணறுகளில் இம்முறை பெரிதும் பயன்பட்டது. இம்முறை ஒரு சிக்கனமான முறை என்றாலும் எண்ணெய்க் குழாய்கள் நீராவியால் சூடாகியவுடன் குழாயை நோக்கி எண்ணெ ய் வருவது தடைப்பட்டு விடுவதால் 5-20% எண்ணெயே மீட் கப்படுகிறது. ஆனால் குழாய்க்கிணறுகள் நெருக்கமாக அடுத்து அடுத்து இருந்தால் 50% வரை மீட்கலாம். நீராவியை உட்செலுத்துதல் என்பது, நீராவியை ஒரு குறிப்பிட்ட அளவு உட்செலுத்தி எண்ணெயை மேலே வரச்செய்வதாகும். இம்முறையில் 50% எண்ணெயை மீட்கலாம் என்றாலும் இதன் செலவு மிக அதிகம். எடுக்கும் எண்ணெயில் மூன்றில் ஒரு பங்கு நீராவி தயாரிப்பதற்கே செலவழிக்கப்படுகிறது. ஆழம் குறைவான கிணறுகளில், நெகிழ்வு குறைந்த எண்ணெயை எடுக்க ஆகும் செலவு இன்னும் அதிக மாகிறது. எண்ணெய்ப் படுகைகளில் வெப்பம்